பேராசை வேண்டாம் …மக்களே உஷார்… ஆருத்ர கோல்டு மோசடி..சுற்றிவளைத்த அதிகாரிகள்..!

0

சென்னை : தமிழக அரசு மற்றும் தமிழக காவல்துறை மக்களிடையே பலத்த விழிப்புணர்வுகள் ஏற்படுத்த எவ்வளவு முயற்சித்தாலும் விளம்பர மோகத்தில் தங்களை மறந்து ஒரு நிறுவனத்திடமோ அல்லது சத்யராஜ் புகழ் ஈமு கோழி போன்ற விஷயங்களிலோ தொடர்ந்து ஏமாந்து வருகின்றனர். போதிய விழிப்புணர்வு இல்லை என கூறுவதை விட பேராசை அதிகம் என கூறலாம்.

இந்நிலையில் சென்னை அமிஞ்சிக்கரை பகுதியில் செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனத்திற்கு அரசு அதிகாரிகள் சீல்வைத்துள்ளனர். மேலும் இருபதிற்கும் மேற்பட்ட இடங்களில் இயங்கிவரும் ஆருத்ராவின் கிளைகளிலும் சோதனை நடைபெற்றது. நிறுவனத்தின் இந்த நிலைக்கு காரணம் ஒரு விளம்பரம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆருத்ரா தனது விளம்பரப்படத்தில் ” ஒருலட்சம் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 36000 வட்டி வழங்குவோம்” என கூறப்பட்டிருந்தது. நமது மக்களுக்கு அதிரடி சலுகைகளும் விரைவில் பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையை காட்டியதால் அந்த நிறுவனத்திற்கு ஈசல் போல படையெடுத்தனர். அதன்விளைவு ஆருத்ராவில் முதலீடு செய்பவர்கள் பல்கிப்பெருகினர்.

இந்த ஆருத்திரா விளம்பரம் தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் செல்ல அதிகாரிகள் நிறுவனத்தின் தலைமையகம் உட்பட 20 இடங்களிலும் சோதனை மேற்கொண்டனர். செங்கல்பட்டு கிளையில் 83000, திருவள்ளூரில் ஒருகோடி, ஊழியர் ஒருவர் வீட்டில் 14 லட்சம் திருவண்ணாமலையில் உள்ள ஆருத்ரா உறவினர் வீட்டில் 312கிராம் தங்கம் மற்றும் 650 கிராம் வெள்ளி ஆரணியில் 1.8 கோடிகள் என பொருளாதாரப்பிரிவு போலீசாரால் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன.