நயன்தாரா எங்களை மோசடி செய்துவிட்டார்… நயந்தாராவை சிறைக்கு அனுப்ப தயாராகும் பாதிக்கப்பட்ட நிறுவனம்..

0
Follow on Google News

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாரா 2014ம் ஆண்டு நடித்துக் கொண்டிருந்த பொழுது அவருடன் காதலில் விழுந்தார். ஏற்கனவே நடிகர் சிம்பு, பிரபு தேவா ஆகியோரை காதலித்து தோல்வியடைந்த நயன்தாரா. மூன்றாவதாக விக்னேஷ் சிவன் காதலில் மிக கவனமாக இருந்து வந்தார்.

சுமார் ஏழு வருடங்களுக்கு மேலாக விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நயன்தாரா சினிமாவில் டாப் நடிகையாக உச்சத்தில் இருக்கும் பொழுதே சென்னை மகாபலிபுரம் அருகே விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண நிகழ்வை ஒளிபரப்பு செய்ய பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிலிக்ஸ் நிறுவனத்திற்கு சுமார் 25 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தனர் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி.

இதனை தொடர்ந்து திருமண நிகழ்வு நெட்பிலிக்ஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் நடந்து வந்தது. . திருமணத்திற்கான அனைத்து செலவுகளையும் நெட்பிலிக்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்டது. மேலும் திருமணத்திற்கு வரும் முக்கிய பிரபலங்கள் உட்பட்ட அனைவரும் தொலைபேசி எடுத்து செல்ல அனுமதியில்லை என்கின்ற பல கடும் கட்டுப்பாடுகளுடன், தீவிர பரிசோதனைக்கு பின்பு திருமணம் நடைபெறும் இடத்திற்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

நயன்தாரா தன்னுடைய திருமணத்தை வியாபார செய்ததை அறிந்து, இவருடைய வியாபாரத்துக்கு நாம் எதற்கு விளம்பரம் செய்ய வேண்டும் என்பதால் சினிமா துறையை சேர்ந்த முன்னணி நடிகர்களான அஜித், விஜய், விக்ரம், கமல்ஹாசன் போன்ற பல முன்னணி நட்சதிரங்கள் நயன்தாரா திருமண நிகழ்ச்சில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். இதனால் 25 கோடி ரூபாய்க்கு நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்தை வாங்கிய நெட்பிலிக்ஸ் நிறுவனத்திற்கு ஏமாற்றமே மிஞ்சியது.

பல முக்கிய நட்சதிரங்கள் கலந்து பங்கேற்காததால் பேசிய 25 கோடியிலிருந்து குறைவான தொகைக்கு தான் வெளியிட முடியும் என்று நயன்தாரா – விக்னேஷ் சிவன் தரப்பிடம் நெட்பிலிக்ஸ் நிறுவனம் பேரம் பேசியுள்ளது. ஆனால் அவர்கள் அதற்கு ஒப்பு கொள்ளவில்லை, இதனால் தற்பொழுது வரை நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் நிகழ்வு ஒளிபரப்பப்படாமல் தாமதமாகி கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் தங்களுக்கு வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக தீடிரென அறிவிப்பு வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்கள். திருமணம் முடிந்து நான்கு மாதத்தில் எப்படி குழந்தை பிறக்கும், அதனால் இந்திய சட்டத்திற்கு உட்பட்டு தான் இவர்கள் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றுக் கொண்டார்களா என்கின்ற விசாரணையை அரசு தரப்பில் தொடங்கியது.

அதில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 2016 ஆம் ஆண்டு பதிவு திருமணம் செய்து கொண்டார்கள் என்கின்ற தகவல் உறுதி செய்யப்பட்டு அரசு தரப்பில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் ஏற்கனவே சட்டப்படி பதிவு திருமணம் செய்து கொண்ட நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர், அதை தங்களிடம் மறைத்து புதிதாக திருமணம் செய்து கொள்வது போல் அவர்களின் திருமணம் நிகழ்வை அதிக விலைக்கு விற்பனை செய்து மோசடி செய்துள்ளது நெட்பிலிக்ஸ் நிறுவனத்திற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் விரைவில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் மீது நெட்பிலிக்ஸ் நிறுவனம் தரப்பில் இருந்து மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு நயன்தாராவை – விக்னேஷ் சிவன் இருவரையும் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு அழைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக நெட்பிலிக்ஸ் நிறுவனம் பிரபல வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.