இயக்குனர் மீது கற்பழிப்பு புகார்.. கைதாகிறார் புகார் கொடுத்த நடிகை..! ஏன் தெரியுமா.?

0

கேரளா : சமீபத்தில் மலையாளத்திரையுலகில் சிறுசிறு வேடங்களில் நடித்துவந்த நடிகை ஒருவர் தயாரிப்பாளரும் இயக்குனருமான விஜய் பாபு என்பவர் தன்னை கற்பழித்துவிட்டதாக புகாரளித்தார். கொச்சி காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் மனுவில் விஜய் பாபு மீது நடவடிக்கை எடுக்கவும் கோரியிருந்தார். அதைத்தொடர்ந்து கொச்சி காவல்துறை வழக்கு பதிந்து இயக்குனரை தேடிவந்தது.

விஜய் பாபு தன்மீது காவல்துறை கைதுநடவடிக்கை எடுக்கப்போவதை அறிந்து துபாய் சென்றார். கேரள காவல்துறை இன்டர்போல் உதவியை நாடியது. துபாயில் அவரை கைதுசெய்ய முயற்சிக்கையில் அவர் ஜார்ஜியா தப்பிச்சென்றார். மேலும் விஜய் பாபு அங்கிருந்தபடியே கேரள உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு அளித்திருந்தார்.

இந்த மனுவின்மீதான விசாரணை நேற்று உயர்நீதிமன்றத்தில் வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி குற்றம்சாட்டப்பட்டவர் இந்தியாவில் இல்லையா என கேள்வியெழுப்பினார். விஜயின் வழக்கறிஞர் அவர் துபாயில் இருக்கிறார். பாஸ்போர்ட் ரத்தான காரணத்தால் இந்தியா வரமுடியவில்லை எனவும் கூறினார். மேலும் வாய்ப்பு கொடுக்கப்பட்டால் நீதிமன்றத்தில் அல்லது விசாரணை அதிகாரிகள் முன்னால் நேரில் ஆஜராவார் என வழக்கறிஞர் கூறினார்.

முதலி விஜய் இங்கு வந்த பின்னர் ஜாமீன் மனுவை விசாரிக்கலாம் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் விஜய் பாபு புதிய மனு ஒன்றை அளித்துள்ளார்.. அந்த மனுவில் “ஏப்ரல் 14 அன்று புகார் கொடுத்த நடிகை மெரைன் ட்ரைவில் உள்ள லிங்க் ஹொரைஸன் பிளாட்டுக்கு வந்தார். அந்த நடிகையுடன் ஏற்கனவே எனக்கு பழக்கம் இருந்தது. அவரின் சம்மதத்தின் பேரிலேயே இருவரும் உடலுறவு கொண்டோம்” என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த மனுவின் மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது. விஜய் பாபு சொன்னது ஊர்ஜிதமானால் பொய் வழக்கு தொடுத்த அந்த நடிகை கைதுசெய்யப்படுவதுடன் பொய் சாட்சி சொன்ன முக்கிய புள்ளிகள் சிலர் கைதாவார்கள் என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் விஜயின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளதால் அவரை கைதுசெய்வதில் சிக்கல் நீடித்து வருகிறது.

கோபத்தில் அஜித் .. அஜித்தின் புதிய படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விரட்டியடிப்பு.! என்ன நடந்தது தெரியுமா.?