மூத்த பத்திரிகையாளர் ஒருவர் நடிகர் விஜய் குறித்தும் அவர் மீது எழும் சர்ச்சைகள் குறித்தும் வெளிப்படையாக பல விஷயங்களை பேசி இருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு ஜனநாயகன் படம் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடந்தது. அதில் விஜய் பேசிய வார்த்தைகள் பெரிய அளவில் கவனம் பெற்றன. அந்த மேடையில் பேசிய விஜய், சினிமாவில் 33 ஆண்டுகள் இருந்துவிட்டேன். இனிமேல் அடுத்த 33 ஆண்டுகள் தமிழ்நாட்டு மக்களுக்காக உழைக்கப் போகிறேன் என்று கூறினார்.
அவரது இந்த அறிவிப்பு தமிழக மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்த பிறகு விஜய் முழுமையாக அரசியலுக்காக மட்டுமே தனது நேரத்தை செலவிடப் போகிறார் என்றுதான் பலரும் கருதினர். மேலும் அவரது தனிப்பட்ட வாழ்க்கையையும் அரசியலுக்காக மாற்றிக் கொள்வார் என்றும் நினைத்தனர். விஜய் அரசியலுக்கு வந்த பிறகு எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பார் என்ற கேள்வியும் தொடர்ந்து மக்கள் மத்தியில் பேசுபொருளாக இருந்தது.

அவர் அதிமுகவுடன் சேருவார், காங்கிரஸ் கட்சியுடன் சேரலாம் அல்லது பிற கட்சிகளுடன் கூட்டணி வைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த கட்சியிலும் விஜய் கூட்டணி சேரவில்லை. இதற்கிடையே நடிகை திரிஷாவுடன் அவர் இணைத்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். குறிப்பாக சென்னையில் நடந்த திருமண வரவேற்பு விழாவுக்கு விஜய் திரிஷா இருவரும் ஒரே மாதிரியான நிறத்தில் உடை அணிந்து ஒரே காரில் வந்தது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது சமூக வலைதளங்களில் பலத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது. விஜய் ரசிகர்களே அரசியலில் கவனம் செலுத்த வேண்டிய நேரத்தில் இந்த மாதிரியான சர்ச்சைக்குரிய விஷயங்கள் தேவை தானா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அதுவும் விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி கோர்ட்டுக்கு சென்றுள்ள இந்த சூழ்நிலையில் திரிஷாவுடன் விஜய் காட்டும் நெருக்கமும் நட்பும் இன்னும் அவரது அரசியல் பிம்பத்தை தலைவர் இமேஜை சிதைத்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் பத்திரிகையாளர் அந்தணன் ஒரு நேர்காணலில் சில தகவல்களை வெளிப்படையாக கூறி இருக்கிறார். அதில் அந்தணன் கூறியதாவது, விஜய் எந்த அரசியல் கட்சியுடன் கூட்டணி வைப்பார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் இப்போது சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்களே விஜய் இறுதியில் கூட்டணி வைத்தது நடிகை திரிஷாவுடன் தான் என்று கிண்டல் செய்யும் அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டது. இதனால் விஜயை சுற்றி உருவாகியுள்ள அரசியல் இமேஜ் கடும் பாதிப்பை சந்திக்கும்.
விஜய் நடித்த வாரிசு போன்ற சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் அந்த படங்களுக்கு எதிராக நாங்கள் விமர்சனம் செய்யவில்லை. நடிகர் விஜய் குறித்த பல சர்ச்சைகளில் அவருக்கு ஆதரவாகவே நாங்கள் பேசி வந்தோம். ஆனால் இப்போது உருவாகியுள்ள திரிஷா சர்ச்சை காரணமாக இனிமேல் அவரை பாதுகாக்க முடியாது. ஒரு நடிகராக இருக்கும் போது வரும் சர்ச்சை வேறு.
ஆனால் அரசியலில் களத்தில் இருக்கும் ஒருவருக்கு பொது வாழ்க்கையில் ஒரு கட்டுப்பாடு இருக்க வேண்டும். அரசியலுக்கு வந்த பிறகு ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையும் பொதுமக்களின் கவனத்தில் தான் இருக்கும் என்பதால் அதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதனால் இனியும் நடிகர் விஜய்க்கு ஆதவராக முட்டுக்கொடுக்க முடியாது. அதுவும் திரிஷாவுடன் அவர் காட்டும் நெருக்கத்துக்கு எல்லாம் முட்டு கொடுப்பது மிகவும் தவறாகி விடும் என்றும் அந்தணன் அந்த நேர்காணலில் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

