அஜித் நடிக்கும் விடாமுயற்சி கைவிடப்படுகிறதா.? பிரச்சனைக்கு காரணமே திரிஷா தானம்…

0
Follow on Google News

நடிகர் அஜித் நடிக்கும் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்ட பின்பு, ஒன் லைன் ஸ்டோரியை கேட்டு மகிழ் திருமேனியை தன்னுடைய படத்தில் கமிட் செய்த அஜித்குமார். படத்தின் முழு ஸ்கிரிப்ட் மற்றும் ஒவ்வொரு காட்சியையும் விரிவாக தயார் செய்து வந்த பின்பு தான் படப்பிடிப்பு தொடங்கும் என்பதில் உறுதியாக இருந்து வந்தார் அஜித். இதற்கு காரணம் நடிகர் அஜித் இதற்கு முன்பு விக்னேஷ் சிவனிடம் ஒன் லைன் ஸ்டோரியை நம்பி படத்தில் கமிட் செய்த பின்பு பின்பு முழு கதையும் கேட்டபோது அஜித்துக்கு அது பிடிக்கவில்லை.

ஆகையில் மீண்டும் அதே தவறு நடந்து விட கூடாது என அஜித் மிக கவனமாக இருந்து வந்தார். அந்த வகையில் அஜித் நடிக்கும் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு படத்தின் முழு கதையையும் கேட்டு அதில் திருப்தியாக இருந்தால் மட்டுமே அந்த படத்தை ஸ்டார்ட் செய்ய வேண்டும். மேலும் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பும் அதன் பின்பே வெளியிட வேண்டும் என அஜித் உறுதியான நிலைப்பாட்டில் இருந்து வந்தார்.

இதனால் அஜித் நடிக்கும் புதிய படம் தாமதம் ஏற்பட்டது, அதற்கு ஒரு பைக் டூர் சென்று வந்து விட்டார் அஜித். இந்நிலையில் படத்தின் முழு ஸ்கிரிப்ட் தயாராக உள்ள நிலையில் இன்னும் படப்பிடிப்பு தொடங்காமல் தாமதமாகி கொண்டிருக்கிறது. இந்நிலையில் அஜித் – மகிழ் திருமேனி இணையும் விடாமுயற்சி படத்தை தயாரிக்கும், லைக்கா நிறுவனம் சட்ட விரோத பரிவர்த்தனை, வருமான வரி ஏய்ப்பு செய்திருப்பதாக சந்தேகப்பட்டு சமீபத்தில் அமலாக்கதுறையினர் லைக்காவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினார்கள்.

இதனால் லைக்கா நிறுவனம் அவர்கள் தயாரிக்கும் படங்களுக்கு மிக பெரிய பொருளதாக சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதனால் விடாமுயற்சி படம் தாமதம் ஏற்பட்டு வருவதால், அஜித் நடிக்க இருக்கும் விடாமுயற்சி படம் கைவிடப்பட இருப்பதாக கூட சில தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது, மேலும் விடா முயற்சி படத்திற்கு லைக்காவுக்கு பதில் வேறு ஒரு தயாரிப்பாளர் உள்ளே வருகிறார்கள் என்று கூட பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் விடாமுயற்சி திரைப்படம் ஜூன் முதல் வாரத்தில் தொடங்க இருப்பதாக அரசல் புறசலாக தகவல் வந்தாலும் கூட அந்த படத்தின் படப்பிடிப்பிற்கான முன்னேற்பாடுகள் எதுவும் நகராமல் அமைதியாக இருந்து வருகிறது. இது குறித்து சினிமா வட்டாரத்தில் விசாரித்ததில், படத்தின் கதாநாயகியாக திரிஷா கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில், ஆனால் படத்தில் திரிஷா நடிப்பதற்கான ஒப்பந்தத் மற்றும் சம்பளம் என எதுவுமே இன்னும் உறுதி செய்யாமல் இருக்கிறதாம்.

அதனால் த்ரிஷாவுக்காக தான் படப்பிடிப்பு தாமதமாகி வருவதாகவும், ஆனால் அஜித் தான் சார்ந்த காட்சிகளை தற்போது படமாக்கும் வேலைகளை தொடங்குங்கள், பின்பு நடிகை திரிஷா நடிப்பதற்கான ஒப்பந்தம் போட்டு சம்பளம் கொடுத்த பின்பு திரிஷா நடிக்கும் காட்சிகளை படமாக்குங்கள், அதுவரை காலத்தை வீணடிக்க வேண்டாம் என அஜித் தெரிவித்துள்ளாராம்.

அதே நேரத்தில் விடாமுயற்சி படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் ஒரு இக்கட்டான சூழலில் இருப்பதை அறிந்த அஜித் இந்த நேரத்தில் இவர்களை கைவிட்டு விட்டு வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் இந்த ப்ராஜெக்ட் எடுத்துச் செல்வது நன்றாக இருக்காது, அது நாகரீகமாகவும் இருக்காது என்பதால் தொடர்ந்து ஒரு கட்டான சூழ்நிலையில் இருக்கும் லைக்காவுக்கு உறுதுணையாக இருப்போம் என முடிவு செய்து இந்த படத்தை லைக்கா தயாரிப்பில் நடிப்பதில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் தற்போது லைக்கா தயாரிக்கும் விடாமுயற்சி படம் சில பிரச்சனைகளை சந்தித்து வருவதால் மற்ற சில தயாரிப்பாளர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு அஜித்தை தங்கள் பக்கம் இழுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டதாகவும், ஆனால் அதற்கு அஜித் செவி சாய்க்கவில்லை எனவும் கூறப்படுகிறது.