இவர்கள் பற்றியது தான் பத்து தல படத்தின் கதையா.? படம் எப்படி இருக்கு தெரியுமா.?

0
Follow on Google News

ஜெயலலிதா முதல்வராக கடந்த 2011 முதல் 2016 வரை இருந்த அதிமுக ஆட்சி காலத்தில் போயஸ் கார்டன் லாபியில் நெருக்கமான நபராக இருந்தவர் சேகர் ரெட்டி, தமிழ்நாட்டில் பல இடங்களில் மணல் குவாரியை குத்தகைக்கு எடுத்தார். இதன் மூலம் பல கோடியை சம்பாரித்தவர் சேகர் ரெட்டி. மத்திய பாஜக அரசு பணமதிப்பீடு கொண்டு வந்த பொது. பலர் சட்ட விரோதமாக கருப்பு பணத்தை வங்கிகள் மூலம் மாற்றம் செய்த்தனர்.

அப்போது சென்னையில் நடைபெற்ற அதிரடி சோதனையில், தொழிலதிபர் சேகர்ரெட்டியின் வீட்டில் இருந்து 147 கோடி ரூபாய் பணமும், 178 கிலோ தங்கமும் பறிமுதல்செய்யப்பட்டது. அதில், 10 கோடி ரூபாய்க்கும் மேல் புதிய 2,000 ரூபாய் நோட்டுகளும் பிடிபட்டன. இந்த சம்பவத்திற்கு பின்பே சேகர் ரெட்டி யார் என்பது தமிழக மக்களுக்கு தெரிய வந்தது.

இந்நிலையில் தற்பொழுது நடிகர் சிலம்பரசன், கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியாகியுள்ள பத்து தல படத்தில் நடிகர் சிலம்பரசன் மணல் மாஃபியாவாக நடித்துள்ளார், முதலமைச்சரை தனது கட்டுக்குள் வைத்திருக்கும் சிலம்பரசன், தான் சொல் பேச்சை கேட்டு தலையாட்டும் முதலைவராக முதல் அமைச்சரை கன்ட்ரோல் செய்து வைத்துள்ளார். துணை முதல்வராக கெளதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ளார்.

முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவருக்கும் இடையில் நடக்கும் அரசியல் போட்டிகள், மணல் மாஃபியா வான சிலம்பரசன் கோடி கோடியாக சம்பாரிக்கும் பணத்தில் பல உதவிகளை செய்து வருகிறார். இந்த படம் வழக்கமான மசாலா படமாக இருந்தாலும் பார்க்கும் படியாக உள்ளது, இடை வேளைக்கு பின்பு சிம்பு பத்து தல படத்தில் மிரட்டியுள்ளார். நடிகை பிரியா பவனி ஷங்கர் தேர்தலில் போட்டியிடுகிறார் ஆனால் எதிர்த்து போட்டியிட்டவரின் பண செல்வாக்கு பிரியா பவானி ஷங்கரை தோல்வி அடைய செய்துவிட்டுகிறது.

மொத்தத்தில் பத்து தல படம், கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வராக இருந்த பன்னீர் செல்வம் இருவருக்கும் இடையில் நடக்கும் அரசியல் போட்டி, மற்றும் அதிமுக ஆட்சியில் மணல் மாஃபியா வாக இருந்த சேகர் ரெட்டி ஆகியோரின் சாயலில் கதை நகர்வதை பார்க்க முடிகிறது. மொத்தத்தில் படம் ரசிகர்களால் பாராட்டும்படி உள்ளது.