வரும் சட்டசபை தேர்தலில் திமுகவை வீழ்த்துவதற்காக கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாகவே வலிமையான கூட்டணியை அமைப்பதற்கான வேலையை தொடங்கினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. அதற்காக அதிமுகவுடன் கூட்டணி உறுதி செய்தவர் ,அதே நேரத்தில் திமுக கூட்டணியை உடைத்து பலவீனப்படுத்த வேண்டும் என்று தன்னுடைய வியூகத்தை வகுத்துக் கொடுத்தார் அமித்ஷா.
ஆனால் திமுக கூட்டணியில் இருந்த எந்த கட்சியும் வெளியே வரவில்லை மேலும் தேமுதிகவும் திமுக பக்கம் சென்று விட்டது. குறிப்பாக கடந்த சட்டசபை தேர்தலில் இந்திய கூட்டணியில் இருந்த ஓ பன்னீர்செல்வம் திமுக பக்கம் சென்று விட்டார். இந்த நிலையில் திமுகவில் இருக்கும் காங்கிரஸ் கட்சி வெளியேறி விஜயுடன் கூட்டணி சேருவார்கள், அப்படி சேர்ந்தால் தமிழகத்தில் உள்ள மைனாரிட்டி வாக்குகள் முழுமையாக விஜயும் காங்கிரசும் பிரித்து விடுகிறார்கள்.

தேசிய ஜனநாயக கூட்டணி எளிமையாக வெற்றிபெறும் என்று போட்ட கணக்கும் ஈடுபடவில்லை. இப்படி ஒரு சூழலில் சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ஒரு சர்வே ரிப்போர்ட் சென்று இருக்கிறது. அதில் நடிகர் விஜய் தனித்துப் போட்டியிடும் பட்சத்தில் அவர் பிரிக்க இருக்கும் வாக்குகள் பெரும்பாலும் தேசிய ஜனநாய க கூட்டணிக்கு வர வேண்டிய வாக்குகள் தான் என்றும்,
அதே நேரத்தில் திமுக அரசு சமீபத்தில் தமிழக பெண்களுக்கு அறிவித்த 5000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை பெண்கள் மத்தியில் திமுகவுக்கு இருந்த அதிர்ச்சி அலை சற்று மாறியிருக்கிறது . இந்த நிலையில் விஜய் கூட்டணிக்குள் கொண்டு வந்தால் திமுக கோட்டை என்று அழைக்கக்கூடிய சென்னையிலேயே தேசிய ஜனநாயக கூட்டணி கணிசமான வெற்றி பெறலாம்.
மேலும் டெல்டா பகுதியில் உள்ள 21 தொகுதிகளில் 18 தொகுதிகள் தற்பொழுது திமுக கைவசம் இருக்கு, அந்த டெல்டா பகுதியில் செல்வாக்கு மிக்க விஜய் கூட்டணிக்குள் வரும் பொழுது தேசிய ஜனநாயக கூட்டணி டெல்டா பகுதிகளையும் கணிசமான வெற்றியைப் பெறும், அதே போன்று திருச்சி புதுக்கோட்டை பகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஓரளவு வெற்றியைப் பெறும்.
ஏற்கனவே அதிமுக பாஜக கொங்கு மண்டலத்தில் வலுவாகவும், பாமக இந்த கூட்டணியில் இருப்பதால் வட மாவட்டங்களில் வலுவாகவும் மற்றும் தென் மாவட்டங்களில் அமமுக இருப்பதால் அங்கேயும் வலுவாகவும் மேலும் கன்னியாகுமரி நாகர்கோவிலில் பாஜக வலுவாக இருக்கிறது.
அப்படி இருக்கும் பொழுது விஜய் உள்ளே வரும் பொழுது நமக்குத் தேவையான மிகப்பெரிய மெஜாரிட்டியை வரும் 2026 சட்டசபை தேர்தலில் பெற்று ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று சர்வே ரிப்போர்ட் அமித்ஷாவுடன் தெரிவித்து இருக்கிறது .
குறிப்பாக 2021 சட்டசபை தேர்தலில் 1000 ஓட்டுக்கு குறைவாக சுமார் 8 தொகுதிகளில் நமது கூட்டணியை தோல்வியை தழுவியதையும் அமித்ஷாவிடம் நினைவுபடுத்திய அந்த சர்வே ரிப்போர்ட், வெறும் ஒன்றரை சதவீத வாக்குகள் மட்டும் வைத்திருக்கும் தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்ததன் மூலம் தொகுதிக்கு ஆயிரம் வாக்கு திமுகவுக்கு கூடுதலாக கிடைக்க வாய்ப்புள்ளது,
அந்த வகையில் விஜய் போன்ற ஒருவர் கூட்டணிக்குள் வந்தால் திமுகவை வீழ்த்தி வெற்றி பெறலாம் என்கின்ற அமித்ஷாவுக்கு சென்ற சர்வே ரிப்போர்ட்டை தொடர்ந்து தொடர்ந்து அமித்ஷா தரப்பு விஜய் இடம் பேசி வருவதால் அடுத்த சில நாட்களில் விஜய் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகின்றது.

