மகனை வீட்டை விட்டு வெளியேற்றிய விஜய்… உன் இன்ஷியலே எனக்கு வேண்டாம்… மகன் எடுத்த அதிரடி முடிவு…

0
Follow on Google News

எந்த ஒரு மகனாலும் தன் தாய்க்கு நடக்கும் அநீதியை அநியாயத்தை கண் எதிரே பார்த்துக் கொண்டு பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது. குடும்பத்தின் மூத்த மகன் தலை மகனாக இருக்கும் அவரை ஒரு மகனாக விஜய் அன்பு காட்டி பாராட்டவில்லை. தாலிகட்டிய மனைவி மட்டுமின்றி பெற்ற பிள்ளைகளையும் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தியவர்தான் விஜய்.

தமிழ்நாட்டு மக்கள் கொண்டாடும் ஒரு கதாநாயகன், அரசியல் தலைவராக கொண்டாடுகிற விஜயை அவரது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் பிடிக்காமல் போக காரணம், அந்தளவுக்கு அவர்களின் மனங்களை விஜய் வேதனைப்படுத்தி இருக்கிறார். தனது மோசமான செயல்பாடுகளால் அவர்களை காயப்படுத்தி இருக்கிறார் என்பதே கசப்பான உண்மை. இதனால் விஜய்க்கும் அவரது மகனுக்கும் பலமுறை வாக்குவாதம் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்படி ஒருமுறை நீலாங்கரை பங்களாவுக்குள் அப்பா மகனுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் வீட்டை விட்டு வெளியே போ என்று தயவு தாட்சணயம் பார்க்காமல் பெற்ற மகனை விரட்டியிருக்கிறார் நடிகர் விஜய். 25 வயது ஆண்மகனுக்கு சுர்ரென்று கோபம் தலைக்கேறிய நிலையில் அன்று வீட்டை விட்டு வெளியே போன மகன் ஜேசன் சஞ்சய் இன்று வரை அந்த வீட்டு வாசலை மிதிக்கவில்லை.

ஏதோ கோபத்தில் மகனை திட்டியிருந்தாலும் அதன் பிறகு கோபம் தணிந்து நடிகர் விஜய் தன் மகனை வீட்டுக்குள் அழைத்திருக்க வேண்டும். போன் செய்து வீட்டுக்கு வா என்று கூப்பிட்டு இருக்க வேண்டும். இப்படி அரண்மனை மாதிரி வீடு வாசல் இருக்கும் போது நீ எதுக்கு அபார்ட்மென்டில் ரூம் எடுத்து தங்க வேண்டும்? வீட்டுக்கு வாடா என்று அழைத்திருக்க வேண்டும். ஆனால் ஒரு நல்ல தந்தையாக விஜய் அதை இதுவரை செய்யவே இல்லை.

இந்த சூழலில் விஜயின் மனைவி மகன் மகள் என மூன்று பேருமே விஜய் நமக்கு வேண்டாம் என்று இறுதியான முடிவுக்கு வந்திருக்கின்றனர். லேட்டஸ்ட் தகவலின்படி விஜய் தனது அப்பா இல்லை அவர் எனக்கு அப்பாவாக இருக்க வேண்டாம் என்ற முடிவுக்கு ஜேசன் சஞ்சய் வந்த நிலையில், கெஜட்டில் இருந்து விஜய் பெயரை தந்தை என்பதில் இருந்து நீக்கவும் அவர் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அப்பா என்ற உறவே வேண்டாம் என்ற இறுதி முடிவாக தான் இப்படி கெஜட்டில் இருந்து பெயரை நீக்கும் அளவுக்கு ஜேசன் சஞ்சய் மனநிலை மாறியிருக்கிறது. இப்படி அப்பா மகன் உறவில் பெரிய விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் தவெக கட்சியின் மாநில நிர்வாகியும் 2ம் கட்ட தலைவர்களில் ஒருவருமான ஆதவ் அர்ஜூன் சமீபத்தில் நடந்த தவெக ஆர்ப்பாட்டத்தில் ரஜினி மனவலிமை இல்லாதவர்.

திமுக மிரட்டல்களுக்கு பயந்து அரசியலுக்கு வராமல் தவிர்த்து விட்டார் என்றும் விமர்சனம் செய்து பேசியிருந்தார். அதுவும் ஒருபுறம் இப்போது காட்டுத் தீயாக தவெக மீதும் விஜய் மீதும் பல்வேறு கடும் தாக்குதல்களை உருவாக்கி உள்ளது. இப்போதைய ரஜினி மிகவும் பக்குவபட்டவர். அமைதியானவர். சமுதாயத்தின் பார்வையில் பண்பான மனிதர்.

ஆனால் 1970களின் இறுதியில் ரஜினி போன்ற ஆவேசமிக்க எதையும் கோபமாக கையாள்கிற ஒரு மனிதரை யாரும் நினைத்து கூட பார்க்க முடியாது. அப்படி ஒரு கோபமும் மனவலிமையும் அவர் கொண்டிருந்தார். கடந்த 1996ல் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று பகிரங்கமாக சொன்னவர். அப்படிப்பட்ட ரஜினியா திமுகவை பார்த்து பயப்படுவார் என்று தவெக குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர்.