பயத்தில் முடங்கிய விஜய்… இதுக்கு எதற்கு அரசியல் ஆசை விஜய் உங்களுக்கு.?

0
Follow on Google News

நடிகர் விஜய் சமீபகாலமாக அவருடைய ரசிகர்களுடன் சந்திப்பு மற்றும் மாணவர்ளுடன் கலந்துரையாடல் மறைந்த தலைவர்களின் சிலைகளுக்கு தன்னுடைய மக்கள் மன்ற நிர்வாகிகள் மூலம் மாலை மரியாதை செலுத்துவது என விஜயின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் அவர் அரசியலில் எண்ட்ரி கொடுப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

இந்த நிலையில் நடிகர் விஜய் தற்பொழுது லியோ படத்தை நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்தடுத்து கைவசம் படங்கள் உள்ளதால் இன்னும் அவர் முழு நேர அரசியலில் இறங்கவில்லை, அந்த வகையில் நாடாளுமன்றத் தேர்தல்க்கு இன்னும் ஆறு மாதங்களை உள்ள நிலையில் அதற்குள் விஜய் அரசியலில் களம் காண்பதற்கு வாய்ப்பில்லை,ஆனால் வரும் சட்டமன்றத் தேர்தலில் விஜய் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விஜய் அரசியல் என்ட்ரி கொடுக்க இருப்பதால்,அரசியல் ரீதியாக ஆளும் தரப்பிடமிருந்து விஜய்க்கு அழுத்தம் வருவதாக விமர்சனம் எழுந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ரத்து பின்னணியில் அரசியல் அழுத்தம் தான் என்கின்ற கருத்தும் உலாவி வருகிறது. ஆனால் லியோ பட குழுவினர் செய்த குளறுபடி தான் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு ரத்துக்கு காரணம் என்றும் ஆளும் தரப்பில் இருந்து எந்த ஒரு அழுத்தமும் விஜய்க்கு கொடுக்கப்படவில்லை என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.

ஆளும் தரப்பில் இருந்து விஜய்க்கு அழுத்தம் கொடுத்து தேவையில்லாமல் விஜயை நாமே வளர்த்து விட வேண்டாம் என்கின்ற முடிவில் ஆளும் தரப்பு விஜயின் நடவடிக்கைகளை சிறிதும் பொருட்படுத்தாமல் கடந்து செல்வதாகவே கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்பொழுது காவேரி விவகாரம் உச்ச கட்டத்தை அடைந்துள்ள நிலையில் கர்நாடகாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில் காவேரி விவகாரம் உச்ச கட்டத்தை அடைந்துள்ள.

சமீபத்தில் தன்னுடைய படத்தின் பிரமோஷன் நிகழ்வுக்கு கர்நாடக சென்ற நடிகர் சித்தார்த் பங்கேற்ற நிகழ்ச்சியில் நடைபெற்ற இடத்திற்குள் அத்து மீறி நுழைந்த கன்னட அமைப்பினர் அங்கிருந்து சித்தார்த்துக்கு எதிராக கடும் எதிர்ப்பு தெரிவித்தனர. இதனை தொடர்ந்து அங்கிருந்து சித்தார்த் வெளியேறியதால் நிகழ்ச்சி பாதியிலே நின்றது,இந்த சம்பவத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் பல அரசியல் கட்சி தலைவர்கள் காவேரி விவகாரம் குறித்து கருத்து தெரிவித்து வரும் நிலையில் நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருப்பதால் காவேரி விவாரம் குறித்து நிச்சயம் தன்னுடைய நிலைப்பாட்டை விஜய் அறிவிக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். காரணம் இது தமிழ்நாட்டின் வாழ்வாதார பிரச்சனை என்பதால் விஜய் நிச்சயம் தமிழர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என பலரும் விஜயை நோக்கி கேள்வி எழுப்பி வரும்கின்றனர்.

ஆனால் விஜய்க்கு நன்கு தெரியும் காவேரி விவகாரத்தில் வாய்ஸ் கொடுத்தால் தன்னுடைய லியோ படம் கர்நாடகாவில் ஓடாது என்றும், இதனால் பெரும் தொகை நஷ்டமாகும், அதனால் தப்பி தவறி கூட காவேரி விவகாரத்தில் கருத்து தெரிவித்தால் இறுதியில் விஜய் கர்நாடகாவிடம் மன்னிப்பு அல்லது வருத்தமோ தெரிவித்தால்தான் அவருடைய படம் ஓடும் சூழல் ஏற்படும் என்பதால் மூச்சு விடாமல் காவேரி விகாரத்தில் வாழை சுருட்டி கொண்டு பதுங்கி விட்டார் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.

அந்த வகையில் எப்படி தமிழர்களின் வாழ்வாதார பிரச்சனைக்கு குரல் கொடுக்காத விஜய்க்கு எதற்கு அரசியல் ஆசை என்கின்ற கடும் விமர்சனமும் தற்பொழுது எழுந்துள்ளது. இந்த நிலையில் விஜய் அரசியல் ஆசை வந்துள்ள நிலையில் நிச்சயம் தன்னுடைய படம் கர்நாடகாவில் ஓடவில்லை என்றாலும் கூட பிற மாநிலங்களில் ஓடி வசூல் சாதனை படைத்தால் போதும் என்கின்ற நோக்கில் துணிந்து காவேரி விவாரத்தில் விஜய் குரல் கொடுத்தால் நிச்சயம் தமிழக மக்கள் மத்தியில் அவருடைய அரசியலுக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தரும் , ஆனால் விஜய்க்கு அதற்கெல்லாம் தைரியம் இல்லை என்கிற விமர்சனம் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.