திமுக அலுவலகத்தில் இருந்து ஜோதிமணி எம்பி விரட்டியடிப்பா.? உச்சக்கட்ட அவமானத்தில் ஜோதிமணி என்ன செய்தார் தெரியுமா.?

0
Follow on Google News

கரூர் காங்கிரஸ் எம்பியாக இருந்து வருகின்றவர் ஜோதிமணி. திமுக எதிர்கட்சியாக இருக்கும் வரை இவருக்கும் தற்போது திமுக அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜிக்கு சுமூகமான நட்பு இருந்து வந்தது. மேலும் கரூர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர் செந்தில் பாலாஜி. இதனை தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்த பின்பு முக்கிய துறைக்கு அமைச்சரானார் செந்தில் பாலாஜி.

இதன் பின்பு கரூர் மாவட்டத்தில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சியில் அமைச்சர் என்கிற முறையில் செந்தில் பாலாஜிக்கு முக்கியதுவம் அளிக்கப்பட்டு வந்தது, ஆனால் செந்தில் பாலாஜிக்கு இணையான முக்கியத்துவம் தனக்கும் வேண்டும் என ஜோதிமணி எதிர்பார்க்க. இதன் பின்பு தான் இருவருக்கும் உரசல் தொடங்கியதாக கூறப்படுகிறது. மேலும் கரூர் முக்கிய அரசியல் பிரமுகர்களிடம் செந்தில் பாலாஜி பற்றி தவறாக பேசி வந்துள்ளார் ஜோதிமணி.

அமலாக்கதுறை விரைவில் செந்தில் பாலாஜி மீது விசாரணை நடத்த இருப்பதாகவும். இந்த விசாரணைக்கு பின்பு செந்தில் பாலாஜி சிறைக்கு சென்று விடுவார், அதனால் கரூர் அரசியலில் தனக்கென ஒரு இடம் எப்போதும் இருக்கும் என கட்சி நிர்வாகிகளிடம் ஜோதிமணி பேசியது செந்தில் பாலாஜி கவனத்துக்கு சென்றுள்ளதாக கூறப்படும் நிலையில், இதன் பின்பு கரூர் மாவட்ட திமுகவினர் முற்றிலும் ஜோதிமணி எம்பியை புறக்கணிக்க தொடங்கினர்.

இந்நிலையில் தொடர்ந்து திமுகவினருக்கு ஜோதிமணி எம்பிக்கும் தொடர்ந்து உரசல் இருந்து வரும் நிலையில், நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தல் குறித்த கூட்டணி கட்சி பேச்சுவார்த்தை கரூர் மாவட்டத்தில் உள்ள திமுக அலுவகத்தில் நடைபெற்றுள்ளது. இதில் ஜோதிமணி மற்றும் திமுகவினர் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் ஜோதிமணியை வெளியே போ என திமுகவினர் ஆக்ரோஷமாக பேசியுள்ளனர்.

இந்நிலையில் திமுக அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த ஜோதிமணி கூச்சலிட்டு சண்டையிட்டதாவது, உன் வீட்டுக்கு விருந்துக்கா வந்திருக்கேன், வெளியே போலாம் என்று எப்படி சொல்லலாம். மரியாதை இல்லாமல் எப்படி பேசலாம், அதே மாதிரி நான் பேசுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என வீதியில் நின்று திமுகவினரை பார்த்து ஜோதிமணி கூச்சலிட்டார். அப்போது மீடியா இருக்கு என ஒருவர் ஜோதிமணியிடம் தெரிவிக்க.

அதற்கு மீடியா இருந்தால் என்ன.? இவர் என்ன வேண்டுமானாலும் பேசுவாரா என ஜோதிமணி சத்தமிட அங்கே இருந்த ஒருவர் ஜோதிமணி எம்பி கையை பிடித்து சமாதானம் செய்து இழுத்து சென்றார். இந்நிலையில் கரூர் திமுகவினர் மற்றும் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி இடையே நடந்த உரசல் இன்று விதிக்கு வந்துள்ளது குறிப்பிட தக்கது.