கூண்டோடு மாட்டிய திமுக… அமித்ஷா கையில் மொத்த லிஸ்ட்… அடுத்த ஒரு வாரத்தில் நிகழ இருக்கும் சம்பவம்…

0
Follow on Google News

இதற்கு முன்பு பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை திமுக பைல்ஸ் என பார்ட் 1 பார்ட் 2 வெளியிட்டு ஒட்டுமொத்த திமுகவையும் ஆட்டம் காண வைக்கும் வகையில் திமுக முக்கிய அமைச்சர்கள், திமுக முக்கிய தலைவர்கள், திமுக எம்பி களின் சொத்து பட்டியலை வெளியிட்டு தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை உருவாக்கியது மட்டுமல்லாமல், பட்டி தொட்டி எங்கும் ஒவ்வொரு திமுகவின் தலைவர்கள் கைவசம் இவ்வளவு சொத்தா என்று தமிழக மக்கள் மத்தியில் பேசும்பொருளாக்கியவர் அண்ணாமலை.

அதனை தொடர்ந்து அடுத்தடுத்து திமுகவுக்கு எதிரான ஆட்டத்தை தீவிர படுத்திய பாஜக , அமைச்சர் செந்தில் பாலாஜியை சுமார் ஒரு வருடம் ஊழல் குற்றச்சாட்டில் அமலாக்கத்துறை மூலம் சிறையில் அடைத்தது, கடுமையான போராட்டத்திற்கு பின்பு சுமார் ஒரு வருடத்திற்கு மேல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜி ஜாமீன் பெற்று வெளியே வந்தார்.

இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கு அடுத்து சிக்கப்போகும் திமுக அமைச்சர்கள் யார் என்கின்ற பரபரப்பு தொடர்ந்து நீடித்து வந்தாலும், செந்தில் பாலாஜியை தொடர்ந்து வேறு எந்த ஒரு அமைச்சரும் இன்னும் சிறை செல்லவில்லை. இருந்தாலும் முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி மற்றும் திமுகவின் மூத்த தலைவர் துரைமுருகன் போன்றவர்கள் மீது அமலாக்கத்துறை இறுக்கி பிடித்தாலும்,

மேலும் அவர்களுடைய பழைய வழக்குகளை நீதிமன்றம் மீண்டும் விசாரணைக்கு மீண்டும் எடுத்துக் கொண்டுள்ள நிலையில், எந்த நேரமும் அவர்களுக்கு எதிரான தீர்ப்பு வரலாம் என்ற பரபரப்பு நீடித்து வருகிறது. இதில் உச்ச கட்டமாக சமீபத்தில் நடந்த டாஸ்மாக் ஊழல் திமுகவின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்துயிருக்கிறது. ஆனாலும் விறுவிறுப்பாக சென்ற டாஸ்மாக் ஊழல் விவகாரம் சற்று அமைதியாக இருக்கிறது.

இந்த பரபரப்புக்கு மத்தியில் சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கைக்கு உளவுத்துறை ரிப்போர்ட் ஒன்று சென்றிருக்கிறது என டெல்லி வட்டாரங்கள் உறுதி செய்கிறது. அதாவது திமுக அமைச்சர்கள், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் திமுகவின் முக்கிய தலைவர்களின் யார் யாருக்கெல்லாம் அயல்நாடுகளில் எவ்வளவு சொத்து இருக்கின்ற மொத்த டேட்டாவும் உளவுத்துறை மூலம் அமித்ஷா கைது சென்றிருக்கிறது.

தனக்கு வந்த தகவலை தமிழக பாஜக தலைமைக்கு அனுப்பி வைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, விரைவில் அதை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. அந்த வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் மீண்டும் சென்னை வர இருக்கும் நிலையில், அவர் வருவதற்கு முன்பே அமித்ஷா கைக்கு சென்ற திமுக அமைச்சர்கள், மற்றும் திமுக தலைவர்கள், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடுகளில் வாங்கி குவித்துள்ள சொத்து பட்டியலை தமிழக பாஜக தலைமை வெளியிடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் அண்ணாமலை வெளியிட்ட திமுக பைல்ஸ் போன்று இது மிகப்பெரிய விவாத பொருளாக மாறும் என்று கூறப்படுகிறது, மேலும் இதை வெளியிடுவது மட்டும் இல்லாமல் , அடுத்தடுத்து இது தொடர்பாக அமலாக்க துறை மூலம் மிகப்பெரிய நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட திமுகவினரை குறிவைத்து களமிறங்க அமித்ஷா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்நிலையில் தேர்தல் நெருங்க நெருங்க, திமுகவுக்கு எதிரான அணைத்து அஸ்திரத்தை ஏந்தி, வரும் 2026 சட்டசபை தேர்தலில் திமுக முக்கிய புள்ளிகள் தேர்தல் வேலை செய்யவிடாமல் முடக்கி விட வேண்டும் என்பதற்காக பலவேறு வியூகங்களை அமித்ஷா வகுத்து வரும் நிலையில், அதில் ஒன்று தான் திமுகவினர் வெளிநாடுகளில் வாங்கி குவித்துள்ள சொத்து பட்டியல் என்கிறது டெல்லி வட்டாரங்கள்.