அஜித் தூக்கி எறிந்த வெங்கட் பிரபுவை… விஜய் உள்ளே கொண்டு வந்தது இதற்கு தான்..

0
Follow on Google News

நடிகர் விஜய் தற்பொழுது நடித்து வரும் லியோ படத்தை முடித்துவிட்டு அடுத்து வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் கமிட்டாகியுள்ளது, பொதுவாக சிறுத்தை சிவா, ஹெச்.வினோத், விஷ்ணு வர்தன் போன்ற அஜித்துக்கு விருப்பமான இயக்குனர்கள் விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்காது. அதே போன்று அட்லீ, லோகேஷ் கனகராஜ் போன்ற விஜய்க்கு பிடித்தமான இயக்குனர்களை அஜித் படத்தை இயக்கும் அளவுக்கு அவர்களை விடமாட்டார் விஜய் என கூறப்படுகிறது.

இந்நிலையில் அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா மிக பெரிய வெற்றி வெற்றி படத்தை இயக்கிய வெங்கட் பிரபு, அஜித்தின் விருப்பமான இயக்குனர் பட்டியலில் இடம்பெற்று வந்த நிலையிலும் மீண்டும் அஜித் படம் இயக்குவார் வெங்கட்பிரபு என எதிர்பார்க்க பட்டு வந்த நிலையில், பலருக்கும் அதிர்ச்சி தரும் விதத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார் வெங்கட்பிரபு.

இந்நிலையில் அஜித்தின் விருப்பமான இயக்குனர் விஜய் படத்தில் கமிட்டானது எப்படி என்கிற தகவல் தற்பொழுது சினிமா பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இயக்குனர் வெங்கட்பிரபுவின் தந்தை கங்கை அமரன் இதற்கு முன்பு சில பேட்டிகளில், நடிகர் அஜித் மற்றும் விஜய் இருவரையும் வைத்து தன்னுடைய மகன் வெங்கட் பிரபு படம் இயக்கப் போவதாக சில இடங்களில் தெரிவித்து வந்துள்ளார் , ஆனால் கங்கை அமரன் இது போன்ற பேசி வந்தது அவருடைய பப்ளிசிட்டிக்காக தான் என கூறப்படுகிறது.

இருந்தாலும் இவருடைய பப்ளிசிட்டிக்கு நாம் தான் கிடைத்தோமா என்கிற கோபம் அஜித்துக்கு இருந்து வந்துள்ளது. மேலும் இயக்குனர் வெங்கட் பிரபுவும் சில இடங்களில் மங்காத்தா 2 திரைப்படம் அஜித்தை வைத்து உறுதியாக செய்வேன் என்றும் தெரிவித்து வந்துள்ளார். அஜித்துக்கு இது வெண்காட்பிரபு மீது வெறுப்பை ஏற்படுத்தி வந்துள்ளது.

இந்த நிலையில் துணிவு படத்தை முடித்துவிட்டு அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிப்பதாக இருந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்ட பின்பு. அடுத்து எந்த ஒரு எந்த இயக்குனரை தேர்வு செய்வது என நடிகர் அஜித் கையில் பல இயக்குனர்கள் இடம் பெற்றிருந்த லிஸ்ட்டை கொடுத்துள்ளார்கள். அதில் வெங்கட் பிரபு பெயரும் இடம் பெற்று இருந்துள்ளது. ஆனால் வெங்கட் பிரபுவா வேண்டவே வேண்டாம் என அஜித் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதற்கு காரணம் ஏற்கனவே வெங்கட் பிரபு வெளிய லூஸ் டாக் விட்டு தன்னை கோபப்படுத்தியதுதான் என கூறப்படுகிறது. அந்த வகையில் ஏற்கனவே வெங்கட் பிரபுவுக்கு நேர்ந்தது தனக்கு நேர்ந்து விடக்கூடாது என்பதற்காகத்தான், அஜித் படத்தில் மகிழ் திருமேனி கமிட் ஆன பின்பு யார் தொலைபேசியில் அழைத்தால் கூட தொலைபேசியை எடுப்பதில்லை, என்றும் வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பினால் கூட ரிப்ளை செய்வதில்லை என்றும் கூறப்படுகிறது.

இதற்கு காரணம் ஏதாவது தகவல் வெளியான, அஜித் எங்கே வெங்கட் பிரபுவை வெறுத்து ஒதுக்கியது போல் தன்னையும் இந்த படத்தில் இருந்து வெளியேற்றலாம் என்பதற்காக தான் மகிழ் திருமேனி மூச்சு விடாமல் அஜித் படத்தில் வேலை செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது இந்த நிலையில் வெங்கட் பிரபுவை வேண்டவே வேண்டாம் என அஜித் புறக்கணித்த விவரம் அறிந்த விஜய்.

அஜித் வேண்டாம் என சொன்னால் என்ன.? நீங்க வாங்க இங்க வாங்க பிரதர், ஒரு கதை சொல்லுங்கள் என வெங்கட் பிரபுவை நேரில் அழைத்து கதை கேட்டுள்ளார் நடிகர் விஜய் என்றும், அதன் பின்பு கதை மிகவும் பிடித்து போக உடனே வெங்கட் பிரபுவை தனது படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார் விஜய் என கூறப்படுகிறது. அந்த வகையில் அஜித் ஒதுக்கியதின் காரணமாகவே வெங்கட் பிரபுவை அழைத்து விஜய் வாய்ப்பு கொடுத்ததாக கூறப்படுகிறது.