விரட்டியடிக்கப்படும் தமிழ் சினிமா நடிகர்கள்… போராட்டத்தில் குதித்த தெலுங்கு சினிமா… எதற்கு தெரியுமா.?

0
Follow on Google News

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களை தவிர்த்து பல முன்னனி நடிகர்கள் நடிக்கும் படங்கள் கூட தொடர் தோல்வியை சந்தித்து அந்த படத்தின் தயாரிப்பாளர் மீண்டும் படம் தயாரிக்காதவாறு மிக பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. அதே நேரத்தில் பிறமொழிப் படங்கள், குறிப்பாக தெலுங்கு சினிமா தமிழகத்தில் வெற்றி பெற்று வசூலை வாரி அள்ளி குவித்து வருகிறது.

இதற்கு முக்கிய காரணம் தமிழ் சினிமாக்களில் பட்ஜெட்டில் 80 சதவீதம் நடிகர்களின் சம்பளத்திற்கே சென்று விடுகிறது. மீதம் 20 சதவீதத்தில் மட்டுமே அந்த படம் எடுக்கப்படுகிறது. இதனால் இந்த படத்தின் தரம் மிகக் குறைந்த அளவே உள்ளது. ஆனால் பிற மொழி படங்களில் பட்ஜெட்டில் நடிகர்களின் சம்பளம் 40 சதவீதமாகவும் அந்தப் படத்திற்கு செலவிடும் தொகை சுமார்60 சதவிகிதம் செலவு செய்வதால் அந்த படத்தின் தரம் வேற லெவலில் உள்ளது.

ஒரு காலத்தில் தெலுங்கு சினிமாவை கேலி கிண்டல் செய்து கொண்டிருந்த தமிழ் சினிமா துறையினர் அண்ணார்ந்து பார்க்கும் வகையில் தெலுங்கு சினிமா மிக பெரிய வளர்ச்சியை பெற்று, இன்று இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களை தன் வசப்படுத்தியுள்ளது. மேலும் தெலுங்கு பட முன்னணி நடிகர் மற்றும் இயக்குனர்களின் அடுத்த அப்டேட் என்ன என தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தமிழ் சினிமா துறையினர் காலத்திற்கேற்ப தெலுங்கு சினிமாவுடன் இணைந்து பயணிக்க தொடங்கியுள்ளனர். அதன் படி முன்னணி தமிழ் சினிமா இயக்குனர்கள் தெலுங்கு நடிகர்களை வைத்து படம் இயக்கத் தொடங்கி விட்டார்கள், அதேபோன்று முன்னணி தமிழ் சினிமா நடிகர்கள் தெலுங்கு சினிமா இயக்குனர் படங்களில் நடிக்க தொடங்கி விட்டார்கள். இது தெலுங்கு சினிமா துறையினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமா அழிவை நோக்கி பயணிக்க ஒரே காரணம் நடிகர்கள் வாங்கும் அதிக சம்பளம் தான் என்பது மறுக்க முடியாத உண்மை. இதனால் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம், ஜெமினி, பிரசாத் போன்ற தயாரிப்பு நிறுவனங்கள் படம் தயாரிக்கும் தொழிலையே விட்டு விட்டனர். இந்நிலையில் தமிழ் சினிமாவை அழிவின் விளிம்பிற்கு அழைத்து சென்ற அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்கள் தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுப்பதை தெலுங்கு திரையுலகம் விரும்பவில்லை என கூறப்படுகிறது.

அவர்கள் தெலுங்கு தயாரிப்பாளர் மற்றும் தெலுங்கு இயக்குனர் படத்தில் நடிக்கலாம், ஆனால் அவர்கள் சம்பளம் படத்தின் பட்ஜெட்டில் இருந்தும் 30 முதல் 40 சதவிகிதம் தான் இருக்க வேண்டும், இல்லை என்றால் தமிழ் சினிமாவை அளித்தது போன்று தெலுங்கு சினிமாவையும் அழிவின் விளிம்பிற்கு அழைத்து சென்று விடுவார்கள் என்கிறது தெலுங்கு திரையுலகம். இதனைத் தொடர்ந்து தெலுங்கு சினிமா தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருக்கிறார்கள்.

சினிமா டிக்கெட் விலை உயர்வு,நடிகர் நடிகைகளின் சம்பளம் உயர்வு ஆகியவற்றை தொடர்ந்து, தங்களுக்கும் சுமார் 45 சதவீதம் வரை சம்பள உயர்வு அளிக்க வேண்டும் என்று தெலுங்கு திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தை தொடங்க இருக்கிறது. ஆனால் இந்த போராட்டத்தின் பிண்ணனி தமிழ் நடிகர்களுக்கு அதிக சம்பளம் கொடுத்து படம் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் மறைமுகமாக வேறு ஒரு காரணத்தை தெரிவித்து இந்த போராட்டம் நடக்க இருக்கிறது என கூறப்படுகிறது.

மேலும், தமிழ் சினிமா நடிகர்களுக்கு அதிகம் சம்பளம் கொடுப்பதால், எதிர்காலத்தில் தெலுங்கு சினிமாவும் தமிழ் சினிமா போன்று அழிவை நோக்கி சென்றுவிடும் ஆகையால், அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களை சினிமாவில் இருந்தே துடைத்து எறியப்படவேண்டும் என்கிற உள்நோக்கம் தான் தெலுங்கு சினிமா தொழிலாளர்கள் போராட்டத்தை முன்னெடுக்க காரணம் என கூறப்படுகிறது.

லெஜெண்ட் சரவணன் திமிர் பேச்சு… அமிதாப்பச்சன், ரஜினியை பற்றி என்ன சொன்னார் தெரியுமா.?