சாட்டையை சுழற்றும் மக்கள்… இயக்குநர்களின் நரித்தனம் இனி வேலைக்காகாது..

0
Follow on Google News

இதற்கு முன்பு தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தேவர் மகன், சரத்குமார் நடிப்பில் வெளியான நாட்டாமை, நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான சின்ன கவுண்டர் போன்ற படங்கள் ஒரு குறிப்பிட்ட சாதியின் சாயலை கொண்டு இருந்தாலும் கூட, அந்த படத்தில் மற்ற எந்த ஒரு ஜாதிக்கு எதிராக வசனமோ, காட்சிகளோ இருக்காது.

குறிப்பாக ஒரே ஜாதிக்குள் நடக்கும் பங்காளி சண்டை, மாமன் மச்சான் சண்டை என ஒரே சாதிக்குள் இருக்கும் இரண்டு தரப்புக்கு இடையிலான பிரச்சனையை மையப்படுத்தியே, இது போன்ற படத்தின் கதை அமர்ந்திருக்கும். அந்த வகையில் வில்லனாக பிற சாதியினரை சித்தரிக்கப்படுவதில்லை. அதனாலேயே இது போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் விளிம்பு நிலையில் உள்ள மக்கள் மற்றும் ஒடுக்க பட்ட மக்களுக்கான அநீதிகள் கடந்த காலங்களில் அரங்கேறி இருந்தாலும், இன்றைய நவீன உலகில் சாதி கடந்த தமிழர்களால் மக்கள் வாழ்ந்து வருவதை பல இடங்களில் பார்க்க முடிகிறது, இருந்தாலும் ஆங்காங்கே ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கு காண சில அநீதிகள் அரங்கேறுவதை மறுக்க முடியாது, அதே நேரத்தில் சட்டம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணையாக இருந்து நீதி வழங்கி வருவதையும் பார்க்க முடிகிறது.

இந்த நிலையில், ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு குரல் கொடுக்கும் வகையில் திரைப்படம் எடுக்கிறோம் என சில இயக்குனர்கள் அவரவர் படங்களில் சில குறியீடுகளை வைத்து, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை சீண்டுவது போன்று காட்சிகளும், வசனமும் வைப்பது, இன்றைய தலைமுறைக்கு ஆரோக்கியமான விஷயம் இல்லை என்கின்றனர் சமூக பார்வையாளர்கள்.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சீண்டுவது போன்று காட்சிகளும், வசனமும் இடம்பெறும் போது, அந்த படத்தை பார்க்கும் குறிப்பிட்ட ஒரு தரப்பினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும், குறிப்பாக யாரோ ஒரு தனிப்பட்ட மனிதன் செய்யும் தவறுக்காக ஒட்டு மொத்த சமூகத்தையும் சீண்டுவது போன்று காட்சிகள் இடம்பெறுவது சினிமாவுக்கு ஆரோக்கியமானது அல்ல என்கின்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

இந்நிலையில், பா.ரஞ்சித், மாரிசெல்வராஜ் போன்ற இயக்குனர்கள் ஒரு குறிப்பிட்ட கருத்தை மையப்படுத்தி படங்களை இயக்கி வரும் தமிழ் சினிமாவில், திரௌபதி, ருத்ர தாண்டவம் என இயக்குனர் மோகன் ஜி அவர் ஒரு கருத்தை வைத்து படம் இயக்கி வருவது, இரண்டு தரப்பினர்க்கும் இடையில் நடக்கும் போட்டியாகவே சினிமா ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது, இந்த இரண்டு தரப்பின் செயலும் ஆரோக்கியமானது அல்ல என்கிற விமர்சனமும் உண்டு.

அந்த வகையில் இன்றைய நவீன உலகில் சாதிகளை கடந்த மக்கள் சமூக நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வரும் சூழலில், புரட்சியை உண்டு செய்கிறேன் என்கிற பெயரில் இயக்குனர்கள் எடுக்கும் திரைப்படங்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் மீண்டும் சாதி என்கிற நச்சை விதைத்து விடுமோ என்கிற அச்சம் உருவெடுத்துள்ளது.

அந்த வகையில் சினிமாவில் சாதி சார்ந்து வெளியாகும் படங்களை மக்கள் புறக்கணிக்க தொடங்கி விட்டால், சாதி சார்ந்து படம் இயக்கம் இயக்குனர்கள் காணாமல் போய் விடுவார்கள், அந்த வகையில் நவீன உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் திரைப்படங்களை மக்கள் புறக்கணித்தால் மட்டுமே இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்கின்றனர் சமூக பார்வையாளர்கள்.