டிரைவர் ஷர்மிளாவுக்கு அடித்தது ஜாக்பாட் ….பிக் பாஸ் உள்ளே நுழையும் ஷர்மிளாவுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

0
Follow on Google News

சென்னை மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட நிலையில்.அதில் ஜூலி என்கின்ற ஒரு பெண் அனைவரும் கவனத்தையும் ஈர்த்தார். இதனை தொடர்ந்து ஜூலியை வீர பெண்மணி என்றும், புலியை முறத்தால் அடித்த தமிழச்சியே என ஒரு தரப்பினர் ஜூலியை தலையில் வைத்து கொண்டாட தொடங்கினார்கள்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் ஜூலிக்கு கிடைத்த அந்த புகழை வைத்து விஜய் தொலைக்காட்சி நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்று பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் சென்றார் ஜூலி. ஆனால் ஜூலி பிக் பாஸ் வீட்டில் உள்ளே சென்ற அடுத்த சில நாட்களிலேயே அவரின் உண்மை முகம் தோலுரித்து வெளியே காட்டப்பட்டதை தொடர்ந்து ஜூலியை வீர தமிழச்சியே என்று கொண்டாடிய அதே தரப்பினர் கண்டபடி ஜூலியை ட்ரோல் செய்யவும் தொடங்கினார்கள்.

இந்த நிலையில் கோயம்புத்தூரில் பேருந்து பெண் ஓட்டுனராக பணிபுரிந்த ஷர்மிளா மிக பிரபலமாக பேசப்பட்டு வருகிறார். ஆனால் சுமார் 30 வருடங்களுக்கு முன்பே நாகர்கோவிலை சார்ந்த வசந்தகுமாரி என்கின்ற பெண் பணி நியமனம் செய்யப்பட்டு, நீண்ட வருடமாக பேருந்து ஓட்டுனராக வரலாற்று சாதனை படைத்துள்ளது தமிழகத்தில் பலருக்கும் தெரிந்திடாத ஒன்று.

இதற்கு முக்கிய காரணம் அந்த பெண் ஓட்டுனர் வசந்தகுமாரி தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை என்று சொல்லலாம். இதேபோன்று கொரோனா பெருந் தொற்றால் தமிழகமே தள்ளாடிக் கொண்டிருந்த காலத்தில் 108 அவசர கால ஊர்த்திக்கு ஓட்டுனராக தேனி மாவட்டத்தைச் சார்ந்த வீரலட்சுமி பணி நியமனம் செய்யப்பட்டார். கொரோனா தொற்று காலத்தில் அச்சப்பட்டு அனைவரும் வீட்டிலே முடங்கி கிடக்க, உறுதியோடும் வலிமையோடும் பலர் உயிரை காப்பதற்கு துணையாக இருந்தவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வீரலட்சுமி.

தற்பொழுது வரை திறன் பட ஆம்புலன்ஸ் வாகனத்தை வீரலட்சுமி செலுத்தி வருவது பலருக்கு தெரிந்திடாத விஷயம். இப்படி தமிழகத்தில் சத்தமே இல்லாமல் பல பெண்கள் சாதித்து கொண்டிருக்கையில். சமீபத்தில் மிகப்பெரிய அளவில் பேசும் பொருளாக பென் டிரைவர் சர்மிளா உருவெடுத்ததற்கு காரணம் அவருக்கு கிடைத்த அந்த விளம்பர வெளிச்சமே என்கின்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஓட்டிய பேருந்தில் பயணம் செய்த திமுக எம்பி கனிமொழியிடம் அதே பேருந்தில் பெண் நடத்துனராக பணிபுரிகின்றவர் டிக்கெட் கேட்டதால், ஓட்டுநர் ஷர்மிளாவுக்கும் அந்தப் பெண் நடத்துனருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பணியில் இருந்து விலகிய ஷர்மிளாவை நேரில் அழைத்த கமல்ஹாசன் அவருக்கு புதிய கார் வாங்குவதற்காக ஒரு தொகையை கொடுத்து உதவி செய்துள்ளார்.

இந்த நிலையில் தற்பொழுது ஊடகங்களில் ஹாட் டாப்பிக்காக இருக்கும் பெண் ஓட்டுநர் ஷர்மிளா மீது பிக் பாஸ் கடைக்கண் பார்வை விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில், இனி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஷர்மிளா பங்கேற்பதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.அந்த வகையில் பிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் போட்டியாளர்களுக்கு நாள் சம்பளமாக எத்தனை நாட்கள் அந்த வீட்டில் அவர்கள் இருக்கிறார்களோ, அதன் அடிப்படையில் அவர்களுக்கு பெரும் தொகை சம்பளமாக வழங்கப்படும்.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழையும் சார்மிளாவுக்கு பெருந்தொகை சம்பளம் கிடைப்பதற்கான ஜாக்பாட் அடித்துள்ளது என்றும், அதே வேலையில் ஜல்லிக்கட்டில் புகழ்பெற்ற ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இமேஜை டேமேஜ் செய்தது போன்று நிலை ஷர்மிளாவுக்கு ஏற்படாமல் இருக்க பலரும் வாழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.