தமிழ் சினிமாவில் சாதி பாகுபாடுகள் நிறைய இருப்பதாக சமீபமாக புகார்கள் எழுந்து வருகின்றன. சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் கலையரசன், நான் பா ரஞ்சித் இயக்கும் படங்களில் தொடர்ந்து நடிக்கிறேன். அவருடன் தொடர்பில் நான் இருப்பதால் எனக்கு பல பட வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. தமிழ் சினிமாவில் சாதி பார்ப்பது அதிகரித்துள்ளது என்று கூறியிருந்தது வைரலானது.
விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை மீரா மிதுன் ஏற்படுத்தி வந்தார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் உள்ள பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இயக்குனர்கள் மற்றும் நடிகர் நடிகர்களை வெளியேற்ற வேண்டும் என்று சாதி வெறியோடு மீரா மிதுன் பேசியிருந்தார்.

இதைத் தொடர்ந்து நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னி அரசு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் நடிகை மீரா மிதுன் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த சைபர் க்ரைம் போலீசார் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அதன்பிறகு நடிகை மீரா மிதுன் ஜாமீனில் வெளியே வந்தார்.
அதன் பிறகு விசாரணைக்கு நேரில் ஆஜராகாமல் போலீசுக்கு டிமிக்கி கொடுத்து வந்த நடிகை மீரா மிதுன் தொடர்ந்து அவர்களுக்கு சவால் விடும் வகையில் வீடியோவை வெளியிட்டு இருந்தார். கடந்த மூன்று ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மீரா மிதுனை கடந்த 11ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து டெல்லியில் தலைமறைவாக இருந்த மீரா மிதுனை டெல்லி போலீசார் கைது செய்து செய்தனர். அவரை தற்போது டெல்லி போலீஸ் சார் காப்பகத்தில் வைத்துள்ளனர். இந்நிலையில் நடிகை மீரா மிதுன் கைது விவகாரம் குறித்து பேசிய நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் சில விஷயங்களை பகிரங்கமாக பேசி இருக்கிறார்.
இதுகுறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன். நடிகை மீரா மிதுன் சொல்வது போல் சினிமாவில் சாதி பார்த்து தான் வாய்ப்பு வழங்கப்படுகிறது. பட்டியல் இனத்தைச் சேர்ந்த இயக்குனர்கள் அவர்கள் சாதியினருக்கு தான் வாய்ப்பு தருகிறார்கள். எனக்கு தெரிந்தவரை இயக்குனர் விசு முதுகை தடவி பூணூல் இருக்கிறதா என்று பார்த்து தான் வாய்ப்பு தருவார்.
இதனால் சினிமாவில் சாதி பாகுபாடு இருப்பது உண்மைதான் என்று பகிரங்கமாக நடிகர் மற்றும் பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் மற்றும் இயக்குனர் விசு தமிழ் சினிமாவில் மிக நல்ல படைப்புகளை ரசிகர்களுக்கு தந்தவர். அவரது படங்கள் அனைத்துமே குடும்ப உறவுகளின் மேன்மையை, அதில் உள்ள சிக்கல்களை பேசியிருக்கின்றன.
குறிப்பாக சமூக அவலங்களின் கொடுமைகளை ஏற்ற தாழ்வுகளை வெளிச்சம் போட்டு காட்டும் மிக சிறந்த படங்களாக இருந்திருக்கின்றன. அப்படிப்பட்ட இயக்குனர் விசு, தனது படங்களில் நடிக்க பூணூல் போட்டவர்களை தான் தேர்வு செய்வார் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியிருப்பது ரசிகர்களுக்கு பலத்த ஆச்சரியத்தை அதிர்ச்சியை தந்துள்ளது.

