திமுக கட்சி உள்ளேயும், திமுக முதல் குடும்பத்திற்குள்ளும் பல குழப்பங்கள் நீடித்து வருவதாக தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வந்து கொண்டே இருக்கிறது. டாஸ்மாக்கின் மெகா ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை உதயநிதி ஸ்டாலினை சுற்றி வளைத்து நெருங்கும் தருவாயில், உச்ச நீதிமன்றம் சென்று தடை உத்தரவு பெறப்பட்டதை தொடர்ந்து தற்காலிகமாக இந்த டாஸ்மாக் ஊழல் விவகாரம் அடங்கியுள்ளது.
அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் எந்த நேரமும் உதயநிதி ஸ்டாலினை அமலாக்கத்துறை தட்டி தூக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இதில் தற்காலிகமாக இந்த விவாகரத்தில் இருந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தப்பித்திருக்கிறார். இப்படி ஊழல் விவகாரத்தில் முதல் குடும்பம் சிக்கி தவித்துக் கொண்டிருக்கையில் மறுபக்கம் கலாநிதி மாறன் தயாநிதிமாறன் இருவர்களுக்குள் இடையில் நடந்த மோதல் வீதிக்கு வந்துவிட்டது.

முதல்வர் மு க ஸ்டாலின் மருமகன் சபரீசன் தொடர்ந்து வெளிநாடு பயணங்களை மேற்கொண்டு வருகிறார், மதுரையில் நடந்த திமுக பொதுக் குழு கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு மேடையில் இடம் இல்லை இப்படி திமுக முதல் குடும்பத்திற்குள்ளேயே பல பிரச்சனைகள் ஓடிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில்,
திமுகவின் மூத்த தலைவர்களும் முக்கிய அமைச்சர்களின் ஒருவரான துரைமுருகன் வகித்து வகித்துவரும் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய முதல் குடும்பத்தில் இருந்து அழுத்தம் கொடுத்து வருவதாக தொடர்ந்து தகவல் வெளியாகி கொண்டிருந்தது, துரைமுருகன் பதவியை விட்டுக் கொடுக்காமல் இருக்க பிடித்துக் கொண்டிருக்க , துரைமுருகனை சாதுர்யமாக அந்த பதவியில் இருந்து வெளியேற்ற காய்களை நகர்த்தி வந்தது முதல் குடும்பம்.
அந்த வகையில் வயதை காரணம் காட்டி அமைச்சர்கள், பொன்முடி தற்பொழுது துரைமுருகன் ஆகியோரே திமுக தலைமை ஓரங்கட்டி வரும் நிலையில், திடீரென்று கனிமொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அறிவாலயத்தில் தனி அலுவலகம் ஒதுக்கி அமர வைத்தார் மு க ஸ்டாலின் , இதன் பின்னணியில் கூட தற்பொழுது குடும்பத்திலும் பிரச்சினை, கட்சிகளும் குழப்பம் அப்படி இருக்கையில் கனிமொழியும் தனக்கு எதிரான ஆட்டத்தை தொடங்கினால் நிலைமை மோசமாகிவிடும் என்பதால் தான், கனிமொழி ஆதரவு தமக்கு எப்போதும் தேவை என்பதை உணர்ந்து, அறிவாலயத்தில் முக்கியத்துவம் கொடுக்க வரையில் தனி அறை கனிமொழிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் மூத்த அமைச்சர் துரைமுருகன் முதல்வர் மு க ஸ்டாலினுக்கு சுமார் இரண்டு பக்கத்தில் கடிதம் எழுதியுள்ளதாகவும், அந்த கடிதத்தில்தனக்கு ஓய்வு தேவைப்படுகிறது வயது காரணமாக தன்னுடைய பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்கின்றேன் என்று துரைமுருகன் தன்னுடைய கடிதத்தில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த கடிதம் முதல் குடும்பத்தின் அழுத்தத்தின் காரணமாக தான் எழுதப்பட்டது என கூறப்படுகிறது. இந்நிலையில் தங்களை வயதை காரணம் காட்டி ஓரம் கட்டியது போன்று, முதல்வர் முக ஸ்டாலின் வயதை காரணம் காட்டி 2026ல் மீண்டும் திமுக வெற்றி பெற்றால் முக ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்க முட்டு கட்டை போட திமுகவில் ஓரம் கட்டப்பட்டு வரும் துரைமுருகன், பொன்முடி ஆகியோர் ஈடுபட வாய்ப்புள்ளது என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

