நன்றி மறந்த தனுஷ்… வெற்றிமாறனுக்கு எதிராக இப்படி செய்ய எப்படி மனம் வந்தது….

0
Follow on Google News

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு என்று தெய்வப்புலவர் திருவள்ளுவர் அப்போதே திருக்குறளில் சொல்லி இருக்கிறார். எந்த நன்மையை ஒருவன் மறந்தாலும் ஒருவர் செய்த உதவியை எப்போதும் மறக்க கூடாது என்பதுதான் அது. ஆனால் சினிமா உலகை பொறுத்த வரை, நாம வாழணும் என்றால் யாராக இருந்தாலும் ஏறி மிதிச்சுட்டு போயிட்டே இருக்க வேண்டியதுதான் என்று அமைதிப்படை அமாவாசை சத்யராஜ் கேரக்டரை தான் பலரும் தங்களது வாழ்க்கை பாடமாக வைத்திருக்கின்றனர்.

இயக்குனர் வெற்றிமாறன்தான் தனுஷ் என்ற நடிகரை தமிழ் சினிமாவில் முக்கிய இடத்துக்கு கொண்டு வந்தார். அவர் இயக்கிய பொல்லாதவன் படம் தனுஷூக்கு ஒரு ஹீரோ அந்தஸ்தை பெற்றுத் தந்தது. அதன்பிறகு ஆடுகளம் படத்தில் நடித்த பிறகுதான் தனுஷ் மாஸ் ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். அடுத்து வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை அசுரன் போன்ற படங்களில் நடித்த பிறகுதான் தமிழ் சினிமாவில் டாப் 10 நடிகர்களின் வரிசையில் தனுஷூக்கும் ஒரு இடம் கிடைத்தது.

அதன்பிறகு அவர் நடித்த மற்ற சில படங்களும் நல்ல கேரக்டர்களாக அமைய அவரும் முக்கிய நட்சத்திர நடிகராக மாறினார். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய படங்களும் அதில் தனுஷ் நடித்த கேரக்டர்களும் அவரை அந்த கேரக்டர்களுக்காக செதுக்கிய வெற்றிமாறன்தான் அவரது சினிமா வளர்ச்சிக்கு பெரிய காரணமாக இருந்தார் என்றால் அது மிகையல்ல.

தனுஷின் உழைப்பும் திறமையும் இதில் இருக்கிறது என்றாலும், அதற்கு தூண்டுகோலாய் இருந்து அவரை தூக்கி விட்டவர் இயக்குனர் வெற்றிமாறன் என்றால் அது பொய்யல்ல. இந்நிலையில் நடிகர் சிம்பு நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்குகிறார். இந்த படத்தில் வடசென்னை படத்தின் சில கேரக்டர்களை கொண்டு வரவும் வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளார்.

ஆனால் வடசென்னை படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான நடிகர் தனுஷ், சிம்பு நடிக்கும் வெற்றிமாறன் படத்தில் வடசென்னை படத்தின் கேரக்டர்களை பயன்படுத்தினால், தனக்கு 20 கோடி தர வேண்டும் என்று நிபந்தனை விதித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் தனுஷூம் இயக்குனர் வெற்றிமாறனும் நெருக்கமான நண்பர்கள். தனக்கு பிடித்த நடிகர்கள் வரிசையில் வெற்றிமாறன் முதலிடம் தருவது தனுஷூக்கு தான். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த பொல்லாதவன் ஆடுகளம் வடசென்னை அசுரன் படங்கள் அவருக்கு பெரிய வரவேற்பை பெற்று தந்த நிலையில், ஆடுகளம் அசுரன் படங்களில் நடித்த நடிகர் தனுஷூக்கு சிறந்த நடிகர் தேசிய விருதும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்கும் படத்தில், தனது படத்தின் கேரக்டர்களையும் காட்சிகளையும் இயக்குனர் வெற்றிமாறன் பயன்படுத்தினால், தனக்கு 20 கோடி ரூபாய் தர வேண்டும் என்று நடிகர் தனுஷ் கூறியிருப்பது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும், கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வளர்த்து கடா மார்பில் பாய்வது போல, தன்னை பெரிய நடிகராக வளர்த்துவிட்ட இயக்குனர் வெற்றிமாறனிடமே ரூ. 20 கோடி கேட்கும் அளவுக்கு தனுஷ் நன்றி மறந்தவராக இருக்கிறாரே என்றுதான் ரசிகர்கள் வருத்தப்படுகின்றனர். நானும் ரவுடிதான் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை தனது திருமண வீடியோவில் பயன்படுத்தியதற்காக, அந்த படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ், நடிகை நயன்தாரா, அவரது கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் மீது ரூ. 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்.

இப்போது இந்த விவகாரத்திலும் வெற்றிமாறன் தரப்பில் ரூ. 20 கோடி தராவிட்டால் இதற்கும் தனுஷ் கோர்ட்டுக்கு போனாலும் போய் விடுவார். நன்றி விசுவாசம் என்றால் என்ன என்பதை நடிகர் தனுஷிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழ் சினிமா வட்டாரத்தினர் கடுமையாக விமர்சிக்க துவங்கியிருக்கின்றனர்,