கொடுத்த வாக்கை காப்பற்ற வக்கில்லை… விஜய்யை வெளுத்து வாங்கும் மக்கள்..

0
Follow on Google News

விஜய் நடிப்பில் வெளியான அழகிய தமிழ்மகன் படத்தில் விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்ற போது, அப்போது மத்திய சுகாதார துறை அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸ், எங்கள் கோரிக்கையை ஏற்று கொண்டு ரஜினிகாந்த் புகை பிடிக்கும் காட்சியில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். அதேபோல் நடிகர் விஜய்யும் சினிமாவில் புகை பிடிக்கும் காட்சியில் நடிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இதனை தொடர்ந்து.அன்புமணி ராமதாஸ் கோரிக்கையை ஏற்று, இனிமேல் புகைபிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என அப்போது தெரிவித்த நடிகர் விஜய். `அழகிய தமிழ் மகன்’ படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து இருந்தேன். அதில், ஒரு வேடம் கெட்டவன். அவன் கெட்டவன் என்பதை காட்டுவதற்காகவே, சிகரெட் பிடிப்பது போன்ற காட்சியை இய‌க்குன‌ர் வைத்திருந்தார்.

படத்தின் இறுதியில், அவன் திருந்துவதை காட்டுவதற்காக, சிகரெட்டை தூக்கி எறிவது போல்தான் காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. இனிமேல், அதுபோன்ற காட்சிகளை கூட தவிர்க்க முயற்சி செய்கிறேன் எ‌ன விஜய் தெரிவித்திருந்தார். ஆனால் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத விஜய், அடுத்து 2012ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி படத்தில் போஸ்டரில் சுருட்டு பிடிப்பது போன்று போஸ் கொடுத்தார்.

அதன் பின்பு வெளியான சர்க்கார் படத்தில் சிகரெட் பிடிப்பது போன்று விஜய் போஸ் கொடுத்து கடும் எதிர்ப்புகளுக்கு உள்ளானார். நடிகர் ரஜினிகாந்த் நான் இனிமேல் சிகரெட் பிடிப்பது போன்று நடிக்க மாட்டேன் என வாக்குறுதி கொடுத்த பின்பு அவருடைய படங்களில் சிகரெட் பிடிக்கும் காட்சிகளை முற்றிலும் தவிர்த்து வருகிறார். ரஜினியின் சிகரெட் பிடிக்கும் ஸ்டைலில் மயக்கி பலர் அவருக்கு ரசிகர்கள் ஆனார்கள்.

மேலும் ரஜினி படத்தில் பெரும்பாலும் சிகரெட் பிடிக்கும் காட்சி முக்கியத்துவம் பெரும், அந்த வகையில் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்கிற லட்சியத்துடன் ரஜினிகாந்த் தொடர்ந்து அவருடைய படத்தில் சிகரெட் பிடிக்கும் காட்சியை தவிர்த்து வருகிறார். ஆனால் விஜய் வியாபார யுக்திக்காக கொடுத்த வாக்குறுதியை மறந்து சமீபத்தில் வெளியான் லியோ படத்தின் போஸ்டரில், சிகரெட் பிடிப்பது போன்று காட்சியளித்துள்ளார்.

இது தற்பொழுது மிக பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. மேலும் தற்பொழுது லியோ படத்தில் விஜய் சிகரெட் பிடிக்கும் காட்சிக்கு எதிப்பு தெரிவித்து வருகின்றவர்களுக்கு, விஜய் ரசிகர்கள் பதிலடி தரும் விதத்தில், ரசிகர்கள் புகைபிடிப்பது போன்று புகைப்படத்தை எடுத்து அவர்களின் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து, நாங்கள் அப்படிதான் சிகரட் அடிப்போம், உங்களால் என்ன செய்ய முடியும் என பதிவு செய்து வருவது பார்ப்பவர்களை வேதனை அடைய செய்துள்ளது.

அந்த வகையில் ஒரு ரசிகன் தலைவனாக ஏற்று கொண்ட அந்த நடிகர் என்ன செய்தாலும் அதையே பின்பற்ற கூடியவனாக பலரும் இருக்கையில், இன்று நடிகர் விஜய்க்குக் குழந்தைகள், மாணவர்கள் என ஃபேமிலி ஆடியன்ஸ் அதிகம். பெண்கள், இளம் ரசிகர்களும் விஜய்க்கு அதிகமாக உள்ள சூழலில், அவர் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் முன்னிலைப்படுத்தப்படுவது, அவரின் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி வருவதை உணர்ந்து இனிமேலாவது விஜய் சிகரெட் பிடிப்பது போன்று புகைப்படம் வெளியிடுவது தவிர்க்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

அதே நேரத்தில்,நான் இனிமேல் சிகரெட் பிடிப்பது போன்று நடிக்க மாட்டேன் என அழகிய தமிழ் மகன் படம் வெளியான போது வாக்குறுதி கொடுத்த விஜய், அடுத்தடுத்து கொடுத்த வாக்குறுதியை மீறுவது, உங்களுக்கே வெட்கமா இல்லையா விஜய் என பலரும் கோபத்துடன் கண்டனங்களை பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.