வரும் 2026 சட்டசபை தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்கின்ற ஒரே நோக்கத்திற்காக, தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் அதிமுகவை கொண்டு வந்தார் அமித்ஷா. குறிப்பாக வரும் 2026 சட்டசபை தேர்தலில் பாஜக – திமுக – அதிமுக – தவேக – நாம் தமிழர் என ஐந்து முனைப் போட்டி நிலவும் என்கின்ற பரபரப்பு நீடித்து வந்த நிலையில் ,எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து திமுகவில் வீழ்த்த வேண்டும் என்பதற்காக அமித்ஷா அதிமுக பாஜக கூட்டணி என்கின்ற முடிவை எடுத்தார்.
ஆனால் அதிமுக கட்சிக்குள் பல குழப்பங்கள் நீடித்து வருவதை பார்க்க முடிகிறது, அவர்கள் நோக்கம் திமுகவை வீழ்த்த வேண்டுமா.? அதிமுக வெற்றி பெற வேண்டுமா .? தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைய வேண்டுமா.? தனித்து ஆட்சி அமைய வேண்டுமா, என்கின்ற பல குழப்பங்கள் நீடித்து, எந்த ஒரு தெளிவும் இல்லாமல் அதிமுக தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேட்டிகளை கொடுத்து வருகிறார்கள்.

இப்படி தெளிவில்லாமல் இருக்கும் அதிமுக தலைவர்களையும், தொண்டர்களையும் தெளிவுபடுத்தும் இடத்தில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அமைதியாக இருந்து வருகிறார். அந்த வகையில் இந்த தேர்தலில் பாஜகவிற்கு எந்தவித சேதாரத்தையும் ஏற்படுத்தாத, அதே நேரத்தில் இது வாழ்வா சாவா என்கின்ற தேர்தல் திமுக விற்கும் கிடையாது. ஆனால் அதிமுகவிற்கு இந்த தேர்தல் வாழ்வா.? சாவா.? என்கின்ற ஒரு தேர்தல் என்று தான் சொல்ல வேண்டும்.
தொடர்ந்து பத்து தோல்வியை சந்தித்து பத்து தோல்வி பழனிச்சாமி என்கின்ற பெயரெடுத்த எடப்பாடி பழனிச்சாமி, வரும் 2026 சட்டசபை தேர்தலில் அவர் தலைமையிலான அதிமுக தோல்வியை சந்தித்தால் இத்துடன் அதிமுக கதை முடிந்து விட்டது என்பது அரசியல் எதார்த்தம். அந்த வகையில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்கின்ற ஒரே நோக்கத்தோடு அதிமுகவுடன் பாஜக கூட்டணி சேர்ந்துள்ளது.
திமுகவை வீழ்த்த வேண்டும் என்கின்ற ஒரு காரணமாக இருந்தாலும், இது அதிமுகவிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷமான வாய்ப்பாகத்தான் பார்க்கப்படுகிறது. காரணம் அழிவின் விளிம்பில் இருக்கும் அதிமுகவிற்கு, தற்பொழுது பாஜக உயிர் கொடுத்துள்ளது. ஆனால் இந்த சந்தர்ப்பத்தை எடப்பாடி தலைமையிலான அதிமுக பயன்படுத்திக் கொள்ளுமா.? என்கின்ற கேள்வி தான் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.
கடந்த 2024 சட்டசபை தேர்தலில் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பல இடங்களில் அதிமுகவை மூன்றாம் இடத்திற்கு தள்ளியது குறிப்பிடத்தக்கது, அந்த வகையில் பாஜக வலுவாக இருக்கிறது என்பதை வெளிப்படையாக எடப்பாடி பழனிச்சாமி ஒப்புக்கொண்டு விட்டு, தன்னுடைய ஈகோவை ஓரம் கட்டி விட்டு வெளிப்படையாக வந்து திமுகவை வீழ்த்துவதற்கு வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கான பணியை அவருடைய கட்சி தொண்டர்கள் மத்தியிலும் , மக்கள் மத்தியிலும் தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் எடப்பாடி பழனிச்சாமிக்கு உண்டு.
ஆனால் கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின் பொழுது வாரணாசியில் பிரதமர் மோடி போட்டியிட்ட போது அனைத்து கூட்டணி கட்சி முதல்வரும் வரவேண்டும் என்று அழைப்பு விடுக்கபட்டது. அப்போது எடப்பாடி பழனிச்சாமி தோல்வி அடையக்கூடிய மோடிக்கு நான் ஏன் வரவேண்டும் என்று பேசியதாக ஒரு சர்ச்சை வெடித்தது.
அந்த வகையில் தற்பொழுதும் அதே மனப்பான்மையுடன் எடப்பாடி பழனிச்சாமி இருந்தால் வரும் 2026 சட்டசபை தேர்தல் அவருடைய அரசியலுக்கு முடிவு கட்டிவிடும் என்று எச்சரிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். அந்த வகையில் தற்பொழுது அழிவில் விளிம்பில் இருந்து கொண்டிருக்கும் அதிமுகவுக்கும், எடப்பாடி அரசியல் வாழ்க்கைக்கும், கடைசி வாய்ப்பாக அமிர்தா அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி செய்து இருக்கிறார்.
இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு எடப்பாடி பழனிச்சாமி வரும் 2026 தேர்தலை சந்தித்தால் அவருக்கான வெற்றி வாய்ப்பும் அரசியலில் அடுத்த கட்டத்திற்கு நடுவதற்கான வாய்ப்பு உள்ளது. அல்லது அரசியல் எதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் தொடர்ந்து பத்து தோல்வியை சந்தித்து வரும் பழனிச்சாமி தன்னுடைய அரசியல் நகர்வுகளை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் , வரும் 2026 தேர்தலில் தன் தலையிலே தானே மண்ணை வாரிக் கொண்டு போட்டு விடும் சூழல் உருவாகிவிடும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

