பணத்தை வாங்கிட்டு நாணயமில்லாமல் நடந்த சிம்பு… வாய்மட்டும் யோக்கிய சிகாமணி மாதிரி பேச்சு..

0
Follow on Google News

நடிகர் சிம்புவை வைத்து ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தை தயாரித்து பெரும் நஷ்டம் அடைந்த அந்த படத்தின் தயாரிப்பளர் மைக்கேல் ராயப்பன் அடுத்து சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு பட ரிலீஸின் போது அந்த படத்தை ரிலீஸ் செய்யவிடாமல் பிரச்சனையில் ஈடுபட்டு வந்தார். இப்படி ஒரு இக்கட்டான சூழலில் தயாரிப்பாளர் ஐசரி கணேசன் சிம்புவுக்கு உதவி செய்தார்.

இதன் பின்பு ஐசரி கணேசன் தயாரிப்பில் சிம்பு நடிக்க மூன்று படங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டது. மாநாடு படம் வெளியாவதற்கு முன்பு சிம்புவுக்கு பட வாய்ப்புகள் பெரிதாக இல்லாததால், ஐசரி கணேசன் தயாரிப்பில் சிம்பு 3 படங்கள் நடிக்க 20 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு அதில் 16 கோடியை சிம்பு பெற்றுள்ளார், இதனை தொடர்ந்து ஒப்பந்தம் செய்த படி ஐசரி கணேசன் தயாரிப்பில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் சிம்பு நடித்தார்.

மாநாடு படம் வெளியாவதற்கு முன்பு ஐசரி கணேசன் தயாரிப்பில் வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இந்த படத்தில் நடித்து கொண்டிருக்கும் போதே மாநாடு படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்த நிலையில் மாநாடு படம் வெளியான பின்பு வெந்து திணிந்தது காடு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது, அடுத்தடுத்து ஐசரி கணேசன் தயாரிப்பில் ஏற்கனவே பேசிய அதே சம்பளத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று முரண் பிடித்து வந்துள்ளார் சிம்பு.

இந்நிலையில் ஐசரி கணேசனின் ஒப்பந்தத்த படி அடுத்தடுத்து அவருடைய தயாரிப்பில் படம் நடித்து கொடுக்காமல், பத்து தல, அடுத்து தற்பொழுது கமல்ஹாசனின் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார் சிம்பு. இந்நிலையில் ராஜ்கமல் பிலிம்ஸில் சிலம்பரசன் கமிட்டான போது ஐசரி கணேசன் கமல்ஹாசனை நேரில் சந்தித்து ஏற்கனவே தன்னுடைய கம்பெனியில் மூன்று படத்தில் சிலம்பரசன் கமிட்டானது தொடர்பாக பேசியுள்ளார்.

சிம்பு கமிட்டானதற்கான ஒப்பந்தமும் தன்னிடம் இருக்கின்றது, சிம்புவுக்கு 20 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு சுமார் 16 கோடி ரூபாய் சிலம்பரசன் பெற்றுவிட்டார் என தன் பக்கம் இருக்கும் நியாயங்களை கமல்ஹாசனிடம் ஏற்கனவே தெரிவித்திருந்திருக்கிறார் ஐசரி கணேசன். இதை அனைத்தையும் ஒவ்வொன்றையும் ஆச்சரியத்துடன் கேட்டு அப்படி எல்லாம் நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.

இந்த நிலையில் கமலஹாசனிடம் ஐசரி கணேசன் தெரிவித்த போது சிம்புவுக்கு அட்வைஸ் செய்து முதலில் ஐசரி கணேசன் படத்தில் நடித்துவிட்டு நீங்கள் வாருங்கள் என்று கமல்ஹாசன் சொல்வார் என ஐசரி கணேசன் எதிர்பார்த்து உள்ளார். ஆனால் கமலஹாசன் ஐசரி கணேசன் பக்கம் இருக்கும் நியாயத்தை கண்டும் காணாமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது.இதனால் கோபமடைந்த ஐசரி கணேஷ் ‘எனக்கு இன்னும் 2 படங்களில் நடித்து கொடுக்காமல் சிம்பு யார் படத்திலும் நடிக்க கூடாது’ என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துவிட்டார்.

இந்நிலையில் கமலஹாசன் ராஜ்கமல் ஃபிலிம் தயாரிப்பில் சிம்பு நடிக்க இருக்கும் புதிய திரைப்படம் விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் நிலையில். தற்போது தயாரிப்பாளர் ஐ சேரி கணேசன் தயாரிப்பாளர் சங்கத்தில் சிம்புவுக்கு எதிராக கொடுத்துள்ள புகாரில் நடிகர் சிம்பு தன்னுடைய நிறுவனத்தில் மூன்று படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்துள்ளார்.

ஆனால் ஒரு படத்தில் மட்டுமே நடித்து மீதம் இரண்டு படங்களில் இன்னும் நடிக்கவில்லை அதற்குள் வேறு ஒரு நிறுவனத்தில் நடிக்க சென்று விட்டார். ஆகையால் தன்னுடைய தயாரிப்பில் இரண்டு படம் நடித்துவிட்டு தான் சிம்பு அடுத்து வேறு ஒரு நிறுவனத்தில் நடிக்க செல்ல வேண்டும் என அந்த புகாரில் ஐசரி கணேசன் தெரிவித்துள்ளார். இதனால் சிம்பு அடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கும் படத்திற்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.