சிங்கம் படத்தில் போலீஸ் அதிகாரியான சூர்யாவை பார்த்து துரைசிங்கம் உன்னை அசிஸ்டன்ஸ் கமிஷனராக ப்ரொமோட் பன்றேன் , உடனே சார்ஜ் எடுத்துக்கோ என்று விஜயகுமார் பேசும் கட்சியை யாருமே மறந்திருக்க முடியாது, அதே போன்ற ஒரு நிகழ்வு தான் தற்பொழுது தமிழக அரசியலில் அரங்கேறி, ஆட்டம் அனல் பறக்க அரசியல் களம் தயார் நிலையில் உள்ளது.
முன்னாள் மாநில தலைவராக இருந்த அண்ணாமலை பதவி களம் முடிவடைந்த நிலையில், புதிய மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்க படுகிறார் என்கிற அறிவிப்பை வெளியிட்ட அமித்ஷா, முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு தேசிய அளவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என உறுதி கொடுத்து இருந்தார். இதனை தொடர்ந்து பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்கும் நிகழ்வில் தேசிய பொதுக்குழு உறுப்பினராக அண்ணாமலை அறிவிக்கப்பட்டார்.

ஆனால் மாநில தலைவராக இருந்த போது தீவிரமாக அரசியல் செய்து வந்த அண்ணாமலை, மாநில தலைவர் மாற்றத்திற்கு பின்பு சற்று அமைதியாக இருந்து வருகிறார், அவ்வ போது அரசியல் மேடையில் காணப்படும் அண்ணாமலை. வழக்கம் போல் அவர் மாநில தலைவராக இல்லை என்றாலும் மக்கள் மத்தியில் அவர் குறித்த செய்திகளுக்கான எதிர்பார்ப்பு அதிகரிக்க, தலைப்பு செய்தியில் இடம் பெரும் அளவுக்கு தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தில் இருந்து வருகிறார் அண்ணாமலை.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் மாற்றத்தின் போது, அண்ணாமலைக்கு தேசிய அளவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என அமித்ஷா தெரிவித்து இருந்தாலும், அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்பு கிடைக்குமா.? என்ன பொறுப்பு கிடைக்கும் என்கிற பரபரப்பு ஒரு பக்கம் நீடித்து கொண்டிருக்கிருக்க, சமீபத்தில் மதுரை வந்த அமித்ஷா, மேடையில் அண்ணாமலை பெயரை குறிப்பிட்டதும், அங்கிருந்த பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எழுப்பிய கரகோஷம் அமித்ஷாவை வியப்படைய செய்தது.
இப்படி தொடர்ந்து தமிழக பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமின்றி தமிழக மக்கள் மத்தியிலும் அண்ணாமலைக்கு இருக்கும் வரவேற்பு, மேலும் குறிப்பாக திமுகவை எதிர்த்து அரசியல் செய்ய கூடிய அண்ணாமலையில் அரசியல் திமுகவின் எதிர்ப்பாளர்கள் மத்தியில் திமுகவுக்கு எதிராக அரசியல் செய்வதில் அண்ணாமலை தான் ஏற்ற நபர் என்பது திமுக எதிர்ப்பாளர்கள் ஆள் மனதில் பதிந்து விட்டது.
இந்நிலையில் விரைவில் பாஜக தேசிய தலைவர் அறிவிப்பு வெளியான உடன், பாஜக தேசிய பொதுச் செயலாளராக அண்ணாமலை நியமிக்கப்பட இருக்கிறார் என்பது உறுதியாகி விட்டது என்பதை டெல்லி வட்டாரங்கள் உறுதி படுத்துகிறது. மேலும் பாஜக முன்னாள் எம்பி தருண் விஜய் உட்பட பலரும், தேசிய பொதுச் செயலாளராக பொறுப்பேற்கும் அண்ணாமலைக்கு வாழ்த்துக்கள் என தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் தேசிய பொதுச் செயலாளராக பொறுப்பேற்கும் அண்ணாமலையை முழுக்க முழுக்க தமிழக அரசியலிலே பயன்படுத்த திட்டமிட்டு இருக்கிறார் அமித்ஷா என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் முழுக்க முழுக்க திமுகவை எதிர்த்து முன்பு மாநில தலைவராக இருந்த போது அரசியல் செய்ததை விட மிக தீவிரமாக அரசியல் செய்ய வேண்டும் என்றும், திமுக அமைச்சர்கள் முதல் முதல் குடும்பம் வரை யாரையும் தூங்க விட கூடாது, அந்த வகையில் உங்களுடைய திமுக எதிர்ப்பு அரசியல் இருக்க வேண்டும் என அண்ணாமலைக்கு அமித்ஷா அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் தேசிய பொதுச் செயலாளராக சார்ஜ் எடுக்கும் அண்ணாமலையின் ஆட்டம் இனி வேற லெவலில் இருக்கும் என்கிறது அரசியல் வட்டாரங்கள். இது ஒரு புறம் இருக்க தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்கிற சர்ச்சையும் வெடித்து வருகிறது. வரும் 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், முதல்வர் வேட்பளரை அதிமுக முடிவு செய்யும் என அமித்ஷா சமீபத்தில் பேசிய பேச்சு மிக பெரிய விவாத பொருளாக மாறியுள்ளது குறிப்பிடதக்கது.

