ஒருவர் எவ்வளவு சிறந்த மனிதராக இருந்தாலும் ஒழுக்கத்தில் அவர் தடுமாறும் பட்சத்தில் அவர் மீது வெறுப்பும் அதிருப்தியும் எளிதாக ஏற்பட்டு விடுகிறது. தலைவராக மதிக்கப்படும் ஒருவர் ஒழுக்கத்திலும் கம்பீரமானவராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதுதான் வழக்கமாக உள்ளது. அந்த வகையில் நடிகர் விஜய்க்கும் நடிகை திரிஷாவுக்கும் உள்ள நெருக்கமான நட்பு இப்போது பெரிய அளவில் தமிழ்நாட்டு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக விஜய் அதை இன்னும் பப்ளிக்கில் ஊர்ஜிதப்படுத்தியது மேலும் அதை தீவிரமாக்கியுள்ளது.
அதனால் திரிஷா விவகாரத்தை இன்னும் விஸ்வரூபம் ஏற்படுத்த சிலர் திட்டமிட்டு அதற்கேற்ப காய்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் விஜய் குறித்து அவரது மனைவி சங்கீதா கூறும் குற்றச்சாட்டுகள், புகார்கள் இன்னும் பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறி வருகிறது. அதனால் நடிகர் விஜயின் மனைவி சங்கீதா மிக விரைவில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் விஜயும் அவரது மனைவி சங்கீதாவும் கடந்த 1999ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். லண்டனைச் சேர்ந்த சங்கீதா திருமணத்துக்கு பிறகு சென்னையில் விஜயுடன் வாழ்ந்து வந்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். 26 ஆண்டுகளாக திருமண வாழ்வில் இருந்த போதிலும் கடந்த சில ஆண்டுகளாக விஜயும் சங்கீதாவும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த விஷயத்தை சங்கீதாவை வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
இதனை உறுதி செய்யும் விதமாக சங்கீதா, கடந்த மாதம் 27ம் தேதி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்த நிலையில் இது வெளிச்சத்துக்கு வந்தது. அந்த மனுவில் நடிகை ஒருவருடன் விஜய் சில ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும் அதை பலமுறை நான் கண்டித்தும் அவர் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து விஜயும் கடந்து சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த ஒரு திருமண வரவேற்பு விழாவில் நடிகை திரிஷாவுடன் ஜோடியாக பங்கேற்று மணமக்களை வாழ்த்தி தமிழக மக்களுக்கு பலத்த அதிர்ச்சியை தந்தார். குறிப்பாக இது விஜயின் ரசிகர்களிடமும் தவெக கட்சியினர் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக விஜயின் இந்த செயலால் அவரது மனைவி சங்கீதா கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
அதனால் சட்டசபை தேர்தலுக்கு முன்பு விஜய் மனைவி சங்கீதா செய்தியாளர்களை நேரில் சந்தித்து தனக்கும் விஜய்க்கும் இடையிலான பிரச்சனைகளை பொதுவெளியில் பேசலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே தனியார் டிவி சேனல் ஒன்றில் சங்கீதா 2 மணி நேரம் நேர்காணல் ஒன்று கொடுத்திருப்பதாகவும் அதில் அவரது குடும்பத்தில் நடந்த பல விஷயங்களை பல பிரச்சனைகளை வெளிப்படையாக சொல்லி இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
எப்படி இருந்தாலும் நடிகர் விஜய்க்கு அவரது மனைவி சங்கீதா மூலம் ஏற்படும் இந்த குடும்ப விவகார பிரச்சினைகளால் கண்டிப்பாக சட்டசபை தேர்தலில் விஜய்க்கும் அவரது தவெக கட்சிக்கும் ஒரு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். செய்தியாளர்களை சந்திக்கும் சங்கீதா தனது விஜய் குறித்து வைக்கப்படும் கடுமையான விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் நிச்சயமாக அரசியல் களத்தில் விஜய் மீதான அபிமானத்தை அபிப்ராயத்தை மக்கள் மத்தியில் மாற்றும். அவர் மீதான பார்வையை வேறுபடுத்தும். இது தேர்தலில் தவெக கட்சிக்கு பெரிய பாதிப்பை தரவும் அதிக வாய்ப்புள்ளது.

