ராத்திரி நேரம்.. பிரபல ரவுடி உடன் காயத்ரி ரகுராம்.. தோப்பில் நடந்து என்ன.? புகைப்பட ஆதரங்களை வெளியிட்ட பிரபலம்..

0

மதுரை வரிச்சூரை சேர்ந்த பிரபல ரவுடி வருச்சூர் செல்வம். இவர் கட்டப்பஞ்சாயத்து, கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் என பல குற்ற செயல்களில் ஈடுபட்டு மதுரையில் முக்கிய தாதாக்களில் ஒருவராக ஒரு காலத்தில் வலம் வந்தவர், பலமுறை போலீஸ் என்கவுண்டரில் இருந்து தப்பிக்க நேரடியாக நீதிமன்றத்தில் சரண்டராகி தன்னை காப்பாற்றி கொண்டவர் வரிச்சூர் செல்வம்.

கடந்த 2014ம் ஆண்டு கொடைக்கானலில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவரிடம், வரிச்சூர் செல்வம் மற்றும் அவரது கூட்டாளிகள் இணைந்து பண மோசடியில் ஈடுபட்டு அந்த ஹோட்டலை தங்கள் பெயருக்கு மிரட்டி எழுதி வாங்க முயற்சித்தாக கொடைக்கானலில் வைத்து கைது செய்யப்பட்டார் வரிச்சியூர் செல்வம், அப்போது நடந்த போலீஸ் விசாரணையில் திண்டுக்கல், கொடைக்கானல், பழநி, மதுரை ஆகிய இடங்களில் பல தொழில் அதிபர்கள், வரிச்சியூர் செல்வத்தால் ஏமாற்றப் பட்டு, மிரட்டப்பட்டு சொத்துகளை இழந்துள்ளது தெரியவந்துள்ளது.

இது போன்று பல குற்ற பின்னணி கொண்ட வரிச்சியூர் செல்வம், கொடைக்கானல் சம்பவம் முடிந்து அடுத்த சில நாட்களில், நாட்டு வெடிகுண்டு வழக்கில் சிக்கியதால் நிச்சயம் என்கவுண்டர்தான் என்ற அச்சத்தில் கோர்ட்டில் சரணடைந்து தப்பியவர் வரிச்சியூர் செல்வம். இந்த சம்பவத்துக்கு பின்பு குற்றச்செயல்களை குறைத்து கொண்ட வரிச்சியூர் செல்வம் வாழ்க்கையில் வாழ்க்கையை வேறு ஒரு விதத்தில் அனுபவிக்க தொடங்கியுள்ளார்.

நடமாடும் நகைக்கடையாக வலம் வரும் வரிச்சூர் செல்வம், சீசனுக்கு ஏற்ப தன் உடலில் நகையை அதிகரித்துக் கொண்டே இருப்பது இவருடைய வழக்கம். விஐபி அந்தஸ்துக்கு சொகுசு கார், கோவில் போன்ற முக்கிய இடங்களுக்கு சென்றால் விஐபி மரியாதை என வலம் வரும் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் சினிமா தயாரிப்பாளர்களுக்கு கடன் கொடுப்பதாகவும் கூற படுகிறது, அந்த வகையில் சினிமா வட்டாரத்திலும் இவருக்கும் தொடர்பு உண்டு என கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்பொழுது நடிகை காயத்ரி ரகுராம் மற்றும் வரிச்சியூர் செல்வம் ஆகியோர் சர்ச்சை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, ஈரோடு இடைத்தேர்தலில் எடுத்தோம், கவிழ்த்தோம் என முடிவு எடுக்க முடியாது. அதிமுக – பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வெற்றியே முதன்மை நோக்கம் என அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

இதற்கு, பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள காயத்ரி ரகுராம், டிசம்பர் 9 2022 இரவு நீங்கள் எப்படி “எடுத்தோம், கவிழ்த்தோம்” என்பது அனைவருக்கும் தெரியும். மறுநாள் காலை டிசம்பர் 10 2022, நீங்கள் விமானத்தின் அவசரகால கதவை எப்படி “திறந்தோம், மூடினோம்” என்பது கூட அனைவருக்கும் தெரியும் என காயத்ரி ரகுராம் பதில் கொடுத்து இருந்தார்.

இதற்கு திருச்சி சூர்யா, இரவு நேரத்தில் ஒரு தோப்பு போன்று பின்னால் காட்சியளிக்கும் இடத்தில் நடிகை காயத்ரி ரகுராம் உடன் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட திருச்சி சூர்யா, நீயும் இப்படி எங்க போன வந்த என்பதும் எல்லோருக்கும் தெரியும், ராத்திரி அதுவும் ரவுடி கூட தோப்புல உனக்கு என்ன வேலை. நீதானே போட்டோ வீடியோ கேட்டுக்கிட்டே இருந்த.இதுக்கு மேலயும் ஏதாச்சு பேசுனா.? இதுக்கு அப்புறம் நடந்தது எல்லாம் வெளியில வரும் என நடிகை காயத்ரி ரகுராமை எச்சரித்த திருச்சி சூர்யா, பெண்களுக்கு உரிமை தேடித் தர மூஞ்சிய பாரு என தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!