விஜயை அடையாளம் காட்டிய விக்ரமன் …நன்றி மறந்து ஆணவத்தில் விஜய் என்ன செய்துள்ளார் தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் SA சந்திரசேகர் மகன் என்கிற பின்புலத்தில் சினிமாவில் தன்னை அடையாளம் காட்டி கொண்டவர் நடிகர் விஜய்.தனது தந்தை இயக்கத்தில் சுமார் ஆறு படங்கள் வரை குழந்தை நட்சத்திரமாக நடித்த விஜய், ஒரு படத்தில் கூட மக்கள் மனதில் அவருடைய நடிப்பு இடம்பெறவில்லை. தந்தை பின்புலம் இருந்தாலும் குழந்தை நட்சத்திரமாக நடிப்பில் அசத்தியிருப்பார் சிலம்பரசன், ஆனால் சிம்பு போன்று விஜய் ஜொலிக்கவில்லை.

ஒரு கட்டத்தில் உனக்கு சினிமா செட் ஆகாது, வேறு துறையை பார் என தந்தை SA சந்திரசேகர் அறிவுறுத்த, சில வருடம் இடைவெளிக்கு பின்பு , மீண்டும் தனது 18 வயதில் தந்தையிடம் சினிமாவில் நடிக்க தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார் விஜய், இதனை தொடர்ந்து நாளைய தீர்ப்பு படத்தில் ஹீரோவாக அறிமுகம் செய்து வைத்தார் SA சந்திரசேகர், இந்த படத்துக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை, மேலும் விஜய்யை வைத்து படம் இயக்க வேறு எந்த ஒரு இயக்குனரும் முன் வரவில்லை.

மேலும் விஜய் என்கிற ஒரு நடிகரை மக்கள் மத்தியில் அறிமுகமம் செய்து வைக்க நடிகர் விஜயகாந்த் உடன் இணைந்து நடிக்க வைத்தார் SA சந்திரசேகர், இது ஓரளவு விஜய் என்கிற ஒரு நடிகர் தமிழ் சினிமாவில் இருக்கிறார் என்று சிலருக்கு தெரிய வந்தது, இருந்தும் தனது மகனை வைத்து யாரும் படம் இயக்க முன்வரவில்லை என்பதால், தொடர்ந்து ஹீரோவாக வைத்து பல படங்கள் இயக்கினார் அவருடைய தந்தை SA சந்திர சேகர்.

ஒரு சில படங்கள் வெற்றி பெற்றாலும், விஜய்க்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை, இந்நிலையில் இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் வெளியான பூவே உனக்காக படத்தில் நடிகர் விஜய் நடித்த பின்பு தான் சினிமாவில் அவருக்கென ஒரு அங்கீகாரம் கிடைத்தது, இதன் பின்பு அடுத்தடுத்து மற்ற இயக்குனர்கள் படத்தில் நடிக்கும் வாய்ப்புகள் விஜய்க்கு கிடைத்தது. விஜய் ஒரு ஹீரோவாக அவருடைய தந்தை அறிமுகம் செய்து வைத்திருந்தாலும் அவரை நடிகராக அடையாளம் காட்டியவர் இயக்குனர் விக்ரமன்.

இதன் பின்பு அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னனி நடிகராக விஜய் வந்த பின்பு, மீண்டும் விஜய்யை வைத்து படம் இயக்க விரும்பிய விக்ரமன் உன்னைத் நினைத்து படத்தில் முதலில் விஜய்யை நடிக்க முடிவு செய்து கதையை தெரிவித்துள்ளார். கதை பிடித்து போக படப்பிடிப்பும் தொடங்கியது, பூவே உனக்காக படத்தில் எப்படி விஜய்யிடம் நடந்து கொண்டாரோ, அதே போன்று இயக்குனர் விக்ரமன் உன்னை நினைத்து படப்பிடிப்பின் போது விஜய்யிடம் நடந்து கொண்டுள்ளார்.

ஆனால் விஜய்க்கு இது பிடிக்கவில்லை, இதனால் அடிக்கடி விக்ரமன் மற்றும் விஜய் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது, ஒரு கட்டத்தில் இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று தன்னை பூவே உனக்காக படத்தில் நடிகனாக அடையாளம் காட்டியவர் விக்ரமன் என்பதை மறந்து, உன்னை நினைத்து படத்தில் இருந்து விளக்கியுள்ளார் விஜய் என்று கூறப்படுகிறது, இதன் பின்பு தான் விஜய்க்கு பதிலாக நடிகர் சூர்யா அந்த படத்தில் நடித்ததாக கூறப்படுகிறது.

கோபத்தில் அஜித் .. அஜித்தின் புதிய படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விரட்டியடிப்பு.! என்ன நடந்தது தெரியுமா.?