விடுதலை படத்திற்கு இன்னும் 20 நாள் சூட்டிங் இருக்கா.? இதுக்கு ஒரு முடிவே இல்லையா.?

0
Follow on Google News

விடுதலை படம் வெளியானால் தன்னுடைய சினிமா வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு சென்று விடும் என சூரி மிகுந்த நம்பிக்கை இருந்து வருகிறார். விடுதலை படம் தொடங்கி சுமார் மூன்று வருடங்கள் ஆன நிலையில் நாளை திரைக்கு வர இருக்கிறது. மேலும் ஆரம்பத்தில் கதாநாயகனாக சூரி நடிக்கும் காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்ட நிலையில், விடுதலை படத்திற்குள் விஜய் சேதுபதியை கொண்டு வந்தார் வெற்றிமாறன்.

விஜய் சேதுபதி மற்றும் சூரி இருவரும் நடித்து முடித்த பின்பு, மேலும் வெற்றிமாறனுக்கு திருப்தி இல்லை என இருவரிடமும் மேலும் கால் சீட் கேட்டார் வெற்றிமாறன். விஜய் சேதுபதி மற்றும் சூரி இருவரும் மேலும் கால் சீட் கொடுத்து நடித்து கொடுத்தனர். இதனை தொடர்ந்து விடுதலை படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்த பின்பு சூரி நடித்த காட்சிகள் சில திருப்தியில்லை என மேலும் சூரியிடம் கால் சீட் கேட்டுள்ளார் வெற்றிமாறன்,

சூரி மேலும் கால் சீட் கொடுத்துள்ளார். இப்படி விடுதலை படத்தில் இருந்து தங்களுக்கு எப்போது விடுதலை என சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் சிக்கி தவிக்க, ஒரு வழியாக விடுதலை படத்தின் முதல் பாகம் நாளை வருகிறது, இந்நிலையில் இரண்டாம் பாகத்தை பார்த்த வெற்றிமாறன் சில காட்சிகள் திருப்பதியில்லாமல், மீண்டும் படப்பிடிப்பு நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார்.

முதல் பாகத்தில் சூரி கதாபாத்திரம் பெரும் அளவு பேசப்படும் என்றும், இரண்டாம் பக்கத்தில் விஜய் சேதுபதி அதிக காட்சியில் இடம் பெறுவார் என கூறப்படுகிறது, அந்த வகையில் விஜய் சேதுபயிடம் இரண்டாம் பாகத்தில் நடிக்க மேலும் 20 நாள் கால்சீட் கேட்டுள்ளார் வெற்றிமாறன், அதனடிப்படையில் விடுதலை முதல் பாகம் வெளியான பின்பு இரண்டாம் பக்கத்தின் ஷட்டிங் நடைபெறும் என கூறப்படுகிறது.