இன்னும் 2026 சட்டசபை தேர்தலுக்கு 10 மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் அனல் பறந்து வருகிறது. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிக சீட் கேட்டு திமுகவுக்கு குடைச்சல் கொடுத்து வருவதால், திமுக கூட்டணிகுள் பிளவு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. மறுப்பக்கம் அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி செய்த அமித்ஷா, வரும் 2026 சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்து இருந்தார்.
இதில் அதிமுக தரப்பில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியமில்லை, தமிழக மக்கள் கூட்டணி ஆட்சியை விரும்ப மாட்டார்கள் என்று தொடர்ந்து தெரிவித்து வந்தாலும் கூட, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தான் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளது மட்டுமில்லாமல், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் என அவரும் கருத்து தெரித்துள்ளார்.

மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் ஜி கே வாசன், மற்றும் அன்புமணி உட்பட பலரும் கூட்டணியை ஆட்சியை வரவேற்றுள்ளார், அந்த வகையில் ஒருமித்த கருத்தாக கூட்டணி ஆட்சி தான் என தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் குரல் கொடுத்து வரும் நிலையில், கூட்டணி ஆட்சி முடியாது என அதிமுக பிடிவாதம் பிடித்தால், கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அமைப்பேன் ஏன் சூளுரைத்த எடப்பாடி தலைமையான அதிமுக தலைமையை ஏற்று எந்த கட்சியும் கூட்டணிக்கு வராததால், மன்சூர் அலிகான் உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய சூழல் அதிமுகவுக்கு ஏற்பட்டது அதே போன்ற ஒரு சூழல் தான் மீண்டும் 2026 சட்டசபை தேர்தலிலும் அதிமுகவுக்கு ஏற்படும் சூழல் ஏற்படும் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.
மேலும் அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் தலைக்கு மேல் உள்ள கத்தியாக, எடப்பாடி பழனிசாமி தலைக்கு மேல் தொங்கி கொண்டிருக்கிறது. அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஏற்று கொண்டது செல்லாது என ஒ.பன்னீர் செல்வம் தொடர்ந்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பு இந்த வழக்கின் தீர்ப்பு ஓ.பன்னீர் செல்வத்திற்கு சாதகமாக வெளிவரும் என கூறப்படுகிறது.
அதாவது எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக பொறுப்பு ஏற்று கொண்டது செல்லாது என்றும், அதிமுகவின் இரட்டை தலைமை தான் கட்சியை வழிநடத்தும் என்று தீர்ப்பு வந்தால், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் இணைந்து தான் கட்சியின் முடிவுகளை எடுக்கும் சூழல் உருவாகும். அல்லது இரட்டை இல்லை சின்னம் முடங்கும் சூழல் உருவாகும் என்று கூறப்படுகிறது.
இப்படி பல பிரச்ச்னைகளை சந்தித்து வரும் எடப்பாடி பழனிச்சாமி எந்த பக்கமும் தப்பிக்கவே முடியாதபடி செக் வைத்து விட்டார் அமித்ஷா என்கிறது அரசியல் வட்டாரங்கள், அந்த வகையில் முதல்வர் யார் என்பதை அதிமுக முடிவு செய்யும் என ஒரு ட்விஸ்ட் வெச்சு சமீபத்தில் பேசிய அமித்ஷா, வரும் 2026 சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என கூட்டணி ஆட்சி தான் என்பதை உறுதி செய்தார் அமித்ஷா.
மேலும் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமையும், கூட்டணித் தலைவர்களும் முடிவு செய்வார்கள். என பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா பேசி இருந்தது, பாஜக மிக தெளிவாக அரசியல் காய்களை நகர்த்தி வருவதை பார்க்க முடிகிறது. இந்நிலையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு விரைவில் தேசிய அளவில் முக்கிய பொறுப்பு வழங்கி தமிழக அரசியலில் அவருக்கு முக்கியதுவத்தை தேசிய தலைமை கொடுக்க இருப்பதால், விரைவில் தமிழக அரசியல் களத்தில் அடித்து ஆட அண்ணாமலை தயாராகி விட்டார் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

