போலீசாரை மிரட்டிய விசாரணை கைதி…. பாலியல் குற்றவாளியிடம் சமாதானம் பேசிய போலீசார்.!

0

ராமநாதபுரம் : விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி கடந்த மார்ச் மதம் முதல்வாரத்தில் தனது காதலனோடு சாயல்குடி மூக்கையூர் கடற்கரைக்கு சென்றிருந்தார். அங்கு இருந்த கஞ்சா போதை இளைஞர்கள் காதலனை கட்டிபோட்டுவிட்டு அந்த கல்லூரி பெண்ணை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இந்தசம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து குற்றவாளிகளை தேடிவந்தனர். போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குற்றவாளிகளான கமுதி பத்மேஸ்வரன், நத்தை குளம் தினேஷ்குமார், பசும்பொன் அஜித்குமார் ஆகியோரை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிபதி உத்தரவின்பேரில் குண்டர்சட்டம் போடப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதனிடையே குற்றவாளிகள் மூவரும் நீதிமன்ற விசாரணைக்கு மத்திய சிறையிலிருந்து வேன் மூலம் கமுதி நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டனர். முதலில் கடலாடி நீதிமன்றத்திற்கு சென்றுவரும் வழியில் கோட்டைமேடு பகுதிக்கு வந்துகொண்டிருக்கையில் குற்றம்சாட்டப்பட்ட பத்மேஸ்வரன் வேனில் இருந்த காவலரிடம் செல்போனை கேட்டுள்ளார்.

அந்த போலீஸ் கொடுக்க மறுத்துள்ளார். உடனேயே கொந்தளித்த கஞ்சா போதை பத்மேஸ்வரன் கைவிலங்கோடு வேனின் கண்ணாடியை குத்தியுள்ளான். அதில் அந்த கண்ணாடி நொறுங்கியது. மேலும் அதோடு விடாமல் ஒழுங்காக செல்போனை கொடு இல்லையெனில் உன்னை கொன்றுவிடுவேன் என மிரட்டியிருக்கிறான்.

அப்போது வேனை நிறுத்திய ஓட்டுநர் உடனடியாக கமுதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதையடுத்து விரைந்து வந்த கமுதி காவல்துறை அதிகாரிகள் கஞ்சா போதை ஆசாமியை சமாதானப்படுத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபின் மீண்டும் மதுரை சிறையில் அடைத்தனர். குற்றவாளிக்கெல்லாம் காவல்துறை பயப்படவேண்டுமா என சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் முணுமுணுத்தனர்.