மாமன்னன் தோல்விக்கு காரணமாக இருக்க போகும் வடிவேலு… இது தான் காரணம்..

0
Follow on Google News

வடிவேல் உடன் பல வருடங்கள் கூடவே இருந்து பயணித்தவர்கள் சமீபகாலமாக வடிவேலு பற்றி அனைத்து ஊடகங்களிலும் அவருடைய முகத்திரையை கிழித்து தொங்க விட்டு வருகிறார்கள். அந்த வகையில் வடிவேலு இமேஜ் தற்பொழுது மிகப் பெரிய அளவில் டேமேஜ் ஆகி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் வடிவேலு தன்னுடன் பயணித்தவர்கள் எந்த விதத்திலும் வளர்ந்து விடக் கூடாது என்பதற்காக பல நேரங்களில் அவர்களுக்கு தடையாக இருந்துள்ளார்.

அதே நேரத்தில் வடிவேலு எவ்வளவு டார்ச்சர் செய்தாலும், முட்டுக்கட்டையாக இருந்தாலும் அவர் உடன் பயணித்த பல துணை நடிகர்கள் அவரை தாண்டி வெளியில் போவதற்கு வழியில்லாமல், வடிவேலுவை சுற்றி சுற்றி, இறுதியில் அவர்கள் வாழ்க்கை பாலாய் போனது தான் மிச்சம் என்கின்ற அளவுக்கு ஒவ்வொரு சேனலிலும் வடிவேலுவால் தங்கள் பட்ட கஷ்டங்களையும், வடிவேலுவால் ஏற்பட்ட இழப்புகளையும் பேசி வருவது பார்ப்பவர்களை வேதனை அடைய செய்துள்ளது.

நடிகர் வடிவேலு சினிமாவில் மிகப்பெரிய உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், அவர் ஒருநாள் கால் சீட்டுக்கு பல லட்சங்கள் சம்பளமாக கொடுக்கப்பட்டது. ஆனால் அவருடன் இணைந்து நடிக்கும் போண்டாமணி போன்ற பல துணை நடிகர்களுக்கு தயாரிப்பாளர்கள் தரப்பில் மிக குறைந்த சம்பளமே கொடுக்கப்படும். அந்த சம்பள தொகையை நிர்ணயம் செய்ய கூடியவர் வடிவேலு தானாம்.

ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர்கள் இறக்கப்பட்டு வடிவேலு உடன் நடிக்கும் அவருடைய துணை நடிகர்களுக்கு சம்பளத்தை அதிகரித்தாலும் கூட, அதற்கு வடிவேலு ஒப்புக்கொள்ள மாட்டாராம், நீங்கள் உங்கள் இஷ்டத்திற்கு அவர்கள் சம்பளத்தை அதிகரித்து கொடுத்தால். அடுத்த படத்தில் நடிக்கும் தயாரிப்பாளர் அதே சம்பளத்தை கொடுப்பாரா.? என்று கேள்வி கேட்டு இவர்களுக்கெல்லாம் இந்த சம்பளம் போதும் என தெரிவித்து விடுவாராம் வடிவேலு.

வடிவேலு சினிமாவில் ஆரம்ப கட்டத்தில் மிகவும் சிரமப்பட்டு கஷ்டப்பட்டு தான், உயர்ந்த நிலைக்கு வந்தார். அப்படி அடி மட்டத்திலிருந்து வந்த வடிவேலு தன்னை சுற்றி இருக்கும் நடிகர்களை எந்த அளவுக்கு அவர் வைத்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் எங்கே வளர்ந்து விடுவார்களோ.! என்ற ஒரு அச்சத்திலேயே அவர்களை ஒவ்வொரு முறையும் தட்டியே வைத்து வந்துள்ளார் வடிவேலு.

இந்த நிலையில் வடிவேலுவை ஒரு காமெடியனாகவே தமிழ் சினிமா ரசிகர்கள் பார்த்து வந்த நிலையில், மாமன்னன் திரைப்படத்தில் வடிவேலுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அவருடைய கதாபாத்திரம் அமைந்திருக்கிறது என வரும் தகவல்கள. மாமன்னன் படத்திற்கு பின்னடைவு ஏற்பட்டால் அதற்கு முக்கிய காரணமாக வடிவேலு தான் இருப்பார் என பலரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

வடிவேலுவை காமெடியனாக பார்த்த மக்கள் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதை மக்கள் ரசிக்க மாட்டார்கள் என்கின்றனர் சினிமா பார்வையாளர்கள்.மேலும் சமீப காலமாக வடிவேலு குறித்து அவருடன் நீண்ட நாள் பயணித்தவர்கள் அவருடைய உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டி அவருடைய இமேஜை பெருமளவு டேமேஜ் செய்து வரும் நிலையில், வலுவான கதாபாத்திரத்தில் வடிவேலு ஏற்றுக் கொண்டாலும் கூட அதை பாராட்டும் வகையில் யாரும் முன்வர மாட்டார்கள். அந்த வகையில் மாமன்னன் படத்திற்கு பின்னடைவு ஏற்பட்டால் அதற்கு வடிவேலுவே முக்கிய காரணமாக இருக்கப் போகிறார் என்று கூறப்படுகிறது