சிம்புவை வைத்து சிம்பு பெற்றோரை லாக் செய்த தயாரிப்பாளர்…

0
Follow on Google News

நடிகர் சிம்பு நடிக்கும் ஒவ்வொரு படமும் எதாவது ஒரு வகையில் சிம்புவால் பிரச்சனையை சந்தித்து வருவது வழக்கமாக உள்ளது, அந்த வகையில் தற்பொழுது சிம்பு மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இருவரும் இடையிலான பிரச்சனை உச்சகட்டத்தை எட்டியுள்ளதை தொடர்ந்து, சிம்பு அடுத்து நடிக்க இருக்கும் படத்திற்கு மிக பெரிய சிக்கலாக அமைத்துள்ளது ஐசரி கணேசன் தற்பொழுது சிம்பு விவகாரத்தை தயாரிப்பாளர் கவுன்சிலுக்கு எடுத்து சென்றுள்ளது.

பொதுவாக சிம்புவின் ஒவ்வொரு பிரச்சனைக்கு அவருடைய தாய் தான் என்றும், சிம்புவை பின்னனியில் இருந்து செயல்படுவது அவரது தாய் உஷா ராஜேந்திரன் என்பதால், சிம்பு சிக்கும் அணைத்து பிரச்சனைகளுக்கும் சிம்புவின் பெற்றோர் தான் என்கிறது சினிமா வட்டாரங்கள்.இந்த நிலையில் சிம்பு நடிப்பில் வெளியான தொட்டி ஜெயா படம் தொடங்குவதற்கு முன்பு தொட்டி ஜெயா படத்தின் இயக்குனரை கையோடு அழைத்து கொண்டு தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவை அவருடைய அலுவலகத்தில் சந்தித்துள்ளார் நடிகர் சிம்பு.

அப்போது உங்களுடைய தயாரிப்பில் நான் ஒரு படம் பண்ண விரும்புகிறேன் என சிம்பு தெரிவித்துள்ளார். உடனே இந்த படத்தின் பட்ஜெட் குறித்து விளக்கமாக கேட்டுக் கொண்ட தயாரிப்பாளர் தாணு அடுத்து சிம்பு சம்பளம் குறித்து பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அப்போது சிலம்பரசன் முழு சம்மதத்துடன் தாணு ஒரு சம்பளத்தை முடிவு செய்து, தொட்டி ஜெயா படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

தொட்டி ஜெயா படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கையில், சிம்புவின் தாய் மற்றும் தந்தை இருவரும் தயாரிப்பாளர் தாணுவை அவருடைய அலுவலகத்தில் சந்தித்து, என்னுடைய மகனை ஏமாற்றி நீங்கள் குறைந்த சம்பளத்திற்கு தொட்டி ஜெயா படத்தில் நடிக்க வைத்து கொண்டிருக்கிறீர்கள் என தெரிவிக்க, அதற்கு உங்கள் மகன் இந்த சம்பத்திற்கு முழு சம்மதத்ம் தெரிவித்த பின்பே நான் படப்பிடிப்பை தொடங்கினேன் என தாணு விளக்கம் கொடுத்துள்ளார்.

இருந்தும் இந்த பஞ்சாயத்து தயாரிப்பாளர் கவுன்சிலுக்கு சென்றுள்ளது, அங்கே நடந்த பஞ்சாயத்தில் சிம்புவின் தாய், தந்தை மற்றும் தயாரிப்பாளர் தாணு ஆகியோர் கலந்து கொண்டுள்ளார்கள், ஆனால் சிம்பு இந்த பஞ்சாயத்தில் இடம் பெறவில்லை, ஒரு கட்டத்தில் பஞ்சாயத்து உச்சகட்டத்தை அடைந்ததும், ஒரு செக் புக்கை டேபிளில் தூக்கி போட்ட தயாரிப்பாளர் தாணு.

உங்க மகன் சிம்புவை இந்த இடத்திற்கு வர சொல்லுங்க, அவர் இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு இந்த சம்பளத்திற்கு ஒப்பு கொள்ள வில்லை என்று சொன்னால், நான் அதை விட பத்து மடங்கு அதிகம் சம்பளம் இந்த செக் புக்கில் எழுதி தருகிறேன் என தாணு அதிரடியாக தெரிவித்துள்ளார். இருந்தும் சிம்புவின் தாய் மற்றும் தந்தை இருவரும் பிடி கொடுக்காமல் பேசி வந்துள்ளார்கள்.

உடனே அந்த பஞ்சாயத்தில் இருந்த மற்ற உறுப்பினர்கள், சிம்பு சென்னையில் தானே இருக்கிறார் உடனே வர சொல்லுங்க என என்றதும் சிம்புவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அந்த இடத்திற்கு வருகிறார் சிம்பு. சிம்பு அங்கே வந்ததும், தம்பி நீங்க இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு இந்த சம்பளத்திற்கு சம்மதம் தெரிவித்த பின்பு தானே கமிடானீர்கள் என தாணு கேட்க அண்ணன் சொல்வது சரி தான் என தலையை ஆட்டிவிட்டு வெளியில் சென்று விடுகிறார் சிம்பு.

இந்நிலையில் என் மகன் அந்த சம்பளத்திற்கு ஒப்பு கொள்ளவே இல்லை, நீங்கள் என் மகனை ஏமாற்றி நடிக்க வைக்கிறீர்கள் என வாக்குவாதம் செய்து வந்த சிம்புவின் தாய் மற்றும் தந்தை இருவருக்குமே முக்குடைபட்டது போன்று அமைந்துவிட்டது, சிம்புவை நேரில் அழைத்து உண்மையை விசாரித்தது. இருந்தும் சிம்பு தாய் கேட்ட அந்த தொகையை தாணு செக் எழுதி கொடுத்ததாக கூறப்படுகிறது. இப்படி அப்போதே பல பிரச்ச்னைகளை சந்தித்து வெளியான படம் தானாம் தொட்டி ஜெயா.