விஜய் வைத்த டிமாண்ட்…. எடப்பாடி சொன்ன பதில் … வெளியாகும் கூட்டணி குறித்த இறுதி அறிவிப்பு…

0
Follow on Google News

NDA கூட்டணிக்குள் விஜய் வரப்போகிறார் என்கிற , கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்கிற செய்து வெளியாகி தமிழக அரசியலில் மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது, இதற்கு முக்கிய காரணம் வரும் சட்டசபை தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் தமிழகம் முழுவதும் தனித்து போட்டியிட்டால் அவர் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க முடியாது, ஓன்று இரண்டு சட்டமன்ற உறுப்பினர் வேண்டும் என்றால் அவரை சேர்ந்து அவருடைய கட்சிக்கு கிடைக்கும்.

ஆனால் விஜய் தனித்து நின்று யாருடைய ஓட்டுக்களை பிரிக்க போகிறார் என்பதை பொறுத்தே யார் அடுத்து ஆட்சியை பிடிக்க போகிறார் என்பது தெரிய வரும் அந்த வகையில், வரும் சட்டசபை தேர்தலில் திமுக – NDA இந்த இரண்டு கூட்டணியில் யார் வெற்றி பெற வேண்டும் என்பது விஜய் கையில் தான் உள்ளது, அந்த வகையில் விஜய் NDA கூட்டணிக்குள் உள்ளே வந்தால் வரும் சட்டசபை தேர்தலில் மிக எளிதாக NDA கூட்டணி வெற்றி பெற்று விடும் என்பது தான் கள நிலவரம்.

இப்படி ஒரு சுழலில் காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றி கழகம் பக்கம் வரும் என எதிர்ப்பது விஜய் காத்து கொண்டிருக்க, திமுக உடன் கூட்டணியை உறுதி செய்தது காங்கிரஸ், இப்படி ஒரு சூழலில் ஏற்கனவே கரூர் சம்பவத்தின் போதே விஜய் உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய பாஜகவிடம், கூட்டணிக்கு வருகிறேன் என்றும் சொல்லாமல், வரவில்லை என்றும் சொல்லாமல் இருந்து வந்தார் விஜய்,

இதனை தொடர்ந்து விஜய் உடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை கைவிட்டது பாஜக, ஆனால் கரூர் விவகாரத்திற்கு பின்பு பாஜக குறித்து விமர்சனம் செய்வதை தவிர்த்து வந்தார் விஜய், அப்போதே விஜய் பாஜக உடன் சுமுகமாக முடிவு செய்து விட்டார் என பரவலாக பேசப்பட்டு வந்தது, இந்நிலையில் தற்பொழுது காங்கிரஸ் விஜயை ஏமாற்றி விட்டு திமுக பக்கம் சென்ற பின்பு, விஜய் – பாஜக இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கி உள்ளது.

இந்நிலையில் இம்முறை திமுகவை வீழ்த்தியே தீர வேண்டும் என்கிற ஒரே முடிவில் இருக்கும் பாஜக டெல்லி தலைமை, இந்த ஒரு முக்கிய கட்சிகளையும் விட்டு விட கூடாது எல்லாத்தையும் தூக்கி உள்ளே போடுங்க என கூட்டணியை வலுப்படுத்தி வருகிறது, இப்படி ஒரு சூழலில் வரும் சட்டசபை தேர்தலில் விஜய் 15 சதவிகித வாக்குகள் வரை பெறுவார் என கருத்துக்கணிப்புகள் வெளியாகி வரும் நிலையில் விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கு பாஜக டெல்லி தலைமை முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, டெல்லியில் சிபிஐ விசாரணைக்கு சென்ற விஜய்யிடம் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி இருக்கிறது பாஜக தரப்பு, விஜய் டெல்லிக்கு செல்வதற்கு முன்பே, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் பல முக்கிய புள்ளிகள் விஜய்யிடம் கூட்டணி குறித்து பேசி இருக்கிறார்கள், இந்நிலையில் டெல்லியில் விஜய் உடன் நடந்த கூட்டணி பேச்சுவார்த்தையில், விஜய் நேரடியாக முக்கிய டிமாண்ட் களை வைத்து இருக்கிறார்.

அதில தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு, 60 தொகுதி மற்றும் துணை முதல்வர் பதவி வேண்டும் என விஜய் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய பாஜக தரப்பிடம் தெரிவித்து இருக்கிறார், இதனை தொடர்ந்து டெல்லியில் பாஜக தரப்பில் இருந்து எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு இது குறித்து பேச, விஜய் வைத்த டிமாண்டை எடப்பாடி பழனிசாமி ஏற்க மறுத்து விட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது விஜய் கேட்டது போன்று 60 தொகுதி துணை முதல்வர் கொடுக்க எடப்பாடி பழனி சாமி சம்மதிக்கவில்லை என்றும், இதனால் NDA கூட்டணிக்குள் விஜய் வருவது உறுதி செய்யப்படாமல் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியை டெல்லிக்கு அழைத்து பாஜக தரப்பு பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.