இனி அப்பன் புள்ள உறவே வேண்டாம்… நீ யாரோ நான் யாரோ … விஜய் மகன் சஞ்சய் எடுத்த அதிரடி முடிவு…

0
Follow on Google News

நடிகர் விஜயின் மகனாக இருந்த போதிலும் தனக்கென ஒரு தனிப்பட்ட அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஜேசன் சஞ்சய் எடுக்கும் முடிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. சமீபத்தில் வெளியான ஒரு தகவலின் படி தனது படத்தின் டைட்டில் கார்டுகள் மற்றும் கையொப்பங்களில் தந்தையின் பெயரில் முதல் எழுத்தை இன்ஷியலாக பயன்படுத்தாமல் தாயின் பெயர் சங்கீதாவின் எஸ் என்ற முதல் எழுத்தை அவர் தேர்ந்தெடுப்பதாக கூறப்படுகிறது.

அதாவது வழக்கமாக அப்பாவின் பெயரை முதல் எழுத்தை இன்ஷியலாக பெயருக்கு முன்னால் போடுவதுதான் வழக்கமாக உள்ளது. ஆனால் அவர் இதில் தனது அம்மா சங்கீதாவுக்கு முன்னுரிமை தந்து அப்பா விஜயை கழட்டி விட்டுள்ளார். ஜேசன் சஞ்சயின் இந்த முடிவு ரசிகர்கள் மற்றும் நெட்டிஷன்கள் மத்தியில் பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது. தனது அப்பாவின் அடையாளம் இன்ஷியலாக கூட தன்னிடம் இருக்க கூடாது என்று நினைக்கும் அளவுக்கு மகனை வெறுப்பை விஜய் சம்பாதித்து இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பல வாரிசு நடிகர்கள் தங்கள் தந்தையின் நடிகர் புகழை அடிப்படையாகக் கொண்டுதான் தங்கள் சினிமா பயணத்தை தொடங்குவது வழக்கமாக உள்ளது. அப்படிதான் பல வாரிசு நடிகர்கள் கோலிவுட்டில் உருவாகி இருக்கிறார்கள். ஆனால் நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் அந்த வழியை தேர்வு செய்யாமல் தனது தனிப்பட்ட முயற்சியால் சினிமாவில் முன்னேற விரும்புகிறார் என்பதை காட்டும் முயற்சியாகவும் இதை பலரும் கருதுகின்றனர்.

இந்த நேரத்தில் நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா குறித்து கடந்த சில வாரங்களாக சமூக வலைதளங்களில் பல்வேறு பிரச்சனைகள் பரவி வரும் பரபரப்பான சூழலும் நிலவுகிறது. செங்கல்பட்டு கோர்ட்டில் விவாகரத்து கேட்டு சங்கீதா மனுதாக்கல் செய்த சூழலில், நடிகை திரிஷாவுடன் திருமண விழாவுக்கு விஜய் வந்ததாகவும் இந்த விவகாரத்தில் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் இன்னும் பற்றி எரிகிறது.

இப்படி ஒரு மோசமான பின்னணியில் விஜய் குடும்ப விவகாரம் சந்தி சிரிக்கும் நிலையில், ஜேசன் சஞ்சய் எடுத்த இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் புதிய கருத்துக்களையும் யூகங்களையும் உருவாக்கியுள்ளது. குறிப்பாக அவர் தனது சகோதரி மற்றும் தாய்க்கு ஆதரவாக மட்டுமே இருப்பதாகவும் தெரிய வருகிறது. குடும்ப தலைவனாக விஜய் தடம் மாறி போனாலும் ஒரு தாய்க்கு மகனாக ஒரு சகோதரிக்கு அண்ணனாக குடும்பத்தை வழிநடத்தும் ஒரு கண்ணியமிக்க இளைஞராக அவரை பலரும் பாராட்டுகின்றனர்.

வெளிநாட்டில் சினிமா இயக்கம் குறித்து பயிற்சி மற்றும் கல்வி கற்று இயக்குனராக தனது சினிமா பயணத்தை தொடங்கியுள்ள ஜேசன் சஞ்சய் தனது முதல் படைப்பான சிம்கா படத்தின் மூலம் எந்த வகையான அடையாளத்தை உருவாக்க போகிறார் என்பது குறித்து ரசிகர்கள் மத்தியிலும் கோலிவுட் வட்டாரத்திலும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அந்த படத்தை லைகா புரடக்சன்ஸ் தயாரித்த நிலையில், படத்தை பார்த்த தயாரிப்பு நிர்வாகிகள் மீண்டும் நாம் இணைந்து ஒரு படம் பண்ணலாம் என்றும் ஜேசன் சஞ்சயிடம் உறுதியளித்துள்ளனர்.

குடும்பப் பின்னணியை தாண்டி தனது திறமையால் தனிப்பாதையை உருவாக்கும் அவரது முயற்சி எதிர்காலத்தில் முக்கியமான ஒரு நட்சத்திர இயக்குனராக அவர் உருவாகுவாரா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. அதே நேரத்தில் ஏற்கனவே தனது தந்தையை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கிய ஜேசன் சஞ்சய் இப்போது அவரது இன்ஷியலையும் தனது பெயருக்கு முன்னால் போடாமல் தவிர்ப்பது இனி அப்பா மகன் உறவே வேண்டாம் என்ற தீர்மானமான ஒரு முடிவுக்கு அவர் வந்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.