திருப்பரங்குன்றத்தை கைப்பற்ற வேண்டும்… முதல்வர் போடும் ஸ்கெட்ச்… நேரடியாக களம் இறங்கும் திமுக…

0
Follow on Google News

எந்த நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிக்கலாம் என்கிற பரபரப்பில் தமிழா அரசியல் களம் இருக்க, திமுக – அதிமுக இரண்டு கட்சிகளின் கூட்டணியும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளில் மிக தீவிரமாக இருந்து வருகிறது, பெரும்பாலான தொகுதிகளில் சீட்டிங் எம் எல் ஏ க்களுக்கு அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்க அதிமுக, திமுக இரண்டு கட்சிகளும் முடிவு செய்துள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மதுரையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் திருப்பரங்குன்றம் தொகுதி வரும் சட்டசபை தேர்தலில் அதி முக்கியத்துவம் வாய்த்த தொகுதியாக கருதப்படுகிறது, இதற்கு முக்கிய காரணம் திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்சனை அரசியல் ரீதியாக மிக பெரிய அளவில் உருவெடுத்தது, அந்த வகையில் திருப்பரங்குன்றம் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை மீண்டும் வெற்றி பெற செய்து திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப தூண் விவகாரத்தில் திமுகவுக்கு எதிராக மக்கள் அளித்த தீர்ப்பு இது என்பதை நிரூபிக்க வேண்டும் என பாஜக மிக தீவிரமாக இருக்கிறது.

அதே நேரத்தில் தற்பொழுது திருப்பரங்குன்றம் தொகுதியை கைப்பற்றி தீப தூண் விவகாரத்தை மக்கள் அரசியலாக பார்க்க வில்லை என்பதை நிரூபிக்க வேண்டும் என்கிற முடிவில் திமுக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதி கடந்த 2001 முதல் தற்போது வரை நடந்த தேர்தல்களில், இடையில் நடந்த ஒரு இடைதேர்தல் தவிர்த்து சுமார் 25 வருடமாக அதிமுக கோட்டையாகவே திகழ்ந்து வருகிறது.

கடந்த சட்டசபை 2021 சட்டசபை தேர்தலில் இந்த தொகுதியை திமுக கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கியது, இதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ராஜன் செல்லப்பா சுமார் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார், அந்த வகையில் தற்பொழுது தேர்தல் கள நிலவரப்படி திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக வேட்பாளரை ராஜன் செல்லப்பா வலுவாக இருக்கிறார்.

இந்த தொகுதியில் மீண்டும் திமுக அதன் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கும் பட்சத்தில் மிக எளிதாக ராஜன் செல்லப்பா வெற்றி பெற்று விடுவார், அதே போன்று திமுக நேரடியாக இந்த தொகுதியில் களம் இறங்கும் போது, திமுக வேட்பாளரை பொறுத்து தேர்தல் களம் மாறும் என்கிறது கள நிலவரம். அந்த வகையில் சமீபத்தில் அண்ணா அறிவாலயத்தில் திருப்பரங்குன்றம் தொகுதி குறித்து முதல்வர் முக ஸ்டாலின் திமுக முக்கிய தலைவர்களிடம் ஆலோசனை நடத்தி இருக்கிறார்.

இந்த முறை மதுரையில் திருப்பரங்குன்றம் தொகுதியை கைப்பற்றிய தீர வேண்டும், என முதல்வர் தெரிவித்து இருக்கிறார், மேலும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கினால் இந்த தொகுதியை கைப்பற்ற முடியாது அதனால் நேரடியாக திமுக வேட்பாளரை களம் இறக்க வேண்டும் என அறிவாலயத்தில் நடந்த ஆலோசனையில் முதல்வர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் திமுக சார்பில் வேட்பாளர் யாரை நிறுத்தினால் சரியாக இருக்கும் என திமுகவுக்கு ஆதரவான பெண் நிறுவனம் மற்றும் சில தனியார் ஏஜென்சி கொடுத்த ரிப்போர்ட்டில், திருப்பரங்குன்றம் தொகுதியில் மதுரை திமுக தெற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கீர்த்திகா தங்கபாண்டியன் பெயர் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக தொடர்ந்து திருப்பரங்குன்றம் தொகுதி முழுவதும் , அதாவது பட்டி தொட்டி எங்கும் பல நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வரும் கீர்த்திகா தங்கபாண்டியன், அந்த தொகுதி மக்கள் மனதில் மிக அழமாக தன்னை பதிவு செய்துள்ளதாக திமுக தலைமைக்கு ரிப்போர்ட் சென்றுள்ளது. அந்த வகையில் வரும் 2026 சட்டசபை தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக சார்பில் கீர்த்திகா தங்கபாண்டியன் போட்டியிடவே அதிக வாய்ப்புள்ளது என்றும், அப்படி கீர்த்திகா தங்கபாண்டியன் போட்டியிடும் பட்சத்தில் திமுக – அதிமுகவுக்கு இடையிலான போட்டி மிக கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.