வடிவேலுவாக மாறப் போகிறாரா விஜய்.. சினிமா போச்சு…அரசியலும் போச்சா..

0
Follow on Google News

கரூர் சம்பவத்துக்கு பின்பு விஜய் பனையூர் அலுவலகத்தை விட்டு வெளியே வந்து அரசியல் செய்யவில்லை, மக்களை சந்திக்கவில்லை என திமுக உள்ளிட்ட பல கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வந்தன. கடந்த வாரம் கரூருக்கு விஜய் சென்றார். நாமக்கல்லில் காலை 9 மணிக்கும் கரூரில் மாலை 5 மணிக்கும் அவர் பேச வேண்டும் என்பதுதான் ஏற்பாடு. ஆனால் சென்னை நீலாங்கரையிலிருந்து அவர் காலை 8.45 மணிக்கு தான் கிளம்பினார்.

அதனால் நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய பகுதிகளுக்கு அவர் வந்து சேர்வதில் பல மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. இது தெரியாத தொண்டர்களும் மக்களும் நடிகர் விஜயை பார்க்க போகிறோம் என்று ஆர்வத்தில் காலை முதலே அந்த பகுதிகளுக்கு வர ஆரம்பித்து விட்டார்கள். நிலைமை இப்படி இருந்த போது கரூருக்கு இரவு 7 மணிக்கு மேல் வந்த நடிகர் விஜய் பேச ஆரம்பித்தார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி 41 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். இந்த சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து பலரும் விஜயை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சம்பவம் நடந்த பின்பு கரூரை விட்டு விஜய் வெளியேறி திருச்சிக்கு வந்து சென்னைக்கு விமானத்தில் வந்ததும் அவரது தவறான நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. அன்றிரவு டுவிட் போட்டு இரங்கலை தெரிவித்த அவர் 3 நாட்களாக எந்த பதிவும் செய்யவில்லை. அதன்பிறகு விஜய் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் விஜய் கண்டிப்பாக நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிப்பார். தன் மீது இருக்கும் தவறுகளை உணர்ந்து அதை திருத்திக் கொள்வார் என்று தான் பலரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் அந்த வீடியோவில் விஜய் பேசியது நேர்மாறாக இருந்துது. ஒட்டுமொத்தமாக தன் மீது எந்த தவறும் இல்லை. திமுக அரசுதான் காரணம் என்கிற தொனியில் அவர் பேசியதால் கண்டனங்கள் எழுந்தன. முக்கியமாக இந்த வீடியோ விஜயின் இமேஜை மொத்தமாக டேமேஜ் செய்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். இந்த விஷயத்தில் அரசியல் செய்ய விருப்பமில்லை. எந்த கட்சித் தலைவரும் தன் கூட்டத்திற்கு வந்த தொண்டர்கள் உயிரிழப்பதை விரும்ப மாட்டார் என்று பணிவோடும் நாகரீகமாகவும் ஸ்டாலின் பேசியிருந்தார்.

ஆனால் அப்படிப்பட்ட முதலமைச்சரையே பக்குவம் இல்லாமல் நடிகர் விஜய் பேசியிருந்தார். அரசியல் செய்ய தெரியவில்லை என்றால் அரசியல் தெரிந்த 4 பேரை விஜய் தன்னுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவரது கட்சி தொண்டர்களே முணுமுணுக்க ஆரம்பித்து விட்டனர். அதேபோல் விஜயின் அரசில் வருகைக்கு ஆரம்பத்தில் திரைத்துறையில் சிலர் விஜய்க்கு ஆதரவான நிலைப்பாட்டை ஆட்சி ஆரம்பித்தபோது எடுத்தார்கள். ஆனால் அவர்கள் மத்தியிலும் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் விஜயை கண்டிக்கா விட்டாலும் அவர்கள் தங்களது ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து கொஞ்சம் ஒதுங்க செய்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையில் கட்சி தொண்டர்கள் பொறுமை காக்க வேண்டும். அவர்களை ஒழுங்குபடுத்தும் பொறுப்பை தலைவர் ஏற்க வேண்டும். இரண்டுமே தவெகவில் இல்லை. இதுவரை தொண்டர்களை ரசிகர்களை கண்டித்து கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ளுங்கள் என்று ஒரு அறிக்கை கூட விஜய் வெளியிடாமல் இருக்கிறார். கரூரில் நடந்த அசம்பாவிதமும் அதற்குபிறகு விஜய் நடந்து கொண்ட விதமும் கண்டிப்பாக பெரிய பின்னடைவை அவருக்கு கொடுத்திருக்கிறது.

முக்கியமாக அவரை தங்கள் வீட்டில் ஒரு பிள்ளையாகவே கருதிய தமிழ்நாட்டு மக்களின் பார்வை இப்போது அவர் செயல்பாட்டை பார்த்து கண்டிப்பாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த நிலை அப்படியே நீடித்தால் அரசியலில் இருந்து அவர் மீண்டும் சினிமாவுக்கு வந்தாலும் அங்கும் மோசமான எதிரொலி இருக்கும். அநாகரிகமாக பேசி எப்படி இடையில் பல வருடங்கள் நடிகர் வடிவேலு காணாமல் போனாரோ அதே நிலைமை விஜய்க்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று திரைத்துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.