பிக் பாஸ் வீட்டில் கூல் சுரேஷ்… யார் யாரெல்லாம் பிக் பாஸ் போட்டியாளர்கள் தெரியுமா.?

0
Follow on Google News

இந்தியா முழுவதும் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி தான் பிக் பாஸ். தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி அறிமுகமானது. முதல் சீசனை தொடர்ந்து தற்போது ஆறு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது. இந்த ஆறு சீசன்களையும் நடிகர் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி இருக்கிறார்.

மேலும், இந்த பிக் பாஸ் வீட்டுக்குள் புதுப்புது வித்தியாசமான டாஸ்க்களை கொடுத்து மக்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டும் வகையில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தற்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இதனால் பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டிருக்கிறது.

இந்த ஏழாம் சீசனில் பிக் பாஸ் வீடு இரண்டாக மாறுகிறது. இரண்டு வீடுகள் இருக்கப் போவதை ‘டபுள் ஆக்ட்டில்’ வந்து ஏற்கெனவே புரொமோவில் தெரிவித்துவிட்டார் கமல். ‘சும்மாவே வீடு ரெண்டாகும்… இப்ப வீடே ரெண்டாயிடுச்சு… இன்னும் என்னென்ன ஆகுமோ… ரெண்டுல ஒண்ணு பார்த்துடலாம்… ரெண்டையுமே பார்த்துடலாம்…’ என்பதுதான் இந்த சீசனின் பன்ச். எப்படியோ, இந்த ஏழாம் சீசனில் நிறைய ஏழரையான சம்பவங்கள் டபுள் டபுளாக நிகழும் என்று எதிர்பார்க்கலாம்.

ஒரு வீடு வழக்கம் போல் அடிப்படையான வசதிகளுடன் இருக்கலாம். இன்னொன்று ‘பேய் வீடு’ மாதிரியான செட்டப்பில் இருக்கக்கூடும். வார இறுதியில் தண்டனை பெறுபவர்கள் இங்குத் தங்கும்படியாக இருக்கலாம் என்று தெரிகிறது. பிக் பாஸ் இந்தி 15-வது சீசனில் ஒரு வீட்டின் செட்டப் காடு மாதிரியாக அமைக்கப்பட்டிருந்தது.

போட்டிக்குள் நுழைபவர்கள் முதலில் அங்குத் தங்கி டாஸ்க்கில் வென்ற பிறகு வசதிகள் இருக்கும் வீட்டின் உள்ளே செல்லும்படியாக போட்டி அமைக்கப்பட்டிருந்தது. அதுபோல் தமிழிலும் நிகழலாம். இதனால் எப்படி இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப் போகும் என்று ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சில போட்டியாளர்களின் பட்டியல் தான் தற்போது வெளியாகி இருக்கிறது.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் முதல் நபராக உள்ளே நுழைந்திருப்பது வெந்து தணிந்தது காடு பிக் பாஸ் வீட்டுக்கு வணக்கத்தை போடு என அதகளப்படுத்தும் போட்டியாளர் கூல் சுரேஷ். சமீபத்தில் தொகுப்பாளினியிடம் அத்துமீறிய கூல் சுரேஷுக்கு சர்ச்சை நாயகன் என்கிற கேட்டகிரியில் பிக் பாஸ் வீட்டுக்கு நுழைய அனுமதி கிடைத்ததா? அல்லது சிம்பு நண்பர் என்பதால் கிடைத்த சிபாரிசா என தெரியவில்லை.

சென்ற முறை ஜிபி முத்து உள்ளே போனது போல இந்த முறை கூல் சுரேஷை முதல் போட்டியாளராக உள்ளே அனுப்ப முடிவு செய்து விட்டார்கள் என்றே தெரிகிறது. பல எழுத்தாளர்களைப் பற்றி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் ஓர் எழுத்தாளரே பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைவது இதுதான் முதன்முறை. ஆம், எழுத்தாளரும், சிறந்த கதைசொல்லியுமான ‘பவா செல்லத்துரை’ போட்டியாளர்களில் ஒருவராக பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லவிருப்பதாகச் சொல்கிறார்கள்.

பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கக்கூடிய அடுத்த பெயர் விசித்ரா. ‘ஜாதி மல்லி’ திரைப்படத்தில் பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டாலும் ‘தலைவாசல்’ படத்தில் இவரது பாத்திரப் பெயரான ‘மடிப்பு அம்சா’ என்பதன் மூலம் இவருக்கு நிறையப் புகழ் கிடைத்தது. கவர்ச்சி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிறகு திருமணமான பின் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

நமக்கு சுவாரஸ்ய மூட்டக்கூடிய இன்னொரு பெயர் யுகேந்திரன். ஆம், பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன். பாடகர், நடிகர், இசையமைப்பாளர் என்று பல்வேறு முகங்களைக் கொண்ட யுகேந்திரனின் இன்னொரு முகம் பிக் பாஸ் வீட்டின் வழியாக வெளியாகலாம். மேலும் விஜய் டிவி ப்ராடக்ட்களான விஷ்ணு (ஆஃபிஸ், சத்யா), சரவணன் (பாண்டியன் ஸ்டோர்ஸ்), வினுஷா (பாரதி கண்ணம்மா), ரவீனா தாஹா (குக் வித் கோமாளி), நிவிஷா போன்ற பெயர்கள் ஏறத்தாழ உறுதியாகியிருக்கின்றன. மாடலிங் கேட்டகரியில் மூன் நிலா (மலேசியா) என்ற பெயர் டிக் ஆகியிருக்கிறது.

மேலும் பாலாஜி முருகதாஸின் நண்பர் அனன்யா ராவ், அமீரைத் தத்தெடுத்து வளர்த்த குடும்பத்தைச் சேர்ந்த ஐஷூ போன்ற பெயர்கள் இப்போதைக்கு நமக்கு அந்நியமாக இருந்தாலும் வெகு விரைவில் பழக்கமாகி விடுவார்கள்.இது தவிர டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர், விஜய் டிவி ரக்ஷன், வீஜே பார்வதி, நகைச்சுவை நடிகர் பாலசரவணன் உள்ளிட்ட சில பெயர்கள் பட்டியலில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. துவக்க நாளன்று யார், யாரெல்லாம் உறுதி என்கிற சஸ்பென்ஸ் முழுமையாக வெளிப்பட்டு விடும்.