ரசிகர்களின் உயிரை காவு வாங்கும் செயலில் அஜித் குமார்.. பொறுப்பில்லாமல் இப்படி செய்யலாமா.?

0
Follow on Google News

தமிழக மக்களையும்,சினிமாவையும் பிரிக்க முடியாது, அந்த வகையில் இதற்கு முன்பு தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் பலரும் சினிமா துறையில் இருந்து வந்தவர்கள் தான், சினிமா துறையின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்களை மக்கள் தலைவராக கொண்டாடியதின் விளைவு தான், அவர்கள் தமிழகத்தையே ஆளும் அதிகாரத்திற்கு வந்தனர், அந்த வகையில் சினிமா மோகத்தில் தமிழக மக்கள் மூழ்கிப் போய் உள்ளனர்.

ஒரு குறிப்பிட்ட நடிகரின் ரசிகராக இருக்கும் தமிழக இளைஞர்கள், அந்த நடிகரை பின்பற்றி அந்த நடிகர் போன்று முடி வெட்டுவது, உடை அணிவது என்று தன்னை அந்த நடிகனின் அடிமையாகவே தன்னை அர்ப்பணித்து கொள்கிறார்கள். எங்களை போன்ற நடிகர்களை நடிகர்களாக மட்டும் பாருங்கள், நாங்கள் அழுவதும், சிரிப்பதும், நல்லது செய்வதும், கெடுப்பதும் நாட்டுக்காக அல்ல, காசுக்காக என்று சினிமா துறையைச் சேர்ந்த பழம்பெரும் நடிகர் எம் ஆர் ராதா பல வருடங்களுக்கு முன்பே சொல்லிவிட்டு சென்றுள்ளார்.

இருந்தாலும் தற்பொழுது வரை நடிகனை நடிகராக பார்க்காமல் தலைவனாக தலையில் தூக்கி வைத்து, தான் தலைவனாக ஏற்று கொண்ட நடிகரின் ஒவ்வொரு படம் வெளியாகும் போது, அந்த நடிகரின் கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்து கொண்டாடும் கலாச்சாரம் தமிழக இளைஞர்கள் மத்தியில் தொடர்கிறது.கட் அவுட்க்கு பால் அபிஷேகம் செய்த இளைஞர் சிலர் தவறி விழுந்து பரிதாபமாக இதற்கு முன்பு மரணம் அடைந்திருந்தாலும் கூட, கட் அவுட்டுக்கு பால் அபிசேகம் செய்யும் கலாச்சாரம் முடிவுக்கு வரவில்லை.

சினிமாவில் நடிகர்கள், மது அருந்துவதும், சிகரெட் புகைப்பது போன்ற காட்சிகளில் அவர்கள் ஸ்டைலா, கெத்தா, நடிப்பதை பார்த்து அவருடைய ரசிகர்கள் பலர் அந்த பழக்கத்திற்கு அடிமையாகின்றார்கள் என்கின்ற ஒரு கடும் விமர்சனம் இதற்கு முன்பு எழுந்தது. இந்த விமரிசனத்தில் அதிகம் பாதிக்கப்பட்டவர் நடிகர் ரஜினிகாந்த், அந்த வகையில் தனக்கு எதிராக கடும் விமர்சனம் எழுந்த பின்பு கடந்த சில வருடங்களாக தன்னுடைய படத்தின் மது அருந்துவது, புகைபிடிப்பது போன்ற காட்சிகளை முற்றிலுமாக தவிர்த்து வருகின்றார் ரஜினிகாந்த்.

இந்த நிலையில் தற்போது அஜித்தின் சில செயல்பாடுகள் அவருடைய ரசிகர்களை தவறான வழிக்கு கொண்டு சென்று உயிரை காவு வாங்கும் நிலையை உருவாக்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது. தமிழகம் முழுவதும் இளைஞர்கள் சட்டவிரோதமாக பைக் ரேஸ்சில் சமீப காலமாக ஈடுபட்டு காவல்துறையினாரால் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்று வருகிறார்கள்.இதில் பெரும்பாலானோர் சினிமா மோகத்தினால் பைக் ரேஸ் களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் பைக் ரேஸ், பைக் தொடர்பான சண்டை காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க முடியாது. ஆனால் அஜித் போன்ற நடிகர் அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் பைக் ரேஸில் செல்லும் காட்சிகளை புகைப்படமாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிடுவதால், இது அஜித் ரசிகர்களை ஒரு தூண்டுகோலாக அமைந்து அவர்கள் சட்டவிரோதமாக பைக் ரேஸில் ஈடுபட்டு வருவதற்கு வழிவகை செய்து வருகிறது.

அஜித் உலகம் முழுவதும் உள்ள பல இடங்களில் பைக்கில் பயணம் செய்யும் புகைப்படம் அவருக்குத் தெரியாமல் வெளிவருவதற்கான வாய்ப்புகள் இல்லை. காரணம் நான்கு பேர் கொண்ட குழு உடன் தான் பைக் பயணத்தை மேற்கொள்கிறார். அப்படி இருக்கையில் அவருடன் செல்பவர்கள் தவிர்த்து வேறு யாரும் அந்த புகைப்படத்தை எடுத்து வெளியிடவும் முடியாது.

அந்த வகையில் தமிழகத்தில் தற்பொழுது சட்டவிரோத பைக் ரேஸ்கள் அதிகரித்து வரும் இந்த சூழலில், நடிகர் அஜித் சமூகப் பொறுப்புடன் தான் தனிப்பட்ட முறையில் பைக் பயணம் செல்லும் புகைப்படத்தை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும், அது அவருடைய ரசிகர்களை சட்ட விரோத பைக் ரேஸில் ஈடுபடுவதை தடுக்கும். ஆகையால் எதிர்காலத்தில் தன்னுடைய ரசிகர்கள் உயிரை காவு வாங்கக்கூடிய சட்ட விரோத பைக் ரேஸில் ஈடுபடுவது தடுக்க வேண்டும் என்றால்.

அஜித் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் மேற்கொள்ளும் பைக் ரேஸ் புகைப்படங்களை வெளியிடுவது தவிர்ப்பது நல்லது என்று அறிவுரை கூறி வருகின்றனர் சமூக அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் விரைவில் சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு ஒன்றரை வருடம் உலகில் பல இடங்களில் பைக் பயணம் மேற்கொள்ள இருக்கும் அஜித் அச்சமயத்தில் சமூக அக்கைறையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பது பலரின் அறிவுரை என்பதும் குறிப்பிடதக்கது.