திரிஷாவுடம் full போதை… விஜய் குறித்த போட்டுடைத்த பிரபல இயக்குனர்… அடுத்த சர்ச்சையில் சிக்கிய விஜய்…

0
Follow on Google News

கடந்த 2024 வருடம் ஜூன் 22ஆம் தேதி, நடிகர் விஜய் தனது ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடியிருந்தார். அப்போது திரிஷா, பிறந்தநாள் அன்று கூட்டத்தோடு கூட்டமாக வாழ்த்து தெரிவிக்காமல், தனிக்காட்டு ராஜா போல, பிறந்தால் முடிந்த மறுநாள், தானும், விஜயும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்ததோடு,

அதனுடன் சேர்த்து, ‘நீதான் என் காதல், என் உயிர் பிரியும் வரை நீதான் என் காதல், என்ற வரிகள் அடங்கிய ஆங்கில பாடலையும் இணைத்திருந்தார்.. இந்நிலையில் தான் விஜயும், த்ரிஷாவும் காதலிப்பது உறுதியாகிவிட்டது என, அவர்களின் பழைய புகைப்படங்களை தோண்டி தோண்டி பார்த்த நெட்டிசன்கள், த்ரிஷாவின் பல புகைப்படங்களில் விஜய்யும் இருக்கிறார், அவரது ஷூவும் அதில் தெரிகிறது.

மேலும் த்ரிஷா சென்ற அதே Location-களுக்கு விஜயும் சென்றிருக்கிறார், விஜயின் அலுவலகம் இருக்கும் அப்பார்ட்மெண்டில் தான் த்ரிஷாவும் குடியிருக்கிறார், என்ற தகவலும் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இதற்கெல்லாம் அடுத்தபடியாக உச்சகட்டமாக, விஜய் – திரிஷா இருவரும் தனி விமானத்தில் கோவா பறந்தனர், நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு விஜய் சென்றுள்ள நிலையில் தனி விமனத்தில் ஜோடியாக த்ரிஷாவை அழைத்து சென்றார்.

இந்நிலையில் விஜய் – திரிஷா இருவரும் கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு தனிதனியாக சென்று இருக்கலாம், எதற்காக ஜோடியாக தனி விமானத்தில் செல்ல வேண்டும் என பலரும் சந்தேகம் எழுப்பி வந்தனர். இப்படி தொடர்ந்து திரிஷா – விஜய் இருவரும் குறித்த கிசு கிசு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சமீபத்தில் விஜய் அவருடைய 51 வது பிறந்தநாளை கொண்டாடினர்.

நடிகை திரிஷா அவரது சமூக வலைத்தள பக்கத்தில் விஜயை பாராட்டி, விஜய் தனது செல்ல பிராணியை தூக்கி கொஞ்சும் புகைப்படத்தை வெளியிட்டு ஹாப்பி பர்த்டே டூ யூ விஜய் என பதிவிட்டு இருந்தார். அந்த புகைப்படத்தில் விஜய் உடன் த்ரிஷாவும் இருந்தார். இதனை பார்த்த பலர் இவர்கள் இருவரையும் ஒன்றாக வைத்து சித்தரித்து பேச ஆரம்பித்தனர். ஒவ்வொரு முறையும் அவர் நடிகர் விஜய் குறித்து போட்டோஸ் பதிவிடும் பொழுதும் இதே போல விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறார்.

இதனால் மிகவும் கடுப்பான நடிகை திரிஷா அதற்கு தக்க பதிலடி ஒன்றை கொடுத்திருக்கிறார்.” ஒருவர் அன்பின் மிகுதியால் பதிவிடும் நினைவுகளையும் வாழ்த்துக்களையும் பார்த்து வாழ்த்த மனமில்லாமல் மனதில் அழுக்கு படிந்த எண்ணங்கள் நிறைந்தவர்கள் பேசும் பேச்சுக்களால் நாங்கள் குழம்ப போவதில்லை அது நன்றாக இருப்பவர்களை தான் குழப்பிவிடும்” என தனது ஆதங்கத்தை தனது இன்ஸ்டாவில் தெரிவித்து இருந்தார் திரிஷா.

இந்நிலையில் இயக்குநர் நந்து தனியார் யூடியூப் சேனலுக்கு இதுகுறித்து அளித்த பேட்டியில், “விஜய்யும், திரிஷாவும் இருக்கும் புகைப்படத்தில் விஜய்யை மட்டும் Zoom செய்து பாருங்கள். அவர் முழு போதையில் இருப்பது அவருடைய கண்களில் தெரியும். இதனை யாரும் பெரிதாக கவனிக்கவில்லை. இன்னும் கொஞ்ச நாட்களில் பாருங்கள் விஜய் அதையெல்லாம் மறைக்க கூலிங் கிளாஸ் போட ஆரம்பித்துவிடுவார்” என்றார்.

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு விஜய்யும், திரிஷாவும் காஃபி வித் அனு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். அப்போது விஜயிடம் அனுஹாசன், ‘விஜய்க்கு பொருத்தமான ஜோடி யார் விஜய் – திரிஷா, விஜய் – ஜோதிகா, விஜய் – அசின்’ என்று விஜய்யிடம் கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த விஜய், ‘எல்லோரும் சொல்லியிருக்கிறார்கள். எனக்கு பொருத்தமான ஜோடி திரிஷாதான் என்று.. அதையேத்தான் நானும் சொல்கிறேன். அதுமட்டுமின்றி திரிஷாவை பக்கத்தில் வைத்துக்கொண்டு வேறு என்ன சொல்லமுடியும்’ என விஜய் பேசிய வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.