சீரியல் நடிகை சுட்டு கொலை…. காஷ்மீரில் மீண்டும் தலைதூக்கும் தீவிரவாதம்…!

0

ஜம்மு காஷ்மீர் : தீவிரவாதிகளின் பயங்கரவாத செயல் மீண்டும் ஜம்மு காஷ்மீரில் தலைதூக்கிவருகிறது. சமீபத்தில் அரசு அலுவலகத்தில் புகுந்த பயங்கரவாதிகள் ஒரு ராகுல் பண்டிட் என்பவரை அலுவலகத்தில் வைத்தே சுட்டுக்கொன்றனர். மேலும் அதே வாரத்தில் பயணிகள் பேருந்தில் வெடிவைத்து தீக்கிரையாக்கியதில் ஏழுபேர் கொல்லப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் சீரியல் நடிகை ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தனியார் செய்திநிறுவனத்திடம் பேசிய போலீஸ் அதிகாரி ஒருவர் “கடந்த மே 25ல் அம்ரீன் பட் எனும் தொலைக்காட்சி நடிகை அவரது வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டிருந்தார்.

அந்த இரவுநேரத்தில் அந்த பகுதிக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் அவரை துப்பாக்கியால் சராமாரியாக சுட்டுள்ளனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் உடன் இருந்த 10 வயதே ஆன ஒரு சிறுவனும் படுகாயமடைந்துள்ளான். இருவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அம்ரீன் பட்டை பரிசோதித்த மருத்துவர்கள் வரும்வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். சிறுவனுக்கு கையில் மட்டும் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. அதற்கான சிகிச்சை சிறுவனுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கி சூட்டை தொடர்ந்து மத்திய பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்” என பெயர்குறிப்பிட விரும்பாத அதிகாரி தெரிவித்தார்.

ஜேகே லெப்டினென்ட் கவர்னரான மனோஜ் சின்ஹா இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ” புத்காமில் நடத்தப்பட்ட இந்த கொடூரமான தீவிரவாத தாக்குதலை கண்டிக்க வார்த்தைகள் இல்லை. மரணமடைந்த அம்ரீன் பட்டின் குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள். கையில் சிறுவன் சீக்கிரமாக குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.