தமன்னா செய்யும் ஓவர் அட்டூழியம்… நாளுக்கு நாள் எல்லை மீறும் அட்ராசிட்டி…

0
Follow on Google News

நடிகைகள் ஆரம்ப கட்டத்தில் சினிமா வாய்ப்பு கிடைத்தால் போதும் என பட வாய்ப்புக்காக பல நடிகைகள் பல கிலோ மீட்டர் பேருந்தில் பயணம் செய்து, பின்பு ஆட்டோவில் வந்து அறிமுக படங்களில் நடித்து விட்டு செல்வார்கள், ஆனால் அடுத்தடுத்து ஹிட் படங்கள் கொடுத்துவிட்டால் அவர்களின் அட்ராசிட்டி, அட அன்று ஆட்டோவில் வந்து நம்மிடம் வாய்ப்பு கேட்ட நடிகையா இது என ஆரம்ப கட்டத்தில் வாய்ப்பு கொடுத்தவர்களே அதிர்ச்சி அடையும் அளவுக்கு அவர்களின் அட்ராசிட்டி இருக்கும்.

அந்த வரிசையில் தற்பொழுது இடம் பிடுத்துள்ள நடிகை தமன்னாவின் அட்ராசிட்டி எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது என தயாரிப்பாளர்கள் புலம்பி வருவதாக கூறப்படுகிறது. தமன்னாவுக்கு தற்பொழுது பெரிய அளவில் பட வாய்ப்பு இல்லை என்றாலும் கூட, தன்னை கமிட் செய்ய வரும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களிடம் இரண்டு கோடி சம்பளம் என காரராக கேட்டு விடுகிறார்.

இரண்டு கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து ஒப்பந்தம் செய்யும் தயாரிப்பாளர்களுக்கு மிக பெரிய தலைவலியை ஏற்படுத்தி வரும் நடிகை தமன்னாவின் அட்ராசிட்டி தான் இன்று சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. படப்பிடிப்பு தளத்திற்கு வரும் நடிகை தமன்னா, அவருடன் சுமார் 7 உதவியாளர்களை உடன் அழைத்து வருகிறார்.

அந்த ஏழு உதவியாளர்களுக்காக செலவு தயாரிப்பாளர் தரப்பில் இருந்து தான் செலவு செய்யப்படுகிறது, அந்த வகையில் தமன்னாவின் உதவியாளர்களுக்கும் மட்டும் நாள் ஒன்றுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் தயாரிப்பு தரப்பில் இருந்து செலவு செய்யப்பட்டு வருகிறது என கூறப்படுகிறது. இந்நிலையில் ஒரு நடிகை ஒரு படத்தில் கமிட்டாகிவிட்டால் அந்த நடிகை வீட்டில் இருந்து படப்பிடிப்பு தளத்திற்கு வருவது முதல்.

மீண்டும் படப்பிடிப்பு முடிந்து அங்கிருந்து புறப்பட்டு வீட்டிற்கு செல்லும் வரை அனைத்துமே தயாரிப்பாளர்கள் தான் செலவு செய்ய வேண்டும், ஆரம்ப கட்டத்தில் வாய்ப்புக்காக தேடும் நடிகையாக இருந்தால், ஆட்டோ, அல்லது மோட்டார் சைக்கிளில் கூட படப்பிடிப்புக்கு வந்து விடுவார்கள்,ஆனால் ஓன்று, இரண்டு படங்கள் வெற்றி பெற்று அவர்களின் மார்க்கெட் உச்சத்துக்கு வந்து விட்டால் அவர்கள் அட்ராசிட்டி எல்லை மீறி சென்று விடும்.

நான் உயர்தர நட்சத்திர ஓட்டலில் தான் தங்குவேன், விமானத்தில் முதல் வகுப்பில் தான் பயணம் செய்வேன் என ஓன்று, இரண்டு படங்கள் வெற்றி பெற்று விட்டால் அந்த நடிகையின் வாழ்க்கையே தலைகீழாக மாறி விடும், அந்த வகையில் ஆரம்பகட்டத்தில் விளம்பர படங்களில் நடித்து வந்த நடிகை தமன்னா அவருடைய அறிமுக படமான கல்லூரி படத்தில் நடித்து கொண்டிருக்கும் போது, அவரின் உதவியாளர் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து தான் படப்பிடிப்புக்கு வந்து சென்றுள்ளார்.

அதே போன்று தமன்னா கல்லூரி படத்தில் நடித்து கொண்டிருந்த போதே, அடுத்த படவாய்ப்புகள் தேடி உதவியாளர் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து கொண்டு சென்று சில முக்கிய பிரமுகர்களை சந்தித்து பட வாய்ப்பு கேட்டு வந்துள்ளார், ஆனால் இன்று அவர் படப்பிடிப்புக்கு விமானத்தில், அவர் ஒருவர் வருவதர்க்கு இரண்டு விமான டிக்கெட் வேண்டும் என்று கண்டிஷன் போட்டு இரண்டு விமான டிக்கெட்டில் தமன்னா ஒருவர் மட்டுமே பயணிப்பதாக கூறப்படுகிறது.

அதாவது நடிகை தமன்னா விமானத்தில் பயணம் செய்யும் போது, அவர் அருகில் வேறு யாரும் அமர கூடாது , அந்த இருக்கைகள் காலியாக தான் இருக்க வேண்டும் என்பதற்காக, தமன்னா ஒருவர் பயணிக்க இரண்டு இருக்கைக்கான டிக்கெட் புக் செய்யப்படுகிறதாம். இதை அறிந்த சினிமா வட்டாரத்தினர் தயாரிப்பாளர் பணம் எப்படியெல்லாம் வீணடிக்கப்பட்டு வருகிறது என நடிகை தமன்னா அட்ராசிட்டியை பார்த்து முணு முனுத்து வருகிறார்கள்.