ஒரே மாதிரியான நிறத்தில் உடை அணிந்து ஒரே காரில் ஜோடியாக வந்தது பெரிய பிரச்சனையை கிளப்பியுள்ளது. குறிப்பாக இந்த விவகாரத்தில் நடிகர் விஜய் அரசியல்வாதியாகவும் குடும்ப தலைவராகவும் இதற்கு பல்முனை தாக்குதல்களை சந்தித்து வருகிறார். நடிகை திரிஷாவுக்கும் தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் தொழிலதிபர் வருண் மணியனுக்கும் கடந்த 2015ம் ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது திரிஷாவுக்கும் வருண் மணியனுக்கும் நடந்த நிச்சயதார்த்த புகைப்படங்கள் பத்திரிகைகளில் ஊடகங்களில் வெளியானது. ஆனால் திருமணம் எப்போது என ரசிகர்கள் எதிர்பார்த்த போது திருமணம் தடைபட்டு நின்றுவிட்டதாக கூறப்பட்டது. திருமணத்தை நிறுத்தியதே திரிஷா தான் என்றும் பேசப்பட்டது.
தனது திருமணம் குறித்து டிவீட் செய்த நடிகை திரிஷா, எனது திருமணம் நிச்சயதார்த்தத்துடன் தடைபட்டு நின்றது குறித்து பல கணிப்புகள் வலம் வருவதைப் பார்த்து வியப்பாக உள்ளது. நான் ஹேப்பியாக சிங்கிளாக இருக்கிறேன் என்று அப்போதே டிவீட் செய்தார். திருமணம் முடிந்த பிறகு நீ சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட வேண்டும் என்று வருண் மணியன் கூறியதாகவும், சினிமா என் உயிர். அதை விட்டுவிட்டு திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று திரிஷா கூறியதாகவும் ஒரு தகவல் அப்போது பரவியது.

இந்நிலையில் அப்போது ஒரு நேர்காணலில் பேசிய நடிகை திரிஷா, நான் திருமணம் செய்து கொள்வதாக இருந்த நபர் நடிப்பை கைவிடுமாறு சொன்னார். படங்களில் நடிப்பதை நிறுத்துவதற்கு பதிலாக நான் திருமணத்தை நிறுத்திவிட்டேன். நான் கர்ப்பமானால் மட்டுமே நடிப்பிலிருந்து பிரேக் எடுப்பேன். எனக்கு கதாநாயகி வாய்ப்பு கிடைக்காவிட்டால் என் இமேஜூக்கு ஏற்ற கேரக்டர்களில் நடிப்பேனே தவிர சினிமாவை விட்டுப் போக மாட்டேன்.
உயிர் உள்ள வரை படங்களில் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே என் ஆசை என்றும் திரிஷா கூறியிருந்தார். சினிமா மீதான தீராத காதலால் வீடியோ கேமராவை தன் முதுகில் பச்சை குத்தி இருக்கிறார். சினிமாவில் நடிகை ஆனதிலிருந்து பிரேக் எடுக்காமல் தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் என படங்களில் திரிஷா நடித்து வருகிறார். மேலும் இந்தி படவுலகம் பக்கமும் திரிஷா சென்று வந்தார்.
கடந்த 23 ஆண்டுகளாக திரைப்படங்களில் கதாநாயகியாகவே நடித்துக் கொண்டிருக்கும் சாதனைக்குரியவர் திரிஷா. அவருக்கு வயது ஒரு பெரிய விஷயமே இல்லை என்று தொடர்ந்து அவரை கதாநாயகி வாய்ப்புகள் தேடி வந்து கொண்டிருக்கிறது. திரிஷாவின் கேரியர் லேசாக டல் அடிக்கும்போது எப்படியும் ஒரு படம் சூப்பர் ஹிட் ஆகிவிடும். அதன் பிறகு அவர் மீண்டும் கேரியரின் உச்சத்துக்கு சென்று விடுவார். இப்படித்தான் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதற்கிடையே குந்தவை கேரக்டரை வைத்து பார்த்திபன் கமெண்ட் சொல்ல அவரைக் கண்டித்து திரிஷா டிவீட் செய்தார். அதைப் பார்த்த பார்த்திபன் நான் வருத்தம் கேட்டது தவறு என்று உணர்கிறேன். நான் ஒன்றும் அவரின் புகைப்படத்தை காட்டச் சொல்லி வேண்டும் என்றே கமெண்ட் செய்யவில்லை. எனக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத 3வது மனுஷி. அவரது 3ம் தரமான டிவீட் பார்த்து இந்த வீடியோவை வெளியிட்டுள்ளேன் என்று பார்த்திபன் கூறியிருக்கிறார்.
இதுவும் தற்போது பெரிய விவகாரமாக இணையத்தில் பேசுபொருளாகி விட்டது. அதே நேரத்தில் ஏற்கனவே சில நபர்களுடன் கிசுகிசுக்கப்பட்ட திரிஷா, நடிகர் விஜயின் குடும்ப வாழ்வுக்கும் அவரது அரசியல் பயணத்துக்கும் பெரிய தலைவலியாக மாறியிருக்கிறார் என்றும் ரசிகர்கள் பலர் கடுமையாக விமர்சிக்கின்றனர்

