உன் பருப்பு இங்க வேகாது … பிக் பாஸ் விக்ரமன் தோல்விக்கு இது தான் காரணம்..பின்னணியில் நடந்தது என்ன.?

0
Follow on Google News

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக் பாஸ் இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் மிகப்பெரிய ஹிட் அடித்தது, இதற்கு முக்கிய காரணம் அந்த சீசனில் பங்கு பெற்ற ஓவியா, ஜூலி, சினேகன், நமிதா, காயத்ரி ரகுராம் என பலரும் தங்களுடைய உண்மையான தோற்றத்தை வெளிப்படுத்தி வந்ததால். அந்த நிகழ்ச்சிக்கான சுவாரஸ்யம் அதிகரித்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

அடுத்தடுத்து நடந்த பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சிகள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில், தற்போது நடந்து முடிந்துள்ள பிக் பாஸ் சீசன் 6 மிகப்பெரிய விவாத பொருளை உருவாக்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் பங்கு பெற்ற போட்டியாளர்களில் ஜிபி முத்துவுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. ஆனால் ஜி பி முத்துவால் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டின் உள்ளே இருக்க முடியவில்லை, தானாகவே பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேற விரும்பி வெளியேறினார்.

ஆனால் ஜிபி முத்து இருக்கும்வரை அனைவரையும் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து அவருடைய நகைச்சுவைகள் ஒவ்வொன்றும் மக்கள் மத்தியில் மிகுந்த பாராட்டுகளை பெற்று வந்தது. பிக் பாஸ் சீசன் 6 ல் போட்டியாளராக மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டு, இதில் யார் வெற்றியாளர் பெற போகிறார் என்கின்ற பரபரப்புடன், வெற்றியாளர்களை தேர்வு செய்வதற்கான ஒட்டு பதிவும் நடைபெற்றது.

இந்த மூன்று போட்டியாளர்களில் அஷீம், விக்ரமன், சிவின் ஆகிய மூன்று மூவரில் யாரை தேர்ந்தெடுப்பது என்கின்ற கடும் போட்டி நிலவி வந்த நிலையில் , அசீம் நிகழ்ச்சி தொடங்கிய முதல் சக போட்டியாளர்களிடம் முரண்பாடாக செயல்பட்டு வந்தார். மேலும் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியவாறு தொடர்ந்து இறுதி வரை வந்து கொண்டிருந்தார். ஆனால் அவர் நடிக்கவில்லை, இது அவருடைய இயல்பான தோற்றம் என்கிற ஆதரவு இருந்தாலும் கடும் விமர்சனமும் அஷிம் க்கு ஏற்பட்டது.

எஅசிம் மற்றும் விக்ரமன் இருவருக்கும் முதல் இடத்தை பிடிப்பதில் கடும் போட்டி நிலை வந்த நிலையில், விக்ரம் எளிதாக வெற்றி பெறுவார் என பலராலும் கணிக்கப்பட்ட நிலையில், போட்டியின் தீர்ப்புக்கான இறுதி கட்டத்தை நெருங்கிய அந்த நேரத்தில், ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் மெல்ல அரசியல் கலக்கத் தொடங்கியது. ஆம், விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தனது கட்சியை சேர்ந்த விக்ரமனை ஆதரித்து தன்னுடைய சமூக வலைதளத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

மேலும் விக்ரமனை வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று தன்னுடைய ஆதரவை தெரிவித்தார் திருமாவளவன். இதனால் அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் பார்த்து ரசித்து வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் அரசியல் கலக்கப்பட்டதை பெரும்பாலும் விரும்பவில்லை, இதனால் பலருக்கு விக்ரமன் மீது வெறுப்பை ஏற்படுத்தியது.இதனால் விக்ரமனை ஆதரித்தவர்கள் கூட அரசியல் காரணத்திற்காக அவர்களின் வாக்குகளை அஷீம் க்கு அளித்தார்கள்.

இறுதியில் அஷீம் வெற்றியாளராக வெற்றி பெற்றதில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு முக்கிய பங்கு உண்டு என்பதை மறுக்க முடியாது. பொழுது போக்கு நிகழ்ச்சியில் அரசியல் கலந்து விக்ரமனனை தோல்வி அடைய செய்து விட்டு, தற்பொழுது மக்கள் தேர்வு செய்த ஒரு நபரை நடு நிலையோடு, மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வெற்றியாளரை முடிவு செய்த விஜய் தொலைக்காட்சி நிறுவனம் மீது குறிப்பிட்ட ஒரு தரப்பினர் விஜய் தொலைக்காட்சியை புறக்கணிப்போம் என பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

ஆனால் மக்கள் வாக்களித்து தேர்வு செய்த அஷீம் வெற்றியாளராக அறிவிக்காமல் விக்ரமணனை ஒருவேளை விஜய் டிவி அறிவித்திருந்தால், வாக்களித்த மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகளை விஜய் தொலைக்காட்சி சந்திக்க நேரிட்டிருக்கும். அந்த வகையில் அரசியல் சார்ந்து வரும் விமர்சனங்களை விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் பொருட்படுத்தவில்லை என்றும், மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளித்துள்ளோம் என்பதில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.