2026 தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் கள நிலவரம் என்ன என்பது குறித்த கருத்துக்கணிப்பு ஒவ்வொரு தொகுதியாக வெளியாகி வருகிறது, அந்த வகையில் தென் மாவட்டத்தின் தலைநகரான மதுரையில் உள்ள பத்து தொகுதியில், ஓட்டுக்கு பணம் கொடுப்பதை திருமங்கலம் பார்முலா என்கிற அளவுக்கு தமிழகம் முழுவதும் புகழ் பெற்ற திருமங்கலம் தொகுதியின் கள நிலவரம் என்ன என்பதை பார்க்கலாம்.
திருமங்கலம் பார்முலா என்று சொல்ல கூடிய 2009 ம் ஆண்டு திமுக ஆட்சியில் நடைபெற்ற திருமங்கலம் இடைதேர்தலில் திமுக பெற்ற வெற்றி தான் இந்த தொகுதியில் திமுகவின் கடைசி வெற்றியாக இருந்து வருகிறது. அதன் பின்பு நடந்த 2011, 2016, 2021 ஆகிய மூன்று சட்டமன்ற தேர்தல்களில் தொடர்ந்து அதிமுக வெற்றி பெற்று வருகிறது. ஆனால் கடந்த மூன்று தேர்தலில் அதிமுக வெற்றி வித்தியாசத்திற்கான வாக்கு சதவிகிதம் என்பது குறைந்து கொண்டே வருகிறது.

2011 தேர்தலில் 11 சதவிகித வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அதிமுக, அடுத்து 2016 தேர்தலில் 9 சதவிகித வாக்கு விதியசத்தில் வெற்றி பெற்றது, அடுத்து கடைசியாக நடந்த 2021 தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெறும் 6 சதவிகித வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் மணிமாறனை எதிர்த்து வெற்றி பெற்றார் ஆர் பி உதயகுமார் . கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவில் ஓ பன்னீர் செல்வம் இருந்தது பலமாக இருந்தது.
ஆனால் தற்பொழுது அதிமுகவில் இருந்து ஓ பன்னீர் செல்வம் வெளியேற்ற பட்டது , அதிமுகவுக்கு பலவீனமாக பார்க்க படுகிறது. மேலும் TTV தினகரன் தேசிய ஜனாநாயக கூட்டணியில் இடம்பெற்றாலும், கடந்த காலத்தில் TTV தினகரன் மற்றும் சசிகலா ஆகியோரை மிக கடுமையாக விமர்சனம் செய்தவர் ஆர் பி உதயகுமார் , அந்த வகையில் TTV தினகரன், சசிகலா ஆதரவாளர்களின் வாக்குகள் ஆர் பி உதயகுமாருக்கு எதிராகவே திரும்பும் என்கிறது கள நிலவரம்.
மேலும் திருமங்கலம் தொகுதியில் தேமுதிகவுக்கு கணிசமான வாக்கு வாங்கி உள்ளதை கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நிரூபித்து காட்டியது, இந்நிலையில் வரும் 2026 சட்டசபை தேர்தலில் திமுக உடன் தேமுதிக கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், திமுக சார்பில் இந்த தொகுதியில் மீண்டும் போட்டியிட இருக்கும் மாவட்ட செயலாளர் மணிமாறன் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்கிறது திருமங்கலம் தேர்தல் கள நிலவரம்.
இந்நிலையில் திருமங்கலம் தொகுதியில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த முத்துராமலிங்கம் 2021 திமுக ஆட்சிக்கு பின்பு அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்து கொண்ட நிலையில், திருமங்கலம் தொகுதியில் திமுக வேட்பாளராக களம் இறங்க இருக்கும் மணிமாறனுக்கு கூடுதல் பலமாக அமைத்துள்ளது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட மணிமாறன், முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமரை வீழ்த்தி வெற்றி பெற்றால் திமுக அமைச்சரவையில் மணிமாறனுக்கு இடம் உண்டு என உறுதி படுத்தி இருந்தது.
இதனால் மணிமாறனுக்கு எதிராக சில உட்கட்சியினர் செய்த உள்ளடி வேலையும் கடந்த 2021 தேர்தலில் மணிமாறன் தோல்வி அடைய காரணமாக அமைத்தது, தற்பொழுது திமுக மாவட்ட செயலாளரான மணிமாறன் கடந்த நான்கு வருடத்தில் உள்ளடி வேலை செய்தவர்களை எல்லாம் அடையாளம் கண்டு சரி செய்துள்ள நிலையில், வரும் 2026 சட்டசபை தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் மணிமாறன் வெற்றி பெறுவதர்க்கு அதிக வாய்ப்பு உள்ளது என்கிறது கள நிலவரம்.

