தமிழ் சினிமாவில் சர்ச்சை நாயகி என்றால் அது நடிகை வனிதா விஜயகுமார் தான்.எந்த இடத்துக்கு சென்றாலும் அங்கே ஏதாவது ஒரு பிரச்சனையை கிளப்பி கொளுத்திப் போட்டுவிட்டு வருவது தான் அவரது வழக்கமாக இருக்கிறது. விஜய் டிவியில் 8 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட வனிதா விஜயகுமார் என்னென்ன அட்ராசிட்டி செய்தார் என்பது அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்தவர்களுக்கு தெரியும்.
மற்ற சில சீசன்களிலும் இவரை பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்புவது பிக்பாஸின் வழக்கம். ஒரு கட்டத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக செயல்பட்ட நடிகர் கமல்ஹாசனையே கடுப்பாக்கியவர் என்றால் அது வனிதா விஜயகுமார்தான். எப்போதுமே தன்னைப் பற்றி அவர் அடிக்கடி புகழ்ந்து பேசுவதும், மற்றவர்களை மட்டம் தட்டி பேசுவதும் அவரது இயல்பாகவே இருந்து வருவதாக தமிழ் சினிமா ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சமீபத்தில் வனிதா விஜயகுமார், மாஸ்டர் ராபர்ட் இணைந்து நடித்த மிஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற படத்தின் டிரெய்லர் வெளியானது. இந்த படத்தை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா விஜயகுமார் சொந்தமாக தயாரித்திருக்கிறார். இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை தேவயானி நின்று கொண்டிருந்தார். அப்போது வனிதா விஜயகுமார் மேடையில் உட்கார்ந்து கொண்டிருந்தார் என்பது சர்ச்சையை கிளப்பியது.
இதற்கு பதிலளித்த வனிதா விஜயகுமார், நானும் தேவயானியும் ஒரே காலகட்டத்தில் சினிமாவுக்குள் வந்தவர்கள். தேவயானியும் நானும் நீ வா போ என்று ஒருமையில் பேசிக்கொள்ளும் அளவுக்கு நட்பாக இருப்பவர்கள். அன்று முதல் இன்று வரை நாங்கள் நல்ல தோழிகளாக இருந்து வருகிறோம். நான் அப்போதே அவரிடம் சொன்னேன். நீ நின்று கொண்டிருப்பதை பார்த்தால் எவனாவது என்னை திட்டுவான். நீ வந்து உட்கார் என்றேன்.
ஆனால் தேவயானி தான் மறுத்து விட்டார். இது உன்னுடைய படம். நீதான் மேடையில் உட்கார வேண்டும். நீதான் முக்கியம் என்று கூறி அவர் வந்து உட்காரவில்லை. இப்போது அதுவே பெரிய சர்ச்சையாக கிளப்பி விட்டார்கள் என்றும் இதுகுறித்து வனிதா விஜயகுமார் விளக்கம் அளித்திருந்தார். மேலும் வனிதா மகள் ஜோவிகா இடுப்பு தெரிய பாவாடை, தாவணி அணிந்திருந்தது சர்ச்சை ஆன நிலையில், அதுகுறித்தும் பேசி வனிதா விஜயகுமார் பேசி பெரிய சர்ச்சை கிளப்பினார்.
என் மகள் அவளது சவுகரியத்துக்கு ஏற்ற உடையை அணிகிறாள். இதில் என்ன தவறு? என் மகள் இடுப்பு தெரிவதாக சிலர் கிண்டல் செய்கிறார்கள். குஷி படத்தில் நடித்த ஜோதிகா இடுப்பை காட்டிதானே பேமஸ் ஆனார்? குஷி படத்தில் அவர் ஆனதே அதனால்தான். அவர் இடுப்பை காட்டினால் பாராட்டுவீர்கள். என் மகள் இடுப்பு தெரிய உடை அணிந்தால் கிண்டல் செய்வீர்களா என சகட்டு மேனிக்கு பேசி, இந்த விவகாரத்தில் நடிகை ஜோதிகாவையும் வம்புக்கு இழுத்திருந்தார்.
இப்போது தனது மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை வனிதா விஜயகுமார் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், விஜய்க்கும் எனக்கும் பல வருடமாக பந்தம் இருக்கிறது. அவரது பிறந்த நாள் அன்று திரிஷா ஒரு புகைப்படத்தை போட்டு இருந்தார். விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அவர் போட்டிருந்த அந்த புகைப்படம் இணையத்தில் செம வைரலானது. அதைப் பார்த்தவுடன் சிலர் விமர்சிக்கிறார்கள் என்று நினைத்து விஜய்க்கு அந்த பதிவை ஷேர் செய்து நானும் ஒரு மெசேஜ் அனுப்பி இருந்தேன்.
பிறகு நான் தூங்கி விட்டேன். ஆனால் அன்று இரவு என் தூக்கத்தில் கனவில் விஜய் வந்தார் என்று வனிதா விஜயகுமார் கூறியிருக்கிறார். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் 1995ம் ஆண்டில் வெளிவந்த சந்திரலேகா என்ற படத்தில் விஜய்க்கு ஜோடியாக வனிதா விஜயகுமார் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.