பொய் சொல்லலாம் அதுக்கு இப்படியா.? ரஜினியை கழுவி கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்..

0
Follow on Google News

சந்திரமுகி 2 படம் சந்திரமுகி முதல் பாகத்தின் அளவிற்கு இல்லை என்றும், படு மோசமாக உள்ளது என்றும் ரிவியூ கொடுத்து வருகின்றனர். அப்படி இருக்கையில், நடிகர் ரஜினி காந்த் சந்திரமுகி இரண்டாம் பாகத்தை பார்த்துவிட்டு வாசு மற்றும் ராகவா லான்ஸை பாராட்டியுள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் நடிகர் ரஜினியை வறுத்தெடுத்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக கொடிகட்டிப் பறந்து கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இவரது நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த படம்தான் சந்திரமுகி. இப்படத்தில் நடிகர் பிரபு, வடிவேலு, நாசர், நடிகை ஜோதிகா, நயன்தாரா, மாளவிகா என ஏராளமான நடிகர்கள் நடித்திருந்தனர். வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியைக் கண்ட சந்திரமுகி திரைப்படத்தில் ‘ராரா’ ‘அத்திந்தோம்’ ‘தேவுடா தேவுடா’ என அனைத்துப் பாடல்களும் சிறியவர்கள் முதல் பெரியவர்களை வரை ரசிக்கும்படியாக இருந்தது.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் வித்யாசாகர்தான் இசையமைத்திருந்தார். சந்திரமுகி படத்தின் கதைக்களம் மற்றும் திரைக்கதை அனைத்தும் ரசிகர்களுக்கு சுவாரசியமான அனுபவத்தைக் கொடுத்திருக்கும். அதுமட்டுமில்லாமல், இது சூப்பர் ஸ்டாருக்கே கம் பேக் படமாக இருந்தது. இப்படத்தில் நடித்த அத்துனை நடிகர்களும் தங்களது கதாப்பாத்திரங்களுக்கு ஏற்றார் போல சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள்.

மன நல மருத்துவராக ரஜினியும், தோட்டக்காரர் பேத்தியாக நயன்தாராவும் நடிப்பில் பின்னியிருப்பார்கள். அதேபோல, காமெடிக்கு பஞ்சமில்லை என்ற உணர்வைக் கொடுக்கும் வைகைப்புயல் வடிவேலுவின் முருகேசன் என்ற கதாப்பாத்திரம் படத்திற்கு கூடுதல் சிறப்பம்சமாக இருந்தது. குறிப்பாக, தன்னை சந்திரமுகியாக பாவித்துக் கொள்ளும் கங்கா என்ற கதாப்பாத்திரத்தில் ஜோதிகாவின் மிரட்டலான நடிப்பையும் நளினமான நாட்டியத்தையும் ரசிக்காதவர்களே இருக்க முடியாது.

இவ்வாறாக சந்திரமுகி படத்தில் ஒவ்வொரு விஷயமுமே ரசிகர்களின் மனதை கவர்ந்திழுக்கும் வகையில் சிறப்பாக அமைந்திருந்தது. மிகப்பெரிய ஹிட் ஆகி இன்று வரை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் கிட்டத்தட்ட பதினெட்டு வருடங்களுக்குப் பிறகு வெளியாகியுள்ளது, இதில் ரஜினியின் மிகப்பெரிய ரசிகனான நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார்.

மேலும், சந்திரமுகியாக நடிகை கங்கனா ரனாவத், பழைய முருகேசனாகவே நடிகர் வடிவேலு நடித்துள்ளனர். இவர்களுடன், நடிகை ராதிகா, மஹிமா நம்பியார், லக்ஷ்மி மேனன் என நட்சத்திரப் பட்டாளமே களமிறக்கப்பட்டுள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் MM கீரவாணி அவர்கள் இசையமைத்துள்ளார். இவர் RRR படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கார் விருது பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சந்திரமுகி2 படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. ரசிகர்களும் ‘டிரெய்லர் மாஸாக இருக்கிறது என்றால் படமும் மிரட்டலாக இருக்கும்” என்று எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். ஆனால், இப்போது படம் வெளியாகி முதல் நாளிலேயே நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்து கொண்டிருக்கின்றன. தியேட்டருக்கு சென்ற ரசிகர்கள் பலரும் ஏமாற்றம் அடைந்ததாக ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் சிலர் ஓரளவு எண்டர்டெயிமெண்ட் படமாக இருப்பதாகத் தெரிவித்து வருகின்றனர்.

எவ்வாறாயினும், படம் வசூல் ரீதியாக கலெக்ஷனை குவித்து விடும் என்று படக்குழுவினர் நம்பிக்கையில் உள்ளனர். இவ்வாறு சந்திரமுகி 2 படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில்தான், நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் பி.வாசு மற்றும் ராகவா லாரன்ஸை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார். அதாவது, மிகப்பெரிய வெற்றி படமான தன்னுடைய சந்திரமுகிய.. புதிதாக, வேறு ஒரு கோண்டத்தில் ஒரு பிரம்மாண்ட பொழுதுபோக்குப் படமாக சினிமா ரசிகர்களுக்கு தந்திருக்கும் நண்பர திரு.வாசு அவர்களுக்கும், அருமையாக நடித்திருக்கும் தம்பி ராகவா லாரன்ஸ் அவர்களுக்கும் மற்றும்
படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்…என்று நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினி மட்டுமின்றி, நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே. சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்டோரும் சந்திரமுகி 2 படத்தைப் பார்த்து பாராட்டியுள்ளனர். இவர்கள் படத்தை ப்ரோமொட் செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் ரசிகர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர். எப்படியானாலும், முருகேசனாக நடிகர் வடிவேலுவின் நடிப்பும், சந்திரமுகியாக கங்கனா ரனாவத்தின் நடிப்பும் அருமையாக இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர். யார் என்ன சொன்னாலும் சரி… நம்ம தியேட்டர்ல படத்தைப் பார்த்தால் தான் தெரியும்… சுமாரான படமா? சூப்பரான படமானு…