மக்களை முட்டாளாக்கிய ரஜினியின் நரி தந்திரம்… தரமான சம்பவம் செய்யும் நடிகர் விஜய்…

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்த் நான் அரசியலுக்கு வருவேன், அரசியலுக்கு வருவேன், என்று அவருடைய ரசிகர்களையும், மக்களையும் உசுப்பேத்தி விட்டு இறுதி கட்டத்தில் நான் அரசியலுக்கு வருவதில்லை என தெரிவித்து, தன்னை நம்பிய ரசிகர்களுக்கும், அரசியலுக்கு வருவார் என எதிர்பார்த்த மக்களுக்கும் அல்வா கொடுத்துவிட்டார் ரஜினிகாந்த்.

அந்த வகையில் பொதுவாகவே நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் ஸ்டண்ட் என்பது, அவருடைய படங்களை ஓட வைப்பதற்காக தான் என்கின்ற ஒரு விமர்சனம் இதற்கு முன்பு இருந்து வந்த நிலையில், தற்போது விஜய் அரசியல் என்ட்ரி குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருவதும் கூட, ஒருவேளை ரஜினி செய்த அதே தந்திரத்தை பயன்படுத்தி, தன்னுடைய படத்தை ஓட வைப்பதற்காக விஜய், நான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்கிறாரா.? என்கின்ற ஒரு விமர்சனம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட,

நடிகர் ரஜினிகாந்த் போன்று அப்படியெல்லாம் விஜய் ஏமாற்றி விட மாட்டார் நிச்சயம் அவர் அரசியலுக்கு வருவார் என்று அவருடைய மறைமுக அரசியல் நகர்வுகள் உணர்த்துகிறது. குறிப்பாக நடிகர் விஜய் அரசியல் ரீதியாக ஆரம்ப கட்டத்தில் இருந்து சில அழுத்தங்களை சந்தித்து வருகின்றார். தமிழகத்தை ஆண்ட இரண்டு திராவிட கட்சிகள் தரப்பிலிருந்து விஜய்க்கு அரசியல் ரீதியாக ஒவ்வொரு காலகட்டத்திலும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்துள்ளது.

அதுவகையில் காவலன் படம் வெளியான நேரத்தில் அப்போது ஆளும் திமுக தரப்பிலிருந்து விஜய்க்கு அழுத்தம் தரப்பட்டது. பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளை தாண்டி தான் காவலன் படத்தை விஜய் வெளியிட முடிந்தது. அதேபோன்று நடிகர் விஜய் நடித்த தலைவா படம் வெளியான போது அப்போது ஆட்சியில் இருந்த முதல்வர் ஜெயலலிதா தரப்பிலிருந்து கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டது.

தலைவா படத்தையும் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து தான் வெளியிட்டார் நடிகர் விஜய். அந்த வகையில் தமிழகத்தில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும், விஜய்க்கு அரசியல் ரீதியான அழுத்தங்கள் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வந்துள்ளது, இதெல்லாம் தான் நடிகர் விஜய்க்கு அரசியலுக்கு வர வேண்டும் என்கின்ற ஒரு எண்ணத்தை உருவாக்கியதாக கூறப்படுகிறது.

அந்த அதிகார நாற்காலியில் அமர்ந்து கொண்டு தானே என்னை இந்த ஆட்டு ஆட்டுகிறீர்கள், நானே அந்த நாற்காலியை சொந்தமாக்கிக் கொள்கின்றேன் என்கின்ற ஒரு மனநிலை நடிகர் விஜய்க்கு உருவாக்கியதே தமிழகத்தை ஆண்ட இரண்டு திராவிட கட்சிகள் தான். ஒருவரை தொடர்ந்து தொந்தரவு கொடுக்கும் பொழுது தான் அந்த நபர் ஒரு கட்டத்தில் வீறு கொண்டு எழும் நிலை உருவாகிறது.

இதற்கு முன்பு எம்ஜிஆருக்கு தொடர்ந்து கொடுத்த தொந்தரவின் காரணமாக தான், அவர் தனியாக கட்சி தொடங்கி முதல்வராகி ஆட்சி அமைத்தார். அப்படி ஒரு சூழ்நிலை தான் விஜய்யும் இன்று தனியாக கட்சி ஆரம்பித்து ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்திற்கு அவரை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

மேலும் தன்னை நம்பி மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது, அவர்களுக்கு தான் ஏதாவது செய்ய வேண்டும் என்கின்ற எண்ணமும் நடிகர் விஜய்க்கு இருக்கிறது. குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் போன்று தன்னுடைய ரசிகரை கடைசி வரை நம்ப வைத்து ஏமாற்றி விடாமல், தன்னை இந்த அளவுக்கு உயரத்தில் கொண்டு வந்து அமர்த்திய தன்னுடைய ரசிகனுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்றால், தான் அரசியலுக்கு வந்தால் தான் அதை செய்ய முடியும் என்கின்ற ஒரு நோக்கமும், நடிகர் விஜய் அரசியல் என்ட்ரிக்கு காரணம் என கூறப்படுகிறது.

அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் மாதிரி, ஒவ்வொரு முறையும் தன்னுடைய பட வரும்பொழுது, நான் அரசியலுக்கு வருகிறேன், அரசியலுக்கு வருகிறேன் என்று தன்னுடைய கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்யும் ரசிகர்களையும், தனக்காக வாழ்வு கோஷம் போடும் ரசிகர்களையும் ஏமாற்றி படத்தை ஓட வைக்க வேண்டும் என்பதற்கான நோக்கம் விஜய்க்கு நிச்சயமாக இருக்காது என்று ஆணித்தரமாக தெரிவிக்கும் அரசியல் விமர்சகர்கள் நிச்சயம் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவார் என்று கூறுகிறார்கள்.