சிட்டாடல் வெப் சீரிஸ் இயக்குனர் ராஜ் நெடிமூர் மற்றும் நடிகை சமந்தா கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டது போல் விஜய் மற்றும் திரிஷா இருவரும் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக பின்னணி பாடகி சுசித்ரா கூறியிருக்கிறார். கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள லிங்க பைரவி கோயிலில் ரகசியமாக விஜய் திரிஷா திருமணம் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் சுசித்ரா அதில் கூறியிருக்கிறார்.
இந்த தகவல் இணையத்தில் வேகமாக பரவி ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே விஜய் மற்றும் திரிஷா ஒரே நிற பட்டாடையில் ஒரே காரில் திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்டது ரசிகர்களின் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த பின்னணியில் சுசித்ரா கூறியிருக்கும் இந்த ரகசிய திருமணம் குறித்த விஷயமும் இன்னும் பரபரப்பை அதிகரிக்க செய்துள்ளது. ஒருவேளை அப்படி நடக்கவும் அதிக வாய்ப்புள்ளது என்று பலரும் இப்போதே பேசத் துவங்கி விட்டனர்.

ஆனால் இதுகுறித்த எந்த அதிகாரப்பூரத் தகவலும் வெளியாகவில்லை. விஜய் திரிஷா குறித்து பரவும் இதுபோன்ற தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பையும் கடும் விவாதத்தையும் ஏற்படுத்தி வருகிறது. சினிமா மற்றும் அரசியல் என்று இரு துறைகளிலும் பிஸியாக செயல்பட்டு வரும் விஜய் இதுகுறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை. சர்ச்சையான கருத்துகளுக்கு பெயர் போன பாடகி சுசித்ரா கூறிய இந்த தகவல் எந்த அடிப்படையில் உண்மையானது அல்லது அவரும் வெறும் யூகத்தின் அடிப்படையில் தான் இதை சொல்கிறாரா என்பது வரும் நாட்களில் உறுதியாகி விடும்.
ஆனால் அதே நேரத்தில் தனது மனைவி சங்கீதா, மகன் ஜேசன் சஞ்சய் மகள் திவ்யா சாஷா மேலும் தனது பெற்றோர் எஸ்ஏ சந்திரசேகர் ஷோபா என தனது குடும்பத்தினர் மீது நடிகர் விஜய்க்கு எந்த விதமான அக்கறையோ அன்போ பாசமோ இல்லாத சூழ்நிலையில் குடும்பத்தை விட்டு முற்றிலுமாக விலகி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் நடிகை திரிஷாவை தயாரிப்பாளர் இல்ல திருமண வரவேற்பு விழாவிற்கு விஜய் அழைத்து வரவேண்டிய அவசியமே இல்லை.
இப்படிப்பட்ட ஒரு சூழலில், நடிகை திரிஷாவுடன் தனக்கு இணக்கமான நெருக்கமான நட்பு இருக்கிறது என்பதை அவர் பொதுவெளியில் எதற்காக வெளிப்படுத்த வேண்டும் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. குடும்ப உறவுகளை விட சக நடிகை ஒருவரை நடிகர் விஜய் முன்னிலைப்படுத்த வேண்டிய அவசியம் என்ன என்பதும் முக்கிய கேள்வியாக இதில் உள்ளது. ஒரு அரசியல் இயக்க தலைவராக அவரை மக்கள் ஏற்றுக்கொண்ட நிலையில் தன் இமேஜ் டேமேஜ் ஆகும் என்பதை கூட யோசிக்காமல் விஜய் இதை செய்யலாமா என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
சமீபத்தில் தவெக சார்பில் நடந்த மகளிர் தின விழாவில் பேசிய நடிகர் விஜய், தனது தனிப்பட்ட குடும்ப பிரச்சனைகள் குறித்து கோடிட்டு காட்டிய அவர், அதெல்லாம் வொர்த்தே இல்லை. நீங்க அதை எல்லாம் பெருசா எடுத்துட்டு கவலைப்படாதீங்க என்கிற ரீதியில் பேசியிருந்தார். 26 ஆண்டுகள் தன்னுடன் வாழ்ந்த மனைவி சங்கீதா குறித்து அவர் அப்படி சொல்லியிருப்பது ரசிகர்கள், தவெக கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தாலி கட்டிய மனைவிக்கே இப்படி ஒரு நிலை என்றால், மக்களின் நிலமை என்னாகும் என்றும் விவாதிக்கின்றனர். இந்த சூழலில் விஜய் திரிஷா ரகசிய திருமணம் குறித்து சுசித்ரா பேசியிருப்பது அது உண்மையாக மாற வாய்ப்புள்ளது என்றும் கூறத் துவங்கி விட்டனர்.

