வீர முழக்கம் ஜெய் ஹிந்த்.. மக்களை மடையராகும் தந்திரமே இந்த வேண்டாத பெயர் மாற்றங்கள்.. நடிகை கஸ்துரி ஆவேசம்..

0
Follow on Google News

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரைக்கு நன்றி தெரிவிக்கும் மீதான தீர்மானத்தின் போது சட்டப்பேரவையில் திருச்செங்கோடு எம்.எல்.ஏ.வும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளருமான ஈஸ்வரன் பேசினார். “ஆளுநர் உரையைப் படித்தவுடன் தமிழகம் தலைநிமிர்ந்துவிட்டது. ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால், சென்ற ஆளுநர் உரையைப் பார்த்தேன். கடைசியில் நன்றி, வணக்கம், ஜெய்ஹிந்த் என்று போட்டிருந்தது. ஆனால், இந்த உரையில் ஜெய்ஹிந்த் என்ற அந்த வார்த்தை இல்லை என்பதைப் பதிவு செய்கிறேன்” என்று பேசினார்.

இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, ஜெய் ஹிந்த் என்கிற வார்த்தையை ஆளுநர் உச்சரிக்கவில்லை என்பதால் தமிழகம் தலைநிமிர்ந்துள்ளது என சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் பேசியதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டன எழுந்து வருகிறது, நடிகை கஸ்துரி தனது டிவீட்டர் பக்கத்தில் வந்தே மாதரம், வாழ்க பாரதம், ஜெய்கிந்த் உறக்க சொல்வோம் ஜெய் ஹிந்த் என பதிவு செய்திருந்தார்.

இதற்கு வலைதளவாசி ஒருவர், ஜெய் ஹிந்த் சொன்னால் பெட்ரோல் விலை குறையுமா, சொல்லுங்க சகோதரி வெறும் வாயால் வடை சுட கூடாது என தெரிவித்திருந்தார் இதற்கு பதிலளித்துள்ள நடிகை கஸ்துரி. உயிர் தியாகம் செய்தவர்களின் வீர முழக்கம் ஜெய் ஹிந்த். உடன்பிறப்புக்களின் விதண்டாவாதம் அல்ல. இதில் மொழி/கட்சி பேதம் பார்ப்பவர்கள் இந்தியர்கள்தானா?

சரி உங்க வழிக்கே வர்றேன். நாட்டு பிரச்சினையெல்லாம் தீர்ந்து பாலும் தேனும் ஓடுமா சொல்லுங்க? ஒன்றியம் என்ன, ஆயிரத்து ஒன்றியம்னு கூட கூப்பிட நான் தயார் ! அதிமுக அரசில் ஊர் பெயரையெல்லாம் spelling மாற்றி வைத்தார்கள். அது போலத்தான் இதுவும். எல்லாமே வேண்டாத ஆணி. உண்மையான பிரச்சினையிலிருந்து மடைமாற்றி மக்களை மடையராகும் தந்திரமே இந்த வேண்டாத பெயர் மாற்றங்கள்.

இல்லேன்னா வாயார தமிழகம் , மத்திய அரசு என்று நமக்கு சொல்லி குடுத்த கலைஞரையும் அண்ணாவையும் திருத்த வேண்டிய அவசரம், அவசியம் இப்போ என்ன ? கலைஞருக்கு தெரியாத வரலாறா, அரசியல் சாசனமா? தனித்தமிழ்நாடு முழக்கமெல்லாம் திரும்பி பெற்ற வரலாற்றை இன்றைய திமுகவினர் அறிந்தே இருப்பார்கள் என நடிகை கஸ்துரி பதிலளித்துள்ளார்.