பவன் கல்யாண் 1 மணி நேர பேச்சு…. இறங்கி வந்த விஜய்… பிரதமர் மோடி மேடையில் விஜய்…

0
Follow on Google News

நடிகர் விஜய்யை தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையை பாஜக டெல்லி தலைமை தீவிர படுத்திருக்கிறது, இதற்காக ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் மூலம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய்யை தொடர்பு கொண்டு சுமார் ஒரு மணி நேரம் பவன் கல்யாண் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்பாக தன்னுடைய அண்ணன் சிரஞ்சீவி தங்களை போன்று தான் தனித்து போட்டியிட்டு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று கட்சியை தொடங்கினார், சிரஞ்சீவி செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியது, ஆனால் அவர் தற்போது அரசியலில் இல்லை என்பதை விஜயிடம் எடுத்துரைத்த பவன் கல்யாண் ,ஆனால் தன்னை பாருங்கள் நான் சந்திரபாபு நாயுடு மற்றும் பாஜக உடன் கூட்டணி அமைத்தேன்.

தற்பொழுது எங்கள் கட்சியிடம் 23 எம் எல் ஏ 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நான் துணை முதல்வர் என ஆட்சி அதிகாரத்தையும் பங்கு பெற்றிருக்கிறோம் என ஜன சேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் விஜயுடன் எடுத்து தெரிவித்திருக்கிறார். மேலும் தற்பொழுது தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் பேசிய பவன் கல்யாண் மிகவும் மோசமான நிலையில் தமிழக அரசியல் நிலவரம் இருக்கிறது.

மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் அவர்களுக்கு மாற்று சக்தியாக உங்களை நிச்சயம் வளர விரும்ப மாட்டார்கள், மேலும் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்கின்ற உங்கள் முழக்கத்தை தேசிய ஜனநாயக கூட்டணி ஏற்றுக்கொண்டு நீங்கள் உள்ளே வரும் பட்சத்தில் உங்களுக்கு ஆட்சியிலும் அதிகாரத்தையும் பங்கு கொடுக்கப்படும். மேலும் வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளை மட்டும் தேர்வு செய்து நீங்கள் போட்டியிடுங்கள். உங்களுக்கு துணை முதல்வர் கொடுக்கப்படும் என்றெல்லாம் உறுதியளித்து இருக்கிறார் பவன் கல்யாண்.

தொடர்ந்து பவன் கல்யாண் பேசியதை கேட்ட விஜய் பாஜகவை கொள்கை எதிரியாக மக்கள் மத்தியில் நாங்கள் வெளிப்படுத்தி விட்டோம், அப்படி இருக்கையில் எப்படி நாங்கள் பாஜக இருக்கும் கூட்டணியில் இணைந்தால் அது மக்கள் எங்களுக்கு எதிராக மாட்டார்களா என்று விளக்கமும் கொடுத்திருக்கிறார் விஜய். ஆனால் அதற்கு பவன் கல்யாண் இதற்கு முன்பு திமுகவே பாஜக உடன் கூட்டணியிலிருந்து மத்தியில் ஆட்சி அதிகாரத்தை ருசித்தவர்கள் தான் என்றும் விளக்கம் கொடுத்திருக்கிறார் பவன் கல்யாண்.

மேலும் தமிழகத்தை பொறுத்த அளவு தனித்த ஆட்சி என்கின்ற வரலாறு கிடையாது கூட்டணி மூலமே ஆட்சியை அமைக்க முடியும் , மேலும் தற்போது இருக்கும் அரசியல் களம் அப்படித்தான் உள்ளது, அதனால் தான் திமுகவும் தன்னுடைய கூட்டணியை வலுப்படுத்தி இருக்கிறது. மேலும் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாதது இதெல்லாம் மக்களிடம் எடுத்துக் கூறி,

நாங்கள் போட்டியிட்டு வாக்குகளை பிரித்தால் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்துவிடும், திமுகவை வீழ்த்துவதற்காக தான், தமிழகத்தை காப்பாற்ற தான் கூட்டணியில் இணைந்தோம் என்று நீங்கள் தெரிவித்தால் நிச்சயமாக மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று பவன் கல்யாண் விஜய் இடம் பேசி இருக்கிறார். சுமார் ஒரு மணி நேரம் நடந்த அந்த பேச்சுவார்த்தையில் விஜய் தரப்பிலிருந்து பவன் கல்யாணிக்கு பாசிட்டிவ் பதில் வந்ததாக கூறப்படுகிறது.

அந்த வகையில் தற்பொழுது திருச்சி வரும் பிரதமர் மோடி அடுத்த முறை தமிழக வரும்பொழுது அதே மேடையில் விஜய் பங்கு பெறுவதற்கான வாய்ப்பு மிக பிரகாசமாக இருக்கிறது என்கின்ற தகவலும் வெளியாகி உள்ளது.