கரூர் துயர சம்பவம் தொடர்பாக விஜய் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக டெல்லி சென்று இருந்த நிலையில், விஜய்யின் டெல்லி பயணம் அரசியலில் முக்கியதுவம் வைத்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரமாகவே விஜய் NDA கூட்டணிக்குள் வர இருக்கிறார் என்கிற பரபரப்புக்கு மத்தியில், தீடிரென விஜய் டெல்லியில் உள்ள சி பி ஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என பறந்த சம்மன், அதனை தொடர்ந்து விஜய் டெல்லி பறந்தது என இதன் பின்னணியில் உள்ள அரசியல் தமிழக அரசியல் களத்தில் விவாத பொருளாக மாறியது.
இந்நிலையில் விஜய்யின் அரசியலை கரூர் சம்பவத்திற்கு முன், கரூர் சம்பவத்திற்கு பின் என்று பிரித்து பார்க்க வேண்டும் என்று தான் சொல்ல வேண்டும், கரூர் சம்பவத்திற்கு முன் மத்தியில் ஆளும் பாஜக அரசை மிக கடுமையாக விமர்சனம் செய்து வந்த விஜய், கரூர் சம்பவத்திற்கு பின்பு பாஜகவை விமர்சனம் செய்வதை குறைத்து கொண்டு, ஒரு கட்டத்தில் பாஜகவை முழுமையாக விமர்சனம் செய்வதை தவிர்த்தார் விஜய்.

இதற்கு முக்கிய காரணம் கரூர் விவகாரத்தில் ஆளும் திமுக தரப்பு விஜய் பக்கம் இந்த விவகாரத்தை திசை திருப்ப முயற்சிக்க, விஜய்க்கு பக்க பலமாக இருந்து காப்பாற்றியது பாஜக என்பது குறிப்பிடத்தக்கது, உடனே ஹேமா மாலினி தலைமையில் குழு அமைத்து கரூர் அனுப்பியது மத்திய பாஜக அரசு, அடுத்தடுத்து பாஜக தலைவர்கள் கரூர் விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக கருத்துக்களை பதிவு செய்ய, மக்கள் மத்தியில் கரூர் விவகாரம் தொடர்பாக ஒரு புரிதல் ஏற்பட தொடங்கியது.
குறிப்பாக கரூர் விவகாரத்தில் விஜய் அரசியல் வாழ்க்கை முற்றிலும் முடங்கும் ஒரு சூழல் இருந்த நிலையில் பாஜக உதவியுடன் மீண்டும் வந்தார் விஜய் என்றே தான் சொல்ல வேண்டும் , அந்த வகையில் கரூர் விவாகரத்துக்கு பின்பே பாஜக உடன் சுமுகமான ஒரு உறவை திரைமறைவில் ஏற்படுத்தி கொண்டார் விஜய், இதன் தொடர்ச்சியாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மூலம் விஜயை NDA கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான முயற்சியில் இறங்கினர் மத்திய அமைச்சர் அமித்ஷா.
ஆனால் விஜய்யை சுற்றி இருப்பவர்கள் விஜய்யை பாஜக பக்கம் செல்ல விடாமல் தடுத்து விட்டனர். ஆனால் விஜய் தற்பொழுது தன்னை சுற்றி இருப்பவர்கள் அவர்களுடைய தனிப்பட்ட பாஜக வெறுப்பை நம்மிது திணிக்கிறார்கள் என்பதை உணர்ந்து தற்பொழுது பாஜகவுடன் கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவித்து பவன் கல்யாண் மூலம் பேச்சுவார்த்தை நடந்தி இருக்கிறார், இதனை தொடர்ந்து சுமூக முடிவு ஏற்பட்ட உடன் சிபிஐ விசாரணைக்காக டெல்லிக்கு சென்ற விஜய் அங்கேயும் திரை மறைவில் பாஜக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தி இருக்கிறார்.
ஆனால் விஜய் வைத்த டிமாண்ட் எடப்பாடி பழனிசாமியால் ஏற்று கொள்ள வில்லை என தகவல் வெளியான நிலையில், தவெக NDA கூட்டணிக்குள் வருவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது என்கிறது டெல்லி வட்டாரங்கள், இருந்தாலும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது, இப்படி ஒரு சூழலில், டெல்லி சென்ற விஜய் பாஜக தரப்புக்கு ஒரு வாக்குறுதி அளித்து இருக்கும் தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.
வரும் 2029 நாடாளுமன்ற தேர்தலில் , தமிழக வெற்றி கழகம் பாஜக கூட்டணியில் இடம் பெரும், குறிப்பாக தமிழ்கத்தில் 39, புதுச்சேரியில் உள்ள 1 தொகுதி என 40 நாடாளுமன்ற தொகுதியிலும் திமுக கூட்டணி வீழ்த்தப்படும் என பாஜக தரப்புக்கு 2029 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு எதிராக கைகோர்ப்போம் என உறுதி கொடுத்து இருக்கிறார் விஜய், மேலும் 2029 நாடாளுமன்ற தேர்தலில் விஜய் – பாஜக உடன் கைகோர்க்கும் பொழுது, கேரளாவில் NDA கூட்டணி ஹிமாலய வெற்றி பெரும் என கணிக்கப்படுகிறது.
அந்த வகையில் 2029 நாடாளுமன்ற தேர்தலுக்கான தவெக – பாஜக ஒப்பந்தம் தற்போதே உறுதியாகி விட்டது என உறுதி படுத்துகிறது டெல்லி வட்டாரங்கள், இருந்தாலும் தற்பொழுது எடப்பாடி மற்றும் விஜய் இருவருக்கும் இடையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்தி வரும் பாஜக ,2026 தேர்தலில் NDA கூட்டணிக்குள் விஜய்யை கொண்டு வருவதற்கான இறுதி கட்டத்தில் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

