செருப்பை கழட்டி அடிப்பேன்… ஏன்டா நாயே..! பீச்சில் வாக்கிங் சென்ற பயில்வானிடம் நேரடியாக மோதிய ராதிகா.! வேடிக்கை பார்த்த பொது மக்கள்.

0
Follow on Google News

பிரபல சினிமா நடிகர் பயில்வான் ரங்கநாதன், இவர் தொடர்ந்து சினிமா பிரபலங்கள் குறித்த அந்தரங்க விஷயங்களை வெளியிட்டு தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகின்றவர். இவர் தான் நேரடியாக அணைத்து விஷயங்களையும் பார்த்தது போன்று பல அந்தரங்க விஷயத்தை வெளியிடுவார். இவர் கூறுவதில் அனைத்தையும் பொய் என்று ஒதுக்கவும் முடியாது, அதே நேரத்தில் இவர் கூறுவது அனைத்தும் உண்மை என்றும் அனுமதிக்க முடியாது.

அந்த வகையில் தற்போது ராதிகா தயார் குறித்து பேசி செமத்தியா பொது இடத்தில ராதிகாவிடம் வாங்கி கட்டி கொண்டார் பயில்வான் ரங்கநாதன். சமீபத்தில் வீடியோ ஒன்றில் அவர் பேசியதாவது. நடிகர் எம் ஆர் ராதாவுக்கு அங்கீகாரம் பெற்ற மூன்றாவது மனைவி கீதாவுக்கு பிறந்தவர் நடிகை ராதிகா , அவர் உடன் பிறந்தவர்கள் இரண்டு பேர். அதில் ஒருவர் நடிகை நிரோஷா, மற்றொருவர் தம்பி ராதா மோகன்.

நடிகர் எம் ஆர் ராதா- கீதா தம்பதியினருக்கு பிறந்தவர்கள் ராதிகா மற்றும் நிரோஷா, இவர்கள் இருவர் பிறந்த பின்பு எம்ஜிஆரை சுட்டு விட்டு சிறைக்கு சென்று விட்டார் எம்ஆர் ராதா. முறைப்படி பார்த்தால் கீதாவுக்கு பிறந்தவர்தான் ராதா மோகன். ஆனால் ராதாமோகன் பிறக்கும்போது எம் ஆர் ராதா சிறையில் இருந்தார். நான் ஒன்று சொன்னால் 100 அர்த்தம் புரிந்து கொள்ளுங்கள் இதற்கு மேல் என்னால் விளக்கமாக சொல்ல முடியாது என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருந்தார்.

இவர் இப்படி பேசியிருந்தது ராதிகா தயார் கீதாவுக்கு பிறந்த கடைசி குழந்தை ராதாமோகன் பிறப்பில் சந்தேகத்தை கிளப்பியுள்ளார். அதாவது எம் ஆர் ராதாவுக்கு தான் ராதாமோகன் பிறந்தாரா என்கிற கோணத்தில் பயில்வான் பேசியிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் திருவான்மியூர் கடற்கரையில் வாக்கிங் சென்று கொண்டிருந்த பயில்வானை நேருக்கு நேராக சந்தித்த நடிகை ராதிகா, என் அம்மா தே……யாவா என கேட்க.

அங்கே சுற்றி இருந்த பொதுமக்கள் அதிர்ந்து போய் உள்ளனர், தொடர்ந்து அசிங்க அசிங்கமாக பயில்வானை திட்டியுள்ளார் ராதிகா. என் தாயாரை பற்றி, என்னை பற்றி, என் கணவரை பற்றி எப்படி நீ தவறாக பேசலாம் என கேட்க பயில்வான் பதில் சொல்ல முடியாமல் திணறியுள்ளார். ஒரு கட்டத்தில் பயில்வான் வாயை திறக்க முயன்ற போது அவரை பேச விடாமல் தொடர்ந்து ராதிகா அசிங்க அசிங்கமாக திட்டி, செருப்பை கழட்டி அடிப்பேன்..ஏன்டா நாயே என ராதிகா கோபத்தின் உச்சிக்கே சென்றுள்ளார். இதன் பின்பு அங்கே இருந்த பொதுமக்கள் இருவரையும் சமாதானம் செய்ய முயன்றுள்ளனர்.

ஆனால் ராதிகா விடுவதாக இல்லை. பயில்வானை வெளுத்து வாங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் பயில்வான், நான் பேசியதில் தவறு இருந்திருந்தால் போய் கேசு போடு, சும்மா எதுக்கு இங்க வந்து கத்திட்டு இருக்க என பயில்வான் கூற. அதற்கு அங்கே இருந்த பொதுமக்கள் , அவர் சொல்வதும் சரி தானே, நீங்க அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டியது தான என கேட்க. அதன் பின்பு தான் அந்த இடத்தில் இருந்து நகர்ந்து சென்றுள்ளார் ராதிகா என கூறபடுகிறது.